???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 வேளாண் சட்டத்திருத்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு: நாட்டின் பல்வேறு பகுதிகளில் விவசாய அமைப்புகள் போராட்டம் 0 தன்னை விவசாயி எனக்கூறிக்கொள்ளும் முதலமைச்சரை வரலாறு மன்னிக்காது: மு.க.ஸ்டாலின் காட்டம் 0 மே -ஆகஸ்ட் வரையில் மாத ஊதியம் பெறும் 66 லட்சம் பேர் வேலையிழப்பு 0 மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகளின் கடும் அமளிக்கு இடையே வேளாண் மசோதாக்கள் நிறைவேறின 0 விவசாய சட்டங்களால் தமிழக விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படாது: எடப்பாடி பழனிசாமி அறிக்கை 0 மருத்துவ பரிசோதனை முடித்து துணைமுதல்வர் வீடு திரும்பினார் 0 அச்சு ஊடகங்கள், வானொலிகளுக்கு வரிக்குறைப்பா? வைகோவின் கேள்விக்கு அமைச்சர் விளக்கம் 0 வேளாண் மசோதாக்களை நிறைவேற்ற மாநிலங்களவை இன்று கூடுகிறது! 0 தமிழகத்தில் 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் 0 வரும் 21ம் தேதி திமுக தோழமை கட்சிகள் கூட்டம் 0 வங்கி திவால் சட்டத் திருத்த மசோதா மாநிலங்களவையில் நிறைவேறியது 0 பள்ளிகள் திறப்புக்கு பின் சுழற்சி முறையிலான வகுப்புகள் கிடையாது: அமைச்சர் செங்கோட்டையன் 0 மொபைல்போன் வாங்க சாக்கடை அகற்றிய மாணவன்: லேப்டாப் வழங்கியது திமுக 0 பிரதமர் மோடியின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் பலூன்கள் தீப்பிடித்து விபத்து 0 கூகுள் ப்ளேஸ்டோரில் மீண்டும் Paytm ஆப்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

'கெனடியன் குமார் ஹாஷ்டேக்' - ட்விட்டரில் சிக்கிய அக்‌ஷய்

Posted : செவ்வாய்க்கிழமை,   டிசம்பர்   17 , 2019  03:53:33 IST


Andhimazhai Image
குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து போராடிய ஜாமியா மில்லியா பல்கலைக்கழக மாணவர்களை போலீஸார் தாக்கும் காணொளியை ட்விட்டரில் லைக் செய்த நடிகர் அக்‌ஷய் குமார் சமூக வலைதள விமர்சகர்களிடம் சிக்கினார்.
 
அவருக்கு எதிராக பாய்காட் கெனடியன் குமார் (#BoycottCanadianKumar) என்கிற ஹாஷ்டேக் ட்விட்டரில் ட்ரண்ட் ஆனதைத் தொடர்ந்து இதுகுறித்து அக்‌ஷய் குமார் விளக்கம் அளித்துள்ளார்.
 
அதில், “சமூக வலைதளத்தை பார்த்துக்கொண்டிருந்தபோது கவனமில்லாமல் அந்த காணொளியை லைக் செய்தேன். பின்னர் நிதானத்துடன் அதை பார்த்தபிறகு உடனடியாக அன்லைக் செய்துவிட்டேன். இதுபோன்ற சட்டத்தை நான் ஆதரிக்க வாய்ப்பே இல்லை” என அக்‌ஷய் குமார் கூறியிருக்கிறார்.
 
ஆனால், இந்த விளக்கத்தை அவர் அளிக்கும் முன்னரே பாய்காட் கெனடியன் குமார் ஹாஷ்டேக்கால் பலரும் அவரை வாட்டியெடுத்துவிட்டனர். அக்‌ஷய் குமாருக்கு எதிரான அந்த ஹாஷ்டேக்கில் பல்வேறு விமர்சனங்களும், கேள்விகளும் எழுப்பபடுகின்றன. 
 
“நீங்கள் ஸ்க்ரோலிங் செய்து கொண்டிருந்தீர்கள். உங்களது டைம் லைனில் எப்படி அந்த பதிவு வந்தது. அப்படியென்றால் இத்தகைய சிந்தனை உள்ளவர்களை நீங்கள் பின்தொடர்கிறீர்களா?” என ஒருவர் சாடியுள்ளார்.
 
மற்றொருவரின் பதிவில், “அவருக்கு இந்திய குடியுரிமை கிடைத்துவிட்டது. அதனால்தான் கெனடியன் அக்‌ஷய் குமார் குடியுரிமை சட்டத்தை ஆதரிக்கிறார்” என கூறப்பட்டிருக்கிறது.
 
மேலும் இந்த சர்ச்சை மற்ற சில நடிகர்களின் மௌனத்தையும் கேள்வியெழுப்ப தவறவில்லை. “குறைந்தபட்சம் இவர் மன்னிப்பாவது கேட்டிருக்கிறார். அதோடு இந்த சட்டம் குறித்த தனது கருத்தையும் தெளிவுபடுத்தியிருக்கிறார். மற்ற 'கான்' நடிகர்களெல்லாம் இருக்கும் இடமே தெரியவில்லை. ஷாருக் கான் கூட அந்த கல்லூரியின் முன்னாள் மாணவர்தான். அவர்களுக்கு எதிராகவும் ட்ரெண்ட் செய்ய வேண்டும்” என ஒருவர் பதிவிட்டிருக்கிறார். நாட்டின் அசாதாரண சூழலின்போது மக்களின் உணர்வை அறிந்து பிரபலங்கள் செயல்பட வேண்டுமென்பதை இந்த சர்ச்சை உணர்த்துகிறது.


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...