???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 கொரோனா இன்று: தமிழகம் 1438; சென்னை1116! 0 ஜெயமோகன் நடத்திய சிறுகதைத்திருவிழா! வானவெளியில் மாயக் கம்பளப் பயணம்! பகுதி-3 0 ஜெயமோகன் நடத்திய சிறுகதைத்திருவிழா! வானவெளியில் மாயக் கம்பளப் பயணம்! பகுதி-2 0 ஜெயமோகன் நடத்திய சிறுகதைத்திருவிழா! வானவெளியில் மாயக் கம்பளப் பயணம்! பகுதி-1 0 முதலீடு செய்ய மோட்டார் வாகன உற்பத்தி நிறுவனங்களுக்கு முதலமைச்சர் அழைப்பு 0 இந்தியாவில் கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 6 ஆயிரத்தை தாண்டியது 0 தெலுங்கானாவில் 32 மருத்துவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி 0 கடுமையான ஊரடங்கு பொருளாதாரத்தை அழித்து விட்டது: ராஜீவ் பஜாஜ் கருத்து 0 திமுக எம்.எல்.ஏ. அன்பழகன் உடல்நிலையில் முன்னேற்றம் 0 சென்னையில் 5 மண்டலங்களை காப்பதில் முழு சிந்தனை வேண்டும்: மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல் 0 மத்திய குழு தமிழகம் வருகை: சென்னை உள்பட 7 மாவட்டங்களில் ஆய்வு 0 கொரோனா இன்று- தமிழகம் 1384, சென்னை 1072! 0 தனியார் மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை கட்டணம் எவ்வளவு? 0 ஜூனியர் என் டி ஆரைப் பிடிக்காது என்று சொல்வதா? நடிகை நிலாவுக்கு மிரட்டல்! 0 'மாஸ்டர்' பட வெளியீட்டை ஒத்திவைக்க வேண்டும்!! - பட அதிபர் கேயார் வேண்டுகோள்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

டெல்லி வன்முறை முன்கூட்டியே திட்டமிட்ட சதி: அமித்ஷா

Posted : புதன்கிழமை,   மார்ச்   11 , 2020  22:29:44 IST

ஹோலி விடுமுறைக்குப் பிறகு, நாடாளுமன்றம் நேற்று கூடிய நிலையில், டெல்லி வன்முறை குறித்து மக்களவையில் விவாதம் நடத்தப்பட்டது. அப்போது பேசிய மக்களவை காங்கிரஸ் தலைவர் அதிர் ரஞ்சன் சவுத்ரி, டெல்லி பற்றி எரிந்துகொண்டிருந்தபோது, உள்துறை அமைச்சர் அமித் ஷா என்ன செய்துகொண்டிருந்தார் என்று கேள்வி எழுப்பினார்.

இதனைத் தொடர்ந்து, விவாதங்களுக்கு உள்துறை அமைச்சர் அமித் ஷா பதிலளித்தார். ஆனால், இதனை கேட்காமல் காங்கிரஸ் மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். எனினும், தனது பதிலுரையைத் தொடர்ந்த அமித்ஷா, டெல்லியில் ஏற்பட்ட வன்முறை 36 மணிநேரங்களில் கட்டுப்படுத்தப்பட்டதாகவும், இதனை மற்ற பகுதிகளுக்கு பரவாமல் தடுத்த காவல்துறைக்கு பாராட்டுக்கள் என்றும் கூறினார்.

வன்முறையில் 52 பேர் உயிரிழந்ததாகவும், இவர்களை எதிர்க்கட்சிகளைப் போன்று, இந்துக்கள் அல்லது முஸ்லிம்கள் என்று பாகுபடுத்திப் பார்க்க விரும்பவில்லை என்று அவர் கூறினார்.

இதுவரை 700-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவுசெய்யப்பட்டு, 2647 பேர் கைதுசெய்யப்பட்டு அல்லது விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். போலீஸார் நடத்திய முதல்கட்ட விசாரணையில், அண்டை மாநிலமான உத்தரப்பிரதேசத்திலிருந்து 300 பேர் டெல்லிக்கு வந்தது தெரியவந்துள்ளதாக அமித் ஷா குறிப்பிட்டார். எனவே, டெல்லி வன்முறை திட்டமிட்ட சதி என்று அவர் குற்றம்சாட்டினார்.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...