![]() |
இலங்கை: 4 மணிக்கு கட்சித் தலைவர்கள் அவசரக் கூட்டம்Posted : சனிக்கிழமை, ஜுலை 09 , 2022 15:07:44 IST
இலங்கையில் உக்கிரமடைந்துள்ள மக்கள் போராட்டத்தின் விளைவாக, அந்நாட்டின் அரசுத் தலைவர் மாளிகை, அவருடைய செயலகம் இரண்டும் ஆர்ப்பாட்டக்காரர்கள் வசமாகிவிட்டன. காவல் துறையினர், இராணுவத்தினரால் நிலைமையைக் கட்டுப்படுத்த இயலாத நிலையில், இன்று மாலை 4 மணிக்கு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற சபாநாயகர் மகிந்த யாப்ப அபேயவர்த்தன சார்பில் கட்சிகளின் தலைவர்களிடம் ஆலோசனை கேட்பதற்காக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சரும் மலையகத் தமிழர் தலைவர்களில் ஒருவருமான மனோ கணேசன் உறுதிப்படுத்தியுள்ளார்.
முன்னதாக, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இப்படியான ஒரு கூட்டத்தைக் கூட்டுமாறும் நாடாளுமன்றத்தைக் கூட்டும்படியும் சபாநாயகரிடம் கேட்டுக்கொண்டார்.
இதனிடையே, ராஜபக்சேக்கள் தொடங்கிய இலங்கை பொதுசன பெரமுன கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும் அரசுத்தலைவர் பதவியிலிருந்து கோத்தபாயவை உடனடியாக விலகும்படி கடிதம் ஒன்றை அவருக்கு அனுப்பியுள்ளனர். English Summary
all lanka party leaders meeting by parliament speaker 09-07-2022
|
|