???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 இன்ஸ்டாகிராமின் குறைபாட்டை கண்டறிந்த தமிழருக்கு ரூ. 20 லட்சம் பரிசு! 0 தெலங்கானாவில் மாதாந்திர ஓய்வூதியம் இரட்டிப்பானது! 0 அயோத்தி வழக்கு: இடைக்கால அறிக்கை தாக்கல் 0 நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும்: குமாரசாமிக்கு ஆளுநர் கடிதம் 0 இன்று ஒகேனக்கலுக்கு வந்தடைகிறது காவிரி நீர் 0 நல்லகண்ணு, கக்கன் குடும்பத்துக்கு வீடு ஒதுக்கப்படும்: ஓ.பன்னீர்செல்வம் 0 நடிகர் சந்தானம் பட டிரெய்லரில் சர்ச்சைக்குரிய வசனம்: தடை செய்ய மனு 0 அத்திவரதர் தரிசனத்தின்போது உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிதி உதவி 0 புதுச்சேரி ஐ.டி.ஐ மாணவர்களுக்கும் மதிய உணவு: முதல்வர் நாராயணசாமி உத்தரவு 0 மழைநீர் வடிகால் திட்டம்: அனைத்து ஆவணங்களையும் தாக்கல் செய்ய சென்னை மாநகராட்சிக்கு உத்தரவு 0 தேனி, நீலகிரி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு 0 கர்நாடகாவில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு! 0 உச்ச நீதிமன்ற தீர்ப்புகள் தமிழ் உள்ளிட்ட 9 மாநில மொழிகளில் வெளியானது! 0 கமல்ஹாசனுக்கு நன்றி தெரிவித்த நடிகர் சூர்யா! 0 குல்புஷன் ஜாதவுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனைக்குத் தடை
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

அஜீத்துடன் ஜோடி சேர விரும்பும் ஸ்ருதி!

Posted : திங்கட்கிழமை,   நவம்பர்   03 , 2014  02:50:11 IST

 
    கமலின் மகள் என்கிற மிகப்பெரிய அடையாளம் இருந்தும் தமிழ்த்திரையுலகில் முதல்நிலை நடிகர்களுடன் தொடர்ந்து நடிக்கமுடியவில்லையே என்கிற வருத்தத்தில் இருக்கிறாராம் ஸ்ருதிஹாசன். இந்தியிலும் தெலுங்கிலும் தொடர்ந்து நடித்துக்கொண்டிருப்பதால் தமிழுக்கு நேரம் ஒதுக்கமுடியவில்லை என்று அவர் சொல்லிக்கொண்டிருக்கிறார். இதில் ஓரளவு உண்மையும் இருக்கிறதாம். ஆனால் தமிழில் முன்னணிநாயகர்களின் படங்களில் நடிக்க அவருக்கு வாயப்புகள் வராததால்தான் தமிழைத் தவிர்க்கிறார் என்றும் சொல்கிறார்கள். சூர்யாவோடு ஏழாம்அறிவு படத்துக்குப் பிறகு தனுஷூடன் 3 படத்தில் நடித்தார். அதற்குப் பிறகு விஷால் ஜோடியாக பூஜையில் நடித்திருக்கிறார். இதற்கிடையில் சில படங்களில் அவரை நடிக்கக் கேட்டும் அவர் ஒப்புக்கொள்ளவில்லை. அதற்குக் காரணம் பெரியநாயகர்கள் படம் எதுவும் வராததால்தான். இப்போது சிம்புதேவன் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கவிருக்கிறார். அதன் படப்பிடிப்பு விரைவில் தொடங்கிவிருக்கிறது. சூர்யா மற்றும் விஜய்யுடன் ஜோடி சேர்ந்தாயிற்று அடுத்து அஜித்தோடு ஜோடி சேர்ந்துவிட்டால் தமிழகத்தில் முதன்மை நாயகி என்கிற அந்தஸ்தைப் பிடித்துவிடலாம் என்பது அவருடைய எண்ணமாம். இதற்காக கௌதம் படத்துக்குப் பிறகு சிறுத்தைசிவா இயக்கும் படத்தில் அஜித் நடிக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாகிவிடவேண்டும் என்று அவர் தீவிரமாக முயல்கிறாராம். இதற்காக அவருடைய நெருங்கிய நண்பரொருவர் அஜித்தைச் சந்தித்துப் பேச கடும் முயற்சி எடுத்துக்கொண்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது. அஜித் ஒப்புக்கொண்டு ஸ்ருதியை நடிக்கவைப்பாரா என்பது பற்றி இன்னும் சில நாட்களில் தெரிந்துவிடுமென்று சொல்கிறார்கள். 


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...