???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 பிரதமருக்கு அரசியல் சாசன பிரதியை அனுப்பியது காங்கிரஸ்! 0 எந்த பிரச்சினைக்கும் வன்முறை தீர்வு ஆகாது: பிரதமர் மோடி கருத்து 0 சீனாவில் கொரோனா நோய்க்கு 56 பேர் பலி! 0 தமிழகம் பட்டினி பிரதேசமாக மாறும்: வைகோ 0 பெரியார் சிலை உடைப்பு: ஒருவர் கைது 0 ஆடிட்டர் குருமூர்த்தி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச முயற்சி 0 திட்டமிட்டு பேசுகிறார் ரஜினிகாந்த்: ராமதாஸ் 0 காஷ்மீரில் 70 லட்சம் மக்களின் சுதந்திரம் பறிக்கப்பட்டிருக்கிறது: ப.சிதம்பரம் 0 கங்கனா ரனாவத், பி. வி. சிந்துவிற்கு விருதுகள்! 0 நூற்றுக்கு நூறு தேர்ச்சி:5,8 வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு பற்றி அமைச்சர் 0 போலீஸ் எஸ்.ஐ தேர்விலும் முறைகேடு புகார் 0 சென்னை புத்தகக் காட்சி: கீழடி ஆய்வறிக்கை நூல் 23 ஆயிரம் பிரதிகள் விற்பனை! 0 சிவசேனாவின் நிறமும் காவி தான்: உத்தவ் தாக்கரே 0 குரூப்-4 தேர்வில் முறைகேடு: 99 பேருக்கு வாழ்நாள் தடை 0 CAA-வை எதிர்த்து கையெழுத்து இயக்கம்: திமுக கூட்டணி அறிவிப்பு
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

மாவோயிஸ்ட் அஜிதா உடலை பெற தாய் மறுப்பு!

Posted : வியாழக்கிழமை,   நவம்பர்   21 , 2019  00:00:07 IST

கேரள அரசால் கொல்லப்பட்ட மாவோயிஸ்ட் அஜிதாவின் உடலை குடும்பத்தார் வாங்க மறுத்துள்ளனர்.

 

கேரளாவின் பாலக்காடு மாவட்டம், அட்டப்பாடி கிராமத்திலுள்ள மஞ்சக்கண்டி வனப்பகுதியில், கடந்த அக்டோபர் 30 ஆம் தேதியன்று கேரளக் காவல்துறையின் மாவோயிஸ்ட் தடுப்புப் பிரிவான தண்டர்போல்ட் படையினரால் 4 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

 

கொல்லப்பட்ட அஜிதா, மணிவாசகம், சீனிவாசன்,  கார்த்திக் அகிய 4 பேரும் தமிழகத்தை சேர்ந்தவர்கள். இதில் சீனிவாசன், அஜிதாவின் உடல் கேரள மாநிலம் திருச்சூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது. மற்றவர்களது உடல்கள் அடக்கம் செய்யப்பட்டது.

 

அஜிதாவின் உடலை வாங்க முதலில் ஈடுபாடு காட்டிய அவரது தாயார் மற்றும் உறவினர்கள் தற்போது காட்டவில்லை என்று தெரிவித்ததாக கூறப்படுகிறது.

 

இதுதொடர்பாக கேரள காவல்துறை, உடலை 48 மணிநேரத்தில் அடையாளம் காட்டாவிட்டால் தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று விளம்பரம் செய்துள்ளனர். அவரது உடலை அடையாளம் கண்ட அவரது தாய் ‘ அஜிதாவின் உடல் நாட்டிற்கும் வீட்டிற்கும் வேண்டாம்’ என்று கேரள குற்றப்பிரிவு  காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளார்.

 

அஜிதாவின் குடும்பத்தினர் அவரது உடலை வாங்க மறுத்ததால் கேரள காவல்துறையினர் அவரது உடலை அடக்கம் செய்ய நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...