???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 ராஜஸ்தான், மத்திய பிரதேசத்தில் புயல், மழைக்கு 22 பேர் பலி 0 வாக்களிக்க வந்த முதியவர்கள் 5 பேர் உயிரிழப்பு! 0 பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவு இன்று வெளியாகிறது! 0 பச்சைப்பட்டு உடுத்தி வைகை ஆற்றில் கள்ளழகர் ! 0 தமிழகத்தில் 70.9% வாக்குப் பதிவு! 0 சிதம்பரம் தொகுதியில் தலித் வீடுகளை அடித்து நொறுக்கிய கும்பல்! 0 வேலூர் தேர்தல் ரத்து: கண்ணீர் விட்டு அழுத ஏ.சி.சண்முகம் 0 வரிசையில் நின்று வாக்களித்தார் முதலமைச்சர் பழனிசாமி 0 மூன்றே நாட்களில் ரூ.422 கோடிக்கு மது விற்பனை! 0 மோடி சென்ற ஹெலிகாப்டரை சோதனை செய்த தேர்தல் அதிகாரி பணிநீக்கம் 0 மதுரை சித்திரைத் திருவிழா தேரோட்டம் தொடங்கியது! 0 நடிகர்கள் ரஜினிகாந்த், அஜீத், விஜய் வாக்களித்தனர்! 0 தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு தொடங்கியது! 0 கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பேருந்து கிடைக்காமல் அவதி 0 சென்னை அருகில் 1381 கிலோ தங்கம் பறிமுதல்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

அமமுகவுக்கு குக்கர் சின்னம் கிடைக்குமா? உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை

Posted : ஞாயிற்றுக்கிழமை,   மார்ச்   24 , 2019  22:54:24 IST

மக்களவைத் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நாளையுடன் முடிவடைய உள்ள நிலையில், தினகரனுக்கு குக்கர் சின்னம் கிடைக்குமா என்பது தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்க உள்ளது.
 
தமிழகத்தில் 40 மக்களவைத் தொகுதிகள், 18 சட்டமன்றத் இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு அதற்கான பணிகள் தீவிரமாக  நடைபெற்று வருகிறது.
 
இந்நிலையில் தேர்தலில் போட்டியிடும் அமமுகவின் வேட்பாளர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்டும், சின்னம் கிடைக்காமல் அவர்கள் வேட்பு மனுத் தாக்கல் செய்ய முடியாமல் உள்ளனர். மேலும், தினகரனால் தேர்தல் பரப்புரை மேற்கொள்ள முடியவில்லை.
 
கடந்த சில வாரங்களுக்கு முன்பு அமமுகவுக்கு குக்கர் சின்னம் ஒதுக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் தினகரன் வழக்கு தொடர்ந்தார். மார்ச் 14-ஆம் தேதி வழக்கை விசாரித்த நீதிபதிகள், குக்கர் சின்னம் ஒதுக்குவது குறித்து இன்று பதிலளிக்குமாறு தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டிருந்தது.
 
இந்த வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் நிலையில், தேர்தல் ஆணையம் தனது பதிலை அறிக்கையாக தாக்கல் செய்ய உள்ளது. இதையடுத்து  தினகரனுக்கு குக்கர் சின்னம் கிடைக்குமா?  என்பது தெரிய வரும்.
 
அமமுகவுக்கு குக்கர் சின்னம் இல்லாமல் வேறு சின்னம் ஒதுக்குவது குறித்தும் தேர்தல் ஆணையம் பதிலளிக்கவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...