அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 அடுத்த திருப்பம்... ஷிண்டேதான் முதலமைச்சர்- பா.ஜ.க. அறிவிப்பு 0 கர்நாடக சட்டசபை தேர்தலில் பா.ஜனதாவுக்கு பின்னடைவு: ஆய்வில் தகவல் 0 ஓராண்டில் 131 கோடி முறை பெண்கள் இலவசப் பயணம்! 0 மூன்றாம் பாலினத்தவர்கள் எம்.பி.சி. பிரிவில் சேர்ப்பு! 0 கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 10,000-ஐ கடந்தது 0 இரட்டைத் தலைமைதான் நல்லது: எம்.ஜி.ஆர் பேரன் 0 தமிழகத்தில் 2 நாள்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு! 0 நடிகர் சூர்யாவிற்கு முதல்வர் ஸ்டாலின் பாராட்டு 0 மதுரையில் அடுத்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்! 0 உத்தவ் விலகல் - இனிப்புடன் பா.ஜ.க. கொண்டாட்டம் 0 பதவிவிலகினார் உத்தவ் தாக்கரே - மகாராஷ்டிரத்தில் திடீர் திருப்பம் 0 ராஜஸ்தானில் தையல் கடைக்காரரின் தலையைத் துண்டித்த கொலைகாரர்கள் கைது! 0 அயர்லாந்துக்கு எதிரான 2வது டி20 போட்டியில் இந்திய அணி திரில் வெற்றி! 0 நடிகை மீனாவின் கணவர் காலமானார்! 0 ப்ளூட்டோ முதல் ப்ளூட்டி வரை - 17: மருத்துவர் அகிலாண்ட பாரதி எழுதும் தொடர்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

அதிமுக பொதுக் குழு கூட்டத்திற்கு தடை கோரிய மனுவைத் தள்ளுபடி செய்த நீதிமன்றம்!

Posted : புதன்கிழமை,   ஜுன்   22 , 2022  20:37:45 IST

அதிமுக பொதுக் குழு கூட்டத்திற்கு தடை கோரிய மனுவை சென்னை உரிமையியல் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

அதிமுக பொதுக் குழு குறித்த வழக்கு விசாரணையின்போது, கடந்த மூன்று மணி நேரமாக சென்னை உயர் நீதிமன்றத்தில் ஓ. பன்னீர்செல்வம் - எடப்பாடி பழனிசாமி தரப்பில் காரசார வாதங்கள் முன்வைக்கப்பட்டன.

சென்னை வானகரத்தில் அதிமுக பொதுக்குழு கூட்டம் நாளை (ஜூன் 23) நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளுக்கு மாற்றாக பொதுச் செயலாளர் பொறுப்பை மீண்டும் கொண்டு வரப்படலாம் எனத் தெரிகிறது.

பொதுக்குழு உறுப்பினர் சண்முகம் என்பவர் சார்பில் பொதுக்குழுவுக்கு தடை கோரி வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அதேபோன்று, தணிகாச்சலம் என்பவரும் அதிமுக பொதுக்குழுக் கூட்டத்திற்கு தடை விதிக்கக் கோரி வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த மனுவின் மீது நேற்று விசாரணை நடைபெற்ற நிலையில், அப்போது ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் பொதுக் குழுக் கூட்டத்தில் ஒப்புதல் பெறப்பட்ட 23 தீர்மானங்களைத் தவிர, வேறு எந்தத் தீர்மானமும் நிறைவேற்றக் கூடாது என்றும் பொதுக் குழுவில் இது நடக்க வேண்டும் என முன்கூட்டியே முடிவு செய்ய இயலாது என்று எடப்பாடி பழனிசாமி தரப்பிலும் வாதங்கள் முன் வைக்கப்பட்டன.

இந்நிலையில் அதிமுக பொதுக் குழு கூட்டத்திற்கு தடை கோரி பாலகிருஷ்ணன் என்பவர் தொடர்ந்த வழக்கில் அவரது மனுவை தள்ளுபடி செய்து உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டது.

 



 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...