???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 முதலமைச்சர் பழனிசாமி மருத்துவ நிபுணர்கள் குழுவுடன் இன்று ஆலோசனை 0 விமானம், ரயில் நிலையங்களில் டாக்சி, ஆட்டோக்களுக்கு அனுமதி 0 5 வயது சிறுவன் தாயைக் காண தனி ஆளாக விமானப் பயணம்! 0 இந்தியா உள்பட கூடுதலாக 11 நாட்டு மக்களுக்கு ஜப்பானில் நுழைய தடை 0 நாடாளுமன்ற நிலைக்குழு கூட்டங்கள் நடத்த ஏற்பாடு: வெங்கையா நாயுடு, ஓம் பிர்லா ஆலோசனை 0 கால்வாய் தூர்வாரும் பணிகளை போர்க்கால அடிப்படையில் நிறைவேற்ற வேண்டும்: மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல் 0 விமான போக்குவரத்து தொடங்கியது: முதல் நாளில் 630 விமானங்கள் ரத்து 0 தொழிலாளர் நல சட்டத்தில் சீர்திருத்தம் மட்டுமே செய்யப்படுகிறது: நிதி ஆயோக் துணைத்தலைவர் 0 தமிழகத்தில் 17,000ஐ கடந்த கொரோனா பாதிப்பு: மேலும் 805 பேர் பாதிப்பு 0 தமிழகம்-புதுவையில் ரம்ஜான் கொண்டாட்டம்: சமூக விலகலைக் கடைப்பிடித்து தொழுகை! 0 வைரஸ் எங்கள் ஆய்வுக்கூடத்தில் இருந்து கசிந்ததாக கூறுவது கட்டுக்கதை: உகான் வைராலஜி நிறுவனம் 0 தமிழகத்தில் இலவச மின்சார திட்டம் தொடரும் அமைச்சர் பி.தங்கமணி தகவல் 0 உலகில் அமைதி நிலவட்டும், அன்பு தழைக்கட்டும், மகிழ்ச்சி பெருகட்டும்: முதலமைச்சர் ரம்ஜான் வாழ்த்து! 0 ரத்து செய்யப்பட்ட விமான சேவை மீண்டும் தொடங்கியது 0 ஒரே நாளில் 7 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

அமித்ஷா வாகனத்தில் கல்வீச்சு: போலீஸ் தடியடி!

Posted : புதன்கிழமை,   மே   15 , 2019  00:44:14 IST

மேற்குவங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க இடையே கடுமையாக போட்டி நிலவிவருகிறது. ஒவ்வொரு கட்டத் தேர்தலின்போதும், மேற்குவங்கத்தில் வன்முறை நிகழ்ந்துவருகிறது. தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடும் பிரதமர் மோடியும் மேற்கு வங்காளம் மாநில முதல் மந்திரி பானர்ஜியும் காரசாரமாக ஒருவரையொருவர் தாக்கி பேசி வருகின்றனர்.

இந்நிலையில், இறுதிக்கட்ட பிரசாரத்துக்காக ஜாதவ்பூர் பகுதியில் பா.ஜ.க தலைவர் அமித் ஷாவின் மிக பிரமாண்டமான பேரணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த பேரணிக்கு அனுமதி அளிக்க போலீசார் மறுத்து விட்டனர். இந்த பேரணியில் பங்கேற்பதற்காக அமித் ஷா வரும் ஹெலிகாப்டர் தரையிறங்கவும் அனுமதி மறுக்கப்பட்டதால் அம்மாநில பா.ஜ.கவினர் ஆத்திரமடைந்தனர்.

இந்த பேரணி ரத்தான நிலையில் ஜாய்நகர் பகுதியில் நடைபெற்ற மற்றொரு பிரசாரக் கூட்டத்தில் நேற்று மம்தா பானர்ஜியை அமித் ஷா கடுமையாக தாக்கி பேசினார்.

அந்தக் கூட்டத்தில் பேசிய அமித்ஷா, ‘மம்தா பானர்ஜியின் மருமகன் போட்டியிடும் தொகுதிக்கு நான் போனால் அவர் தோற்பது உறுதி என்பதால் அங்கு என்னுடைய நிகழ்ச்சிக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. எனது பிரசாரத்திற்கு மட்டும்தான் மம்தா பானர்ஜி தடை விதிக்க முடியும். ஆனால், பா.ஜ.கவின் வெற்றியை அவரால் தடுத்து நிறுத்திவிட முடியாது.

மத்திய அரசு கொண்டுவந்த பல திட்டங்களின் பலன்கள் இங்குள்ள மக்களை வந்து சேராத வகையில் மம்தா பானர்ஜியின் அரசு தடைக்கல்லாக நின்று தடுத்து விட்டது. அந்த திட்டங்களின் மூலம் இங்குள்ள மக்களிடையே பிரதமர் மோடி பிரபலமாகி விடக்கூடாது என்ற நோக்கத்தில் மம்தா பானர்ஜி இந்த திட்டங்களை எல்லாம் எதிர்த்து வருகிறார்.  நாளை வரை நான் கொல்கத்தாவில் இருப்பேன். முடிந்தால், துணிச்சல் இருந்தால் என்னை கைது செய்து பாருங்கள் என்று மம்தாவுக்கு நான் பகிரங்கமாக சவால் விடுகிறேன்’என அமித் ஷா பேசினார்.

இந்நிலையில், கொல்கத்தாவில் இன்று மாலை நடைபெற்ற பா.ஜ.க பேரணியில் அமித் ஷா பங்கேற்றார். கொல்கத்தா பல்கலைக்கழகத்தை கடந்து சுமார் 7 மணியளவில் கல்லூரி சாலைக்குள் பேரணி நுழைந்தபோது அமித் ஷா வந்த பிரசார வாகனத்தின் மீது சில கம்புகள் வீசப்பட்டன. அமித்ஷாவின் வருகைக்கு எதிர்ப்பு மாணவர்கள் அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்த போராட்டத்தில் கம்யூனிஸ்ட், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மாணவர்கள் அமைப்புகள் ஈடுபட்டனர். அமித் ஷா வாகனத்தின் கற்கள் வீசித் தாக்குதல் நடத்தப்பட்டது. மேலும், அமித்ஷா வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கோபேக் அமித்ஷா என்ற பதாகைகள் காட்டப்பட்டது. கருப்புக் கொடியும் காட்டப்பட்டது. இதனால், அங்கு பதற்றம் ஏற்பட்டது.

பேரணியில் வந்தவர்களுக்கும் வேறொரு தரப்பினருக்கும் இடையில் மோதல் வெடித்தது. சாலையோரத்தில் இருந்த கட் அவுட்டுகள் அடித்து நாசப்படுத்தப்பட்டன. போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.

சில இடங்களில் தீவைப்பு சம்பவங்களும் நடைபெற்றதால் கொல்கத்தாவில் பதற்றமான சூழல் உருவானது. அதனையடுத்து, கொல்கத்தா முழுவதும் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
 click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...