அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 டெல்லி பயணம் மகிழ்ச்சியாக இருந்தது – ஓபிஎஸ் 0 இலங்கைக்கு எதிரான டி20 தொடரை கைப்பற்றிய இந்திய மகளிர் அணி! 0 எகிறியடிக்கும் ஏக்நாத் ஷிண்டே.. ஆபத்தில் மகாராஷ்டிர ஆட்சி! 0 குஜராத் கலவர வழக்கு: பிரதமர் மோடிக்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம்! 0 மெட்ரிக் பள்ளிகளில் கட்டாயம் இடஒதுக்கீடு! 0 தேர்தல் ஆணையத்தில் ஓபிஎஸ் மனு தாக்கல்! 0 பா.ஜ.கவையும் யாராவது உடைக்கலாம்: மம்தா பானர்ஜி எச்சரிக்கை 0 அக்னிபத் திட்டத்தின் கீழ், விமானப்படை, கடற்படையில் சேர இன்று முதல் விண்ணப்பிக்கலாம்! 0 ஜனாதிபதி தேர்தல்: இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார் திரவுபதி முர்மு 0 அ.தி.மு.க. உள்விவகாரங்களில் பா.ஜ.க. என்றுமே தலையிட முடியாது: ஜெயக்குமார் 0 திமுகவை அழிக்க நினைத்தவர்கள் அழிந்துபோயிருக்கிறார்கள்: மு.க. ஸ்டாலின் 0 ஜூலை 11-ல் அதிமுக பொதுக்குழு கூட்டம்: அவைத் தலைவர் அறிவிப்பு 0 சட்டத்துக்கு புறம்பான பொதுக்குழுவை நிராகரிப்பதாக கூறி மேடையில் கோஷமிட்ட ஓபிஎஸ் தரப்பு 0 அதிமுக பொதுக்குழு: சி.வி.சண்முகம் ஆவேசம் 0 அக்னிபத் திட்டத்தை எதிர்ப்பவர்கள் பொறுக்கிகள்: இயக்குநர் பேரரசு காட்டம்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

ஜூலை 11-ல் அதிமுக பொதுக்குழு கூட்டம்: அவைத் தலைவர் அறிவிப்பு

Posted : வெள்ளிக்கிழமை,   ஜுன்   24 , 2022  07:04:07 IST

அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாசலபதி மஹாலில் நடந்தது. பொதுக்குழுவுக்கு வந்த ஓ.பன்னீர்செல்வதுக்கு எதிராக அங்கு திரண்டிருந்த தொண்டர்கள் கோஷங்களை எழுப்பினர். பொதுக்குழுவிற்கு வருகை தந்த ஓ.பன்னீர்செல்வத்தை முன்னாள் அமைச்சர்கள் யாரும் வரவேற்கவில்லை. பொதுக்குழுவுக்கு வந்த ஓ.பி.எஸ்-ஸை வெளியேறிக் கூறி கோஷங்கள் எழுப்பப்பட்டது. ஓபிஎஸ் தனது ஆதரவாளர்களுடன் அமைதியாக இருந்தார்.
 
பொதுக்குழு உறுப்பினர்கள் துரோகி என முழக்கம் எழுப்பியதால் ஓபிஎஸ் ஆதரவாளரான வைத்திலிங்கம் மேடையில் இருந்து கீழ் இறங்கினர். பொதுக்குழுவுக்கு வந்த இபிஎஸ்-க்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. ஓபிஎஸ் - இபிஎஸ் இருவரும் மேடை ஏறினர். மேடையில் இருந்த எம்.ஜி.ஆர், ஜெயலலிதா படங்களுக்கு இருவரும் மரியாதை செய்து அமர்ந்தனர். ஓபிஎஸ், இபிஎஸ் இருவருக்கும் இடையே தமிழ் மகன் உசேனுக்கு நாற்காலி போடப்பட்டிருந்தது.
 
அதிமுக அவைத்தலைவராக தமிழ்மகன் உசேன் தேர்வு செய்யப்படுவதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். மேடையில் இடைமறித்து பேசிய சி.வி.சண்முகம் அனைத்து தீர்மானங்களையும் நிராகரிக்க கோரிக்கை வைத்தார். அனைத்து தீர்மானங்களையும் பொதுக்குழு உறுப்பினர்கள் நிராகரிக்கிறோம். ஒற்றைத் தலைமை தீர்மானத்துடன் அடுத்த பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்படும் என மேடையில் கே.பி.முனுசாமி ஆவேசமானார்.
 
பின்னர் பேசிய சி.வி.சண்முகம், இரட்டை தலைமையால் அதிமுக தீவிரமாக செயல்பட முடியவில்லை. வலிமையான, வீரியமான ஒற்றைத் தலைமை வேண்டும். அடுத்த பொதுக்குழுவுக்கான தேதியை நடப்பு பொதுக்குழுவிலே தெரிவிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்.இதைத் தொடர்ந்து பேசிய அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் ஜூலை 11-ம் தேதி அடுத்த பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என அறிவித்தார்.
 


 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...