???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 சின்னத்திரை படப்பிடிப்பு மீண்டும் தொடக்கம் 0 ஓ.பி.சி. கிரிமிலேயர் பிரிவை முடிவு செய்வதில் தற்போதைய நிலை தொடரவேண்டும்: முதலமைச்சர் கடிதம் 0 சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தில் கூட்டாட்சி, மதச்சார்பின்மை பாடங்கள் நீக்கம்! 0 அரசுப் பள்ளி மாணவர்களுக்கும் ஆன்லைன் வகுப்புகள் 0 தனபாலுக்கு நோட்டீஸ் அனுப்ப உச்ச நீதிமன்றம் உத்தரவு 0 கொரோனா இன்று- தமிழகம் 3756 சென்னை 1261 0 கிரீமி லேயரை கணக்கிட சம்பளத்தை கருத்தில் கொள்ளக்கூடாது- ஸ்டாலின் பிரதமருக்கு கடிதம்! 0 மின் துறை அமைச்சர் தங்கமணிக்கு கொரோனா! 0 எடப்பாடி பழனிசாமி இரவு, பகல் பாராமல் போராடி வருகிறார்: அமைச்சர் வேலுமணி 0 சாத்தான்குளம் தந்தை, மகன் மரண வழக்கை சி.பி.ஐ.விசாரணைக்கு ஏற்றது! 0 என்எல்சிக்கு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் 0 சிபிஎஸ்இ பாடத்திட்டம் 30 சதவீதம் குறைப்பு: மத்திய அரசு அறிவிப்பு 0 பிரேசில் அதிபர் ஜேர் பொல்சனாரோவுக்கு கொரோனா தொற்று உறுதி 0 இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை மிக குறைவு: மத்திய அரசு 0 திருப்பதி கோயிலில் 60 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

கொரோனா வைரஸ்: முகேஷ் அம்பானிக்கு 30 ஆயிரம் கோடி இழப்பு!

Posted : சனிக்கிழமை,   பிப்ரவரி   29 , 2020  03:23:44 IST


Andhimazhai Image
கொரோனா வைரஸ் பாதிப்பால் பங்குச்சந்தையில் ஏற்பட்ட வீழ்ச்சியால் இந்தியாவின்  டாப் பணக்காரர்கள் இழப்பை சந்தித்துள்ளார்கள்.
 
 
 ரிலையன்ஸ் நிறுவனத்தின்  தலைவர் முகேஷ் அம்பானி இந்தியா மற்றும் ஆசியாவில் டாப் பணக்காரர். இவர் சுமார்  முப்பதாயிரம் கோடி ரூபாய் அளவுக்கு இழப்பை சந்தித்திருக்கலாம் என்று கணக்கிடப்பட்டுள்ளது. ஆதித்ய பிர்லா குழுமத்தின் தலைவர் குமார மங்கலம் பிர்லா சுமார்  6,500 கோடியும் ஐடி துறை பணக்காரர் அசிம் பிரேம்ஜி 6,200 கோடியும்   தொழிலதிபர் கெளதம் அதானி 3,500  கோடியும்  இழந்துள்ளனர்.  உதய் கோட்டாக், திலிப் சங்வி ( சன் பார்மா) ஆகியவர்களும் பெரும் அளவு இழப்பை சந்தித்துள்ளனர்.
 
 
கடந்த இரண்டுவாரங்களில் உள்நாட்டு பங்குச் சந்தைக் குறியீடுகள் வீழ்ந்ததை அடுத்து இவர்கள் இழப்பை சந்தித்துள்ளனர். பெரு நிறுவனங்கள் என்று எடுத்துக்கொண்டால், இந்த வீழ்ச்சியால் ரிலையன்ஸ் நிறுவனம் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. இதன் சந்தை மதிப்பு சுமார் 53000 கோடி வீழ்ந்துள்ளது. டாடா குழுமம் 41930 கோடியும், அதானி 27,100 கோடியும் ஆதிய பிர்லா 17 500 கோடியும் பிரிட்டானியா போன்ற நிறுவங்களை கைவசம் வைத்துள்ள வாடியா 3300 கோடிகளையும் இழந்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
 
 
கொரானா வைரஸ் தாக்குதலால் பல தொழில்துறைகள் செயல்படுவது கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே சந்தை மேலும் வீழலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மொத்தமாக  பங்குச் சந்தையில் 11.52 லட்சம் கோடி ரூபாயை முதலீட்டாளர்கள் இழந்துள்ளனர்.


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...