???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 ஏப்ரல் 5, இரவு 9 மணிக்கு விளக்கேற்றுங்கள்! மோடி வேண்டுகோள்! 0 இந்தியாவில் கொரோனா பாதிப்பில் தமிழகம் 2-வது இடம்! 0 அமெரிக்காவில் அதிவேகமாக பரவும் கொரோனா! 0 ஏப்ரல் 5-ம் தேதி இரவு 9 மணிக்கு மாடியில் விளக்கு ஏற்றுங்கள்: பிரதமர் 0 100 நாள் பணியாளர்களுக்கு 21 நாள் ஊதியத்தை வழங்குக: சோனியா காந்தி 0 நாக்பூரிலிருந்து நடந்து வந்த தமிழக தொழிலாளி உயிரிழப்பு! 0 கொரோனா பயத்தால் சாத்தூரில் ஒருவர் உயிரிழப்பு 0 12-ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி மீண்டும் ஒத்திவைப்பு 0 கொரோனா வைரஸ் பரவும் வேகம் அதிகரிப்பு: உலக சுகாதார அமைப்பு 0 கொரோனா வைரசுக்கு பலி எண்ணிக்கை 47 ஆயிரத்தை தாண்டியது 0 சிபிஎஸ்இ பள்ளிகளில் 1 முதல் 8 வகுப்பு வரை அனைத்து மாணவர்களும் தேர்ச்சி 0 மானியம் இல்லா சிலிண்டரின் விலை குறைப்பு 0 விப்ரோ குழுமம் ரூ.1,125 கோடி நிதியுதவி 0 வீடுதேடி வரும் ரேஷன் கடையில் ₹ 1000 உதவித்தொகை டோக்கன் 0 மத வழிபாட்டு தலங்களில் கூடிக் குழப்பத்தை ஏற்படுத்த இது நேரமல்ல: ஏ.ஆர்.ரஹ்மான்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

அரசியலமைப்பையும் கல்வியையும் பாதுகாக்கும் கடமை மாணவர்களுக்கு உண்டு: ஆய்ஷி கோஷ்

Posted : ஞாயிற்றுக்கிழமை,   பிப்ரவரி   23 , 2020  00:01:15 IST

சென்னை வள்ளுவர் கோட்டத்தில் அனைவருக்குமான கல்வியை உறுதிப்படுத்த வேண்டும், கல்வியில் தனியார்மயத்தை அனுமதிக்கக்கூடாது, கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஜே.என்.யூ, பல்கலைக்கழக மாணவர் பேரவையின் தலைவர் ஆய்ஷி கோஷ் கலந்து கொண்டார்.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், “கல்வி உரிமைகளை நசுக்கும் எந்த முயற்சியையும் எதிர்த்து போராட எல்லா உரிமையும் எங்களுக்கு உண்டு. கல்வி என்பது விற்கப்படும் வியாபார பண்டம் அல்ல, அது ஒவ்வொருடைய உரிமை.

மாணவர்களாகிய நாங்கள் இந்த சமூகத்தில் வளர்ந்து வரும் நிலையில் ஆங்கிலேயே காலணி ஆதிக்கத்தில் இந்திய அடிமை பெற்று இருந்ததை போல நாங்கள் அடிமையாக இருக்க விரும்பவில்லை. சாவக்கர், கோல்வாக்கர் அவர்களுடைய வழித்தோன்றல்கள் கூடிய தேசியத்தை நாங்கள் ஏற்க விரும்பவில்லை“ என்றும் கூறினார்.

அப்போது மாணவர்கள் தேவையற்ற போராட்டத்தில் மாணவர்கள் ஈடுபட வேண்டாம் என்று ரஜினிகாந்த் கூறியது பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, அரசியலமைப்பையும் கல்வியையும் பகத்சிங், அம்பேத்கர் அவர்கள் வழி நின்று பாதுகாக்க வேண்டிய கடமை மாணவர்களாகிய தங்களுக்கு உண்டு என்பதை நடிகர் ரஜினிகாந்த் புரிந்து கொள்ள வேண்டும்“ என்றார்.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...