???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து கொலை: ஐந்து பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை 0 தலைமறைவாக இருந்த நிரவ் மோடி லண்டனில் கைது! 0 மக்களவைத் தேர்தலில் திருமாவளவன் வெற்றி பெற பா.ரஞ்சித் வாழ்த்து! 0 அதிமுக வேட்பாளர்கள் ஒரே நேரத்தில் வேட்புமனு தாக்கல்! 0 பொள்ளாச்சி பாலியல் வழக்கு: சிபிஐ-க்கு மாற்றுவதில் இழுபறி! 0 ₹2,000 சிறப்பு நிதி திட்டம் நிறுத்திவைப்பு: தமிழக அரசு தகவல் 0 அதிமுக எம்.எல்.ஏ கனகராஜ் மாரடைப்பால் மரணம் 0 சுயேட்சையாக போட்டியிடும் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ.! 0 அ.ம.மு.க-விலிருந்து நீக்கப்பட்ட வி.பி.கலைராஜன் தி.மு.க-வில் இணைந்தார்! 0 திருவாரூரிலிருந்து தேர்தல் பரப்புரையை தொடங்கினார் ஸ்டாலின்! 0 பணக்காரர்கள் தான் காவலாளி வைத்துக்கொள்வார்கள்: பாஜகவை விமர்சித்த பிரியங்கா! 0 தமிழகத்திற்கு சிறப்பு தேர்தல் செலவின பார்வையாளர்கள் நியமனம்! 0 சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் மனைவியை கத்தியால் குத்திய கணவன்! 0 தமிழகம்-புதுவையில் முதல் நாளில் 23 பேர் மனுத்தாக்கல்! 0 ஒட்டப்பிடாரம் தொகுதி தேர்தல் வழக்கை வாபஸ் பெற கிருஷ்ணசாமிக்கு அனுமதி
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

எய்ம்ஸ் மருத்துவமனை விரைந்து செயல்பாட்டுக்கு அரசு உதவும்: பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்

Posted : செவ்வாய்க்கிழமை,   டிசம்பர்   18 , 2018  23:05:38 IST

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை விரைந்து செயல்பாட்டுக்கு வருவதற்கான அனைத்து ஆதரவையும் தமிழக அரசு வழங்கும் என்று பிரதமருக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உறுதியளித்துள்ளார்.
 
மதுரை தோப்பூரில் ஆயிரத்து 264 கோடி ரூபாய் செலவில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கு மத்திய அமைச்சரவை நேற்று முன்தினம் ஒப்புதல் அளித்தது. இதனைத் தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.
 
அதில், எய்ம்ஸ் மருத்துவமனைக்கு ஒப்புதல் அளித்ததற்காக தனிப்பட்ட முறையிலும், தமிழக மக்களின் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்வதாக தெரிவித்துள்ளார்.
 
இதுபோன்ற உயர் மருத்துவ மையம் தமிழகத்தில் செயல்பாட்டுக்கு வர வேண்டும் என்று ஜெயலலிதா மிகுந்த ஆர்வமுடன் இருந்ததாக முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார். மத்திய அமைச்சரவையின் ஒப்புதல் மூலம், இந்தத் திட்டத்தை அடுத்த நிலைக்கு கொண்டுசென்றுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
 
இந்தத் திட்டப் பணிகளை விரைந்து முடித்து, எய்ம்ஸ் மருத்துவமனையை விரைவில் செயல்பாட்டுக்கு கொண்டுவருவதற்கான அனைத்து ஆதரவையும் தனது அரசு வழங்கும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உறுதியளித்துள்ளார்.
 


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...