![]() |
சட்டவிரோதமாக குடியேறியவர்கள் 2024-க்குள் வெளியேற்றப்படுவார்கள்: அமித்ஷாPosted : திங்கட்கிழமை, டிசம்பர் 02 , 2019 21:47:16 IST
ஜார்கண்ட் மாநிலம் சக்ரதார்பூரில் நடைபெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் பேசிய அவர், இந்தியாவிற்குள் சட்டவிரோதமாகக் குடியேறியவர்களை வெளியேற்ற முடியாது என ராகுல் காந்தி கூறிவருவதாகத் தெரிவித்தார். சட்டவிரோத குடியேற்றிகளை வெளியேற்றினால் அவர்கள் எங்கே போவார்கள் என்றும் வாழ்வாதாரத்திற்கு என்ன செய்வார்கள் என்றும் ராகுல் காந்தி கேள்வியெழுப்பி வருவதாகவும் தெரிவித்தார். ஆனால், நாடு முழுவதும் 2024-ம் ஆண்டுக்குள் தேசிய குடிமக்கள் பதிவேடு தயாரிக்கப்படும் என்றும் சட்டவிரோதமாக குடியேறிய அனைவரும் அடுத்த மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக நாட்டைவிட்டு வெளியேற்றப்படுவார்கள் என்றும் அமித்ஷா உறுதிபடக் கூறினார்.
|
|