![]() |
நெல்லை வீரத்தம்பதிக்கு அமிதாப் பச்சன் பாராட்டு !Posted : செவ்வாய்க்கிழமை, ஆகஸ்ட் 13 , 2019 19:07:25 IST
திருநெல்வேலி மாவட்டம் கடையம் கல்யாணிபுரம் பகுதியைச் சேர்ந்த சண்முகவேல், தனது பண்ணை வீட்டின் வெளியே நேற்று உட்கார்ந்திருந்தார். அப்போது, அங்கு வந்த முகமூடி கொள்ளையர்களில் ஒருவர், சண்முகவேலின் கழுத்தை துணியால் இறுக்கி கொல்ல முயன்றார். அவர் கூச்சலிட்டதை அடுத்து, வெளியே வந்த அவரது மனைவி செந்தாமரை, பிளாஸ்டிக் நாற்காலிகள் மற்றும் செருப்புகளைக் கொண்டு கொள்ளையர்கள் மீது தாக்குதல் நடத்தினார். சுதாரித்து எழுந்த முதியவர், தனது மனைவியுடன் சேர்ந்து அரிவாளை காட்டி மிரட்டிய கொள்ளையர்களை தாக்கத் தொடங்கினார். அச்சம் இன்றி கணவன் - மனைவி இருவரும் கையில் கிடைத்த பொருட்களை எல்லாம், தூக்கி கொள்ளையர்கள் மீது வீசி, அவர்களை அங்கிருந்து ஓட வைத்தனர்.
|
|