அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 50 ஆண்டுகளுக்கு முன்பு தொலைந்த பார்வதி தேவி சிலை கண்டுபிடிப்பு! 0 எஸ்.பி. வேலுமணி மீதான டெண்டர் முறைகேடு வழக்கை விசாரிக்க தடையில்லை: உயர் நீதிமன்றம் 0 மூதாட்டி வீட்டு வாசலில் சிறுநீர் கழித்த ஏபிவிபியின் முன்னாள் தேசிய தலைவர் மீதான வழக்கு ரத்து 0 உயிரிழந்த ராணுவ வீரர் லட்சுமணன் குடும்பத்துக்கு ரூ.20 லட்சம் நிதியுதவி! 0 பயங்கரவாத தாக்குதல்: தமிழக வீரர் உட்பட 3 பேர் வீர மரணம் 0 மிருகங்களால் கூட உண்ண முடியாத உணவு; கதறி அழுத போலீஸ்! 0 எட்டாவது முறை பீகார் முதலமைச்சராகப் பதவியேற்றார் நிதிஷ்குமார்! 0 பிளவுகளைக் கடந்து நிச்சயமாக அதிமுக ஒன்றிணையும் – சசிகலா 0 ஒன்றாகத் தேர்வு எழுதி, ஒன்றாகத் தேர்ச்சி பெற்று, அரசு வேலைக்கு செல்லும் தாய் – மகன்! 0 பிரியங்கா காந்திக்கு மீண்டும் கொரோனா தொற்று உறுதி! 0 போதைப் பொருள் விற்பவர்கள் சொத்துகள் முடக்கப்படும் – முதலமைச்சர் 0 நிதிஷ் குமார் செய்தது நம்பிக்கை துரோகம்: பா.ஜ.க. 0 கள்ளக்குறிச்சி கலவர வழக்கில் கைதான 64 பேருக்கு நிபந்தனை ஜாமீன் 0 அரசியல் பேச ஆளுநர் மாளிகை கட்சி அலுவலகம் அல்ல: சிபிஐ(எம்) கண்டனம் 0 முல்லை பெரியாறு அணை பாதுகாப்பாக உள்ளது: மு.க.ஸ்டாலின் பதில்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

நாளை அதிமுகவின் மாநில செயற்குழு கூட்டம்!

Posted : செவ்வாய்க்கிழமை,   நவம்பர்   30 , 2021  19:03:08 IST

அதிமுகவின் மாநில செயற்குழுக் கூட்டம் நாளை சென்னையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற உள்ளது.

கடந்த நவம்பர் 24ஆம் தேதி அதிமுகவின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் சென்னை அவ்வை சண்முகம் சாலையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடந்தது. இக்கூட்டத்தில் அதிமுக வழிகாட்டுதல் குழுவை மறுசீரமைக்க வேண்டும் என்பன குறித்தும், அதிமுகவில் சசிகலாவை மீண்டும் சேர்ப்பது குறித்தும் காரசாரமாக விவாதிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில் நாளை அதிமுகவின் மாநில செயற்குழுக் கூட்டம் நடைபெற உள்ளது. சென்னையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற உள்ள இந்தக் கூட்டத்தில் பாஜகவில் அதிமுக முன்னாள் எம்எல்ஏ-க்கள் இணைந்தது, சசிகலாவை கட்சியில் இணைப்பது, வேதா இல்லம் அரசுடைமையாக்கியது செல்லாது என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தக் கூட்டத்தில் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே.பழனிச்சாமி மற்றும் முன்னணி தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.

 



 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...