அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 3 நிமிடத்தில் 900 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பிய சி.இ.ஓ! 0 பேரறிவாளன் விடுதலை: மத்திய அரசு இனியும் தாமதிக்க கூடாது - நீதிமன்றம் 0 காவல் துறை விசாரணையில் அதிகரிக்கும் இளைஞர்களின் மரணம்! 0 இங்கிலாந்தில் ஒமைக்ரான் வைரஸ் சமூக பரவலாக மாறிவிட்டது: அமைச்சர் தகவல் 0 தனக்கு தானே பிரசவம் பார்த்த பெண் மீது வழக்குப் பதிவு! 0 மத்திய அரசு என்ற ஒன்று இருக்கிறதா? - ஜோதிமணி எம்.பி! 0 இந்தியாவில் கொரோனா மூன்றாம் அலை பிப்ரவரி மாதம் தாக்கும்! 0 நாகலாந்தில் பொதுமக்கள் சுட்டுக் கொலை: மத்திய அரசுக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் 0 'பஞ்சாப் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி': அமரிந்தர் சிங் அறிவிப்பு 0 திமுக அரசை கண்டித்து டிசம்பர் 9ல் அதிமுக மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் 0 ரஷ்யாவின் சிறந்த நட்பு நாடாக இந்தியா நிகழ்கிறது - விளாதிமீர் புதின் 0 இந்தியா - ரஷ்யா இடையே 21ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின்றன! 0 கொரோனா விதிமுறையை மீறிய கமல்ஹாசன்: விளக்கும் கேட்கும் தமிழக அரசு! 0 அம்பேத்கர் வழியில் உறுதியேற்போம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! 0 அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு 252 வேட்புமனுக்கள் தாக்கல்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்: உள்ளே ஆலோசனை; வெளியே தர்ணா!

Posted : புதன்கிழமை,   நவம்பர்   24 , 2021  12:44:18 IST

அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வெளியே அக்கட்சியின் தொண்டர்கள் தர்ணாவில் ஈடுபட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டது.

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் கடந்த மாதம் முடிவடைந்த நிலையில், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் விரைவில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கினைப்பளார் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுகவின் தலைமை அலுவலகத்தில் நடைபெறும் இக்கூட்டத்தில் அக்கட்சியின் மாவட்ட செயலாளர்கள், முன்னாள் அமைச்சர்கள், தலைமைக் கழக நிர்வாகிகளும் கலந்து கொண்டுள்ளனர்.

இக்கூட்டத்தில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் மற்றும் சசிகலா விவகாரம் உள்ளிட்டவை தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளப்படுவதாகக் கூறப்படுகிறது. மேலும், டிசம்பர் மாதத்தில் செயற்குழு கூட்டத்தை நடத்த அதிமுக தலைமை திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில், அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வெளியே செங்கல்பட்டு மாவட்ட அதிமுக தொண்டர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சட்டமன்ற உறுப்பினர் மரகதம் குமரவேல் ஆதிக்கம் செலுத்துவதாகவும், இலத்தூர் ஒன்றியத்தில் அதிமுகவைக் காப்பாற்ற வேண்டும் என்ற பதாகைகளுடன் தர்ணாவில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், தலைமை அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.




 



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...