???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 சாவர்க்கர் ஒரு சுதந்திர போராட்ட வீரர்: அபிஷேக் சிங்வி புகழாரம்! 0 டெங்கு: உள்ளாட்சி, சுகாதாரத்துறைக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்! 0 தடை செய்யப்பட்ட அமைப்புக்கு ஆதரவாக பேசுவது குற்றம் அல்ல: வைகோ 0 நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 18ம் தேதி கூடுகிறது! 0 அனைத்து துறைகளிலும் வேலைவாய்ப்புகள் குறைந்து வருகின்றன: பிரகாஷ் காரத் 0 மஹாராஷ்டிரா, ஹரியானா சட்டப்பேரவைத் தேர்தல்: பாஜகவுக்கு வெற்றி வாய்ப்பு! 0 தேசிய குற்ற ஆவண காப்பக அறிக்கை: குற்றச் சம்பவங்களில் தமிழகம் 6-வது இடம் 0 மும்மொழிக் கொள்கை மறைமுகமான சமஸ்கிருத திணிப்பு: ராமதாஸ் கண்டனம் 0 கனமழை: சேலம், ராமநாதபுரம், நீலகிரி மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை 0 காந்தி பிறந்த நாள்: பாலிவுட் நட்சத்திரங்களுடன் கலந்துரையாடிய பிரதமர்! 0 வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு: நாடு தழுவிய வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு! 0 பணப்புழக்கம் குறைந்ததே தீபாவளி விற்பனை குறையக் காரணம்: வணிகர் சங்கம் 0 பொறுப்பு அதிகமாகியுள்ளது: டாக்டர் பட்டத்துக்குப் பின் முதலமைச்சர் பேச்சு! 0 ராமதாஸின் கேள்விகளுக்கு விடையளிக்க மு.க.ஸ்டாலின் மறுப்பது ஏன்? ஜி.கே.மணி கேள்வி 0 சென்னை: அதிகாலையில் கனமழை!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

வடகிழக்கு மாநிலங்களின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்படாது: அமித்ஷா

Posted : ஞாயிற்றுக்கிழமை,   செப்டம்பர்   08 , 2019  23:47:10 IST

காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய சட்டப்பிரிவு 370-வை குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெற்று மத்திய அரசு நீக்கியது. அதனைத் தொடர்ந்து வடகிழக்கு மாநிலங்களுக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 371-வது பிரிவும் ரத்து செய்யப்படும் என்று வதந்திகள் பரவிவந்தன. இந்த நிலையில், 68-வது வடகிழக்கு மாநில கவுன்சில் கூட்டத்தில் அமித்ஷா கலந்துகொண்டு பேசினார்.

அதில், பேசிய அவர், ‘வடகிழக்கு மாநிலங்களுக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 371-வது பிரிவில் மத்திய அரசு திருத்தம் கொண்டுவராது. காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370-வது பிரிவு இயல்பிலேயே தற்காலிக தன்மையைக் கொண்டிருந்தது. ஆனால், 371-வது அத்தகையது அல்ல. 370-வது சட்டப் பிரிவுக்கும், 371-வது பிரிவுக்கும் மிகப் பெரிய வித்தியாசம் உள்ளது.

ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பிறகு, வடகிழக்கு மாநிலங்களுக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 371-வது பிரிவு ரத்து செய்யப்படும் என்று தவறான செய்திகள் பரவுகின்றன. 371-வது பிரிவு ரத்து செய்யப்படாது என்று நான், நாடாளுமன்றத்திலேயே தெளிவுபடுத்தியுள்ளேன். இன்று, வடகிழக்கு மாநில முதல்வர்கள் முன்னிலையிலும் அந்த உறுதி அளித்துக்கொள்கிறேன்’ என்று தெரிவித்தார்.
 



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...