???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷமிட்ட மாணவி கைது 0 இந்தியர் எட்டு பேருக்கு கொரோனா வைரஸ் தாக்குதல்! 0 காவலர் தேர்வுக்கு இடைக்கால உயர்நீதிமன்றம் தடை 0 மக்கள் நீதி மய்யம் கட்சியின் 3-ம் ஆண்டு விழா: கமல் நிகழ்ச்சிகள் ரத்து 0 நீதித்துறை மீது நம்பிக்கை குறைந்துவிட்டது: உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி வேதனை 0 எரிமலையின் ஓரத்தில் மோடி மகுடி வாசிக்கிறார்: வைகோ 0 மயிரிழையில் உயிர் தப்பினேன்: கமல்ஹாசன் 0 20 பேர் உயிரிழந்த திருப்பூர் விபத்து: பிரதமர் இரங்கல் 0 லைகா நிறுவனம் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு 0 '7 பேர் விடுதலை தொடர்பாக கவர்னர் நல்ல முடிவை எடுப்பார்': முதல்வர் பழனிசாமி நம்பிக்கை 0 'குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சையை மேற்கொள்ள ஆண்கள் முன்வர வேண்டும்': அமைச்சர் 0 என்னை ஒழித்துகட்ட முயற்சி: நடிகை சனம் ஷெட்டி மீது தர்ஷன் புகார் 0 திருப்பூரில் லாரி - பேருந்து மோதி விபத்து: 13 பேர் பலி 0 இந்தியன்-2 படப்பிடிப்பில் விபத்து: 3 பேர் உயிரிழப்பு 0 பா.ஜ.க எம்.எல்.ஏ மீது கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கு
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

அமேசான் நிறுவன உரிமையாளர் போனை உளவு பார்த்தாரா சவுதி இளவரசர்?

Posted : புதன்கிழமை,   ஜனவரி   22 , 2020  21:00:32 IST

அமேசான் நிறுவன உரிமையாளர் ஜெஃப் பெசோஸின் மொபைல் போனை சவுதி அரேபிய இளவரசர் முகமது பின் சல்மான் உளவு பார்த்ததாக கார்டியன் நாளிதழில் செய்திகள் வெளியாகியுள்ளது. இது உலக அரங்கில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

உலகின் மிகப் பெரிய பணக்காரராக அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் திகழ்ந்துவருகிறார். அவர் குறித்து கார்டியன் வெளியிட்ட செய்தியில், ‘ஜெஃப் பெசோஸுக்கும் முகமது பின் சல்மானுக்கும் இடையிலான நட்பு அடிப்படையிலான வாட்ஸ்அப் மெசேஜ் பகிர்வின் போது, வைரஸ் உள்ள வீடியோ ஒன்றை பெசோஸுக்கு முகமது பின் சல்மான் அனுப்பியுள்ளார். பின்னர், ஒரு மணி நேரத்தில் பெசோஸின் போனிலிருந்து ஏராளமான தகவல்கள் எடுக்கப்பட்டுள்ளன’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் அந்தச் செய்தியில், ’பெசோஸின் பாதுகாப்பு பொறுப்பாளர் கூறும்போது, சவுதி அரேபியா அரசு பெசோஸின் மொபைல் போனை பயன்படுத்தி, அதிலிருந்து தகவல்களை எடுத்துள்ளது. சவுதி அரேபியா பெசோஸின் போனில் ஊடுருவியுள்ளது என்று எங்களுடைய விசாரணை அதிகாரிகள் மற்றும் பல வல்லுநர்கள் உச்சகட்ட நம்பிக்கையுடன் உறுதிபடுத்தியுள்ளனர்’ என்று தெரிவித்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

சவுதி அரேபிய அரசு இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளது.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...