![]() |
அமமுக தேர்தல் அறிக்கை வெளியீடு: என்னென்ன திட்டங்கள் இடம்பெற்றுள்ளன?Posted : சனிக்கிழமை, மார்ச் 13 , 2021 10:16:55 IST
தமிழகத்தில் இனி மதுபான உற்பத்தி ஆலைகளுக்கு இனிமேல் அனுமதி இல்லை என்ற கொள்கை முடிவு எடுக்கப்படும் என அமமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கைஉஇல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டார். 100 பக்கம் கொண்ட தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ள சில முக்கிய அறிவிப்புகள். 1.முதலமைச்சர் பங்கேற்கும் மாவட்ட குறைதீர் கூட்டம் 2.அம்மா உணவகங்கள் சீரமைக்கப்பட்டு, மாநிலம் முழுவதும் விரிவுபடுத்தப்படும் 3.மின் கட்டணம் மாதந்தோறும் செலுத்தும் பழைய முறை 4.தமிழகத்தில் இனி மதுபான உற்பத்தி ஆலைகளுக்கு இனிமேல் அனுமதி இல்லை என்ற கொள்கை முடிவு 5.வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை. இது ’அம்மா பொருளாதார புரட்சித் திட்டம்’ என்ற பெயரில் அழைக்கப்படும் 6.ஆறாம் வகுப்பு முதல் முதுகலை படிக்கும் மாணவிகள் வரை இலை சானிட்டரி நாப்கின் வழங்கப்படும் 7.கியாஸ் சிலிண்டருக்கு ரூ.100 மானியம் உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகள் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
|
|