???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 கொரோனா இன்று- தமிழகம் 1286, சென்னை 1012! 0 அன்னாசிப்பழத்தில் நாட்டுவெடி! கருவுற்ற யானையின் கண்ணீர் மரணம்! 0 கர்நாடகத்தில் ஜூலை 1-ந் தேதி பள்ளிகள் திறப்பு: கல்வித்துறை தகவல் 0 தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு 25 ஆயிரத்தை நெருங்குகிறது! 0 கலைஞர் கருணாநிதியின் 97-ஆவது பிறந்தநாள்: நினைவிடத்தில் மு.க. ஸ்டாலின் மரியாதை 0 13 வயது மகளை நரபலி கொடுத்த தந்தை கைது! 0 சலூன்கள், பியூட்டி பார்லர் செல்ல ஆதார் அட்டை கட்டாயம்: தமிழக அரசு 0 பத்தாம் வகுப்பு தேர்வை தள்ளி வைக்கkகோரி ஆசிரியர்கள் சங்கம் வழக்கு 0 சென்னையில் பைக்கில் 2 பேர் சென்றால் ரூ.500 அபராதம் 0 பொருளாதாரத்தை மோசமாக கையாளுகிறார் மோடி: ராகுல் காந்தி 0 இந்தியா மீண்டும் பொருளாதார வளர்ச்சியை எட்டும்: பிரதமர் மோடி உறுதி 0 தமிழகத்தில் 2-வது நாளாக ஆயிரத்தை கடந்த கொரோனா தொற்று 0 வன்முறையை நிறுத்தாவிட்டால் ராணுவத்தை பயன்படுத்துவேன்: டிரம்ப் எச்சரிக்கை 0 ஊரடங்கு காலத்தை வீணடிக்காமல் கொரோனாவை கட்டுப்படுத்த தீவிர முயற்சி வேண்டும்: மு.க.ஸ்டாலின் 0 தனியார் மருத்துவமனைகளில் கொரோனா பரிசோதனை கட்டணம் ரூ.3 ஆயிரமாக குறைப்பு
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

'மக்களின் கவனத்தை திசைத்திருப்புகிற முயற்சியில் அமித்ஷா' - கே.எஸ்.அழகிரி

Posted : புதன்கிழமை,   செப்டம்பர்   18 , 2019  06:54:48 IST


Andhimazhai Image
மதம், மொழி பிரச்சினைகளை எழுப்பி, மக்களின் கவனத்தை திசைத்திருப்புகிற முயற்சியில் அமித்ஷா ஈடுபட்டிருக்கிறார் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி குற்றம்சாட்டியுள்ளார்.
 
இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, "சமீபகாலமாக இந்திய மக்களின் ஒற்றுமைக்கு உலை வைக்கிற வகையில் பா.ஜ.க.வின் தேசியத் தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித்ஷா பேசி வருகிறார். இந்தியாவின் ஆட்சி மொழி இந்தி மட்டுமே என்று பேசி இந்தி பேசாத மக்களிடையே அச்சத்தையும், பீதியையும் ஏற்படுத்தியிருக்கிறார். அவரது நோக்கம் நிறைவேறுகிறதோ, இல்லையோ, இந்தி பேசும் மக்களை மொழியின் அடிப்படையில் பா.ஜ.க.வுக்கு ஆதரவு திரட்ட முயற்சிக்கிறார். 
 
கடந்த 70 ஆண்டு அனுபவத்தில் பல கட்சி ஜனநாயகம் தோற்று விட்டது, இதனால் நாட்டுக்கு எந்த பலனும் ஏற்படவில்லை என்று உண்மைக்கு புறம்பான ஆதாரமற்ற கருத்தை அமித்ஷா கூறியிருக்கிறார். இதன்மூலம் பாராளுமன்ற ஜனநாயகத்தை குழிதோண்டி புதைத்துவிட்டு, ஹிட்லர், முசோலினி பாதையில் சர்வாதிகார ஆட்சி முறையை கொண்டு வருகிற நோக்கத்தில் அவரது பதுங்கு திட்டத்தை வெளிப்படுத்தியிருக்கிறார். இதைவிட இந்தியாவுக்கு பேரழிவு வேறு எதுவும் இருக்க முடியாது.
 
பல கட்சி ஆட்சி முறை தோற்று விட்டதாக அமித்ஷா மேலும் கூறுகிறார். இதற்கு என்ன அடிப்படை என்பதை அவர் விரிவாகக் கூறவில்லை. கடந்த 2004 முதல் 2014 வரை நடைபெற்ற பல கட்சிகள் இணைந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் நிகழ்த்திய சாதனைகளை மூடிமறைத்து அமித்ஷா பேசியிருக்கிறார். அன்று நடைபெற்ற பல கட்சிகள் அடங்கிய காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி ஆட்சியில் தான் சுதந்திர இந்தியா காணாத வகையில் 2005 முதல் மூன்று ஆண்டுகள் 9 சதவீதத்திற்கு மேலாக தொடர்ந்து பொருளாதார வளர்ச்சி ஏற்பட்டது.
 
இந்தியாவின் பொருளாதாரத்தை 2024 ஆம் ஆண்டுக்குள் ரூபாய் 350 லட்சம் கோடியாக உயர்த்தப் போவதாக அமித்ஷா கூறுகிறார். இந்தளவுக்கு நம்பிக்கையோடு இருக்கிற அமித்ஷா ரிசர்வ் வங்கியிடம் ரூபாய் 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி நிதியுதவியை ஏன் பெற்றார் என்பதை விளக்க வேண்டும்.
 
எனவே, அனைத்து துறைகளிலும் தோல்வி ஏற்பட்டு பொருளாதார மந்தநிலை காரணமாக மக்கள் கடுமையான துன்பத்தை எதிர்கொண்டிருக்கிற போது, மதம், மொழி பிரச்சினைகளை எழுப்பி, மக்களின் கவனத்தை திசைத்திருப்புகிற முயற்சியில் அமித்ஷா ஈடுபட்டிருக்கிறார். இவரது முயற்சியை முறியடிக்கிற வகையில் ஜனநாயக, மதச்சார்பற்ற சக்திகள் கடுமையான பிரச்சாரத்தின் மூலம் மக்களிடையே வகுப்புவாத சக்திகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது காலத்தின் கட்டாயம் என தெரிவிக்க விரும்புகிறேன்". இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...