???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 நான் பேசியதில் எந்த தவறும் இல்லை: கருணாஸ் கருத்து! 0 கீழடியில் 2000 ஆண்டுகளுக்கு முந்தைய எலும்புகள் கண்டுபிடிப்பு 0 கன்னியாஸ்திரி பாலியல் புகார் வழக்கில் பேராயர் ஃபிராங்கோ கைது 0 தேசிய பசுமை தீர்ப்பாயம் அமைத்த குழு ஸ்டெர்லைட் ஆலையில் ஆய்வு! 0 பங்குசந்தை வர்த்தகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு வீழ்ச்சி 0 அனில் அம்பானி நிறுவனத்தை மட்டுமே இந்தியா சிபாரிசு செய்தது: ஃபிரான்ஸ் முன்னாள் அதிபர் 0 ஜல்லிக்கட்டு கலவரம் விசாரணை: 3 மாதங்களில் முடிக்க நீதிமன்றம் உத்தரவு 0 முத்தலாக் சட்டம் இஸ்லாமிய பெண்களின் சிக்கலை தீர்க்காது: ராமதாஸ் 0 பாளையங்கோட்டையில் 14 நாட்களுக்கு மின்தடை அறிவிப்பு 0 ஜெயலலிதா-சசிகலா வாழ்க்கையை மையப்படுத்தி உருவாகிறது `தி அயர்ன் லேடி’! 0 'காற்றாலை மின்சார ஊழல்: அமைச்சர் தங்கமணி பதவி விலகுவாரா?' மு.க.ஸ்டாலின் கேள்வி 0 பெண்களை இழிவுபடுத்தி பேசியதாக ஹெச்.ராஜா மீது பல்வேறு இடங்களில் வழக்குப்பதிவு 0 7 பேர் விடுதலையில் ஆளுநர் நடவடிக்கை எடுக்காதது வேதனை அளிக்கிறது: ராமதாஸ் 0 லஞ்ச வழக்கில் கைதான ஆர்.டி.ஓ. வங்கி லாக்கரில் 8.7 கிலோ தங்கம்! 0 திமுக-காங்கிரஸை கண்டித்து தமிழகமெங்கும் கண்டன பொதுக்கூட்டம்: அதிமுக அறிவிப்பு
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

காவிரி விவகாரத்தில் வேறுபாடுகளை மறந்து ஒன்றுபட வேண்டும்: முதலமைச்சர் கோரிக்கை

Posted : வியாழக்கிழமை,   பிப்ரவரி   22 , 2018  08:16:30 IST

காவிரி விவகாரத்தில் அனைத்து கட்சிகளும் கருத்துவேறுபாடுகளை மறந்து ஒன்றுபட வேண்டும் என தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேட்டு கொண்டுள்ளார்.
 
தலைமை செயலகத்தில் நடைபெற்ற   அனைத்துக்கட்சிக்கூட்டத்தில் பேசிய அவர், ஆக்கப்பூர்வமாக தெரிவிக்கப்படும் கருத்துக்கள் குறித்து சட்டவல்லுநர்களுடன் ஆலோசனை மேற்கொள்ளப்படும் என உறுதி அளித்தார்.
 
காவிரி பிரச்னை ஒட்டுமொத்த தமிழர்களின் உணர்வுகளுடன் பின்னி பிணைந்துள்ளதாகவும், இதற்காக அனைத்துக்கட்சிகள் ஓரணியில் திரள வேண்டும் எனவும்  அவர் கேட்டு கொண்டார்.
 
காவிரி விவகாரத்தில் தமிழக அரசு மேற்கொண்ட நடவடிக்கை குறித்து பட்டியலிட்டு பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தமிழக அரசு மேற்கொண்ட சட்டநடவடிக்கைகள் குறித்தும் எடுத்துரைத்தார். 
 
கூட்டத்தில் பேசிய துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம், உச்சநீதிமன்ற இறுதி தீர்ப்பில் அளிக்கப்பட்ட தண்ணீரை பெற உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார். உச்சநீதிமன்றம் குறைத்துள்ள 14.75 டிஎம்சி தண்ணீரை பெறுவது தொடர்பாக, சட்ட வல்லுநர்களுடன் கலந்துரையாடி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பன்னீர் செல்வம் குறிப்பிட்டார்.
 
தமிழகத்தின் பொது நலன்களைக் காப்பதில் இந்த ஒற்றுமை உணர்வு தளராமல் தொடர வேண்டும் என கேட்டு கொண்டார். அனைத்துக் கட்சி தலைவர்களையும்  முதல்வர் அழைத்து சென்று பிரதமரைச் சந்தித்து, முதலில் "காவேரி மேலாண்மை வாரியத்தை அமைத்துக் கொடுங்கள்" என்று வலியுறுத்த வேண்டும் என கேட்டு கொண்ட ஸ்டாலின்.  "நீர்பாசனத்தை" பொதுப்பணித் துறையிலிருந்து பிரித்து, அதற்குத் தனி அமைச்சகம் உருவாக்க வேண்டும் எனவும் கேட்டு கொண்டார். 
 
இதனை தொடர்ந்து பேசிய பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க, மத்திய அரசு விரைவில் ஒப்புதல் அளிக்க உள்ளதாக குறிப்பிட்டார். எதிர்வரும் அமைச்சரவை கூட்டத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க ஒப்புதல் அளிக்க வாய்ப்பு உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
 
சென்னை வரும் பிரதமரை, அனைத்துக்கட்சி தலைவர்கள் சந்திக்க ஏற்பாடு செய்து, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க அழுத்தம் தர வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் வலியுறுத்தி உள்ளார். சட்ட ரீதியான நடவடிக்கைக்காக மீண்டும் ஒருமுறை அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் எனவும் அவர் கேட்டு கொண்டுள்ளார். 


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...