???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 இன்ஸ்டாகிராமின் குறைபாட்டை கண்டறிந்த தமிழருக்கு ரூ. 20 லட்சம் பரிசு! 0 தெலங்கானாவில் மாதாந்திர ஓய்வூதியம் இரட்டிப்பானது! 0 அயோத்தி வழக்கு: இடைக்கால அறிக்கை தாக்கல் 0 நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும்: குமாரசாமிக்கு ஆளுநர் கடிதம் 0 இன்று ஒகேனக்கலுக்கு வந்தடைகிறது காவிரி நீர் 0 நல்லகண்ணு, கக்கன் குடும்பத்துக்கு வீடு ஒதுக்கப்படும்: ஓ.பன்னீர்செல்வம் 0 நடிகர் சந்தானம் பட டிரெய்லரில் சர்ச்சைக்குரிய வசனம்: தடை செய்ய மனு 0 அத்திவரதர் தரிசனத்தின்போது உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிதி உதவி 0 புதுச்சேரி ஐ.டி.ஐ மாணவர்களுக்கும் மதிய உணவு: முதல்வர் நாராயணசாமி உத்தரவு 0 மழைநீர் வடிகால் திட்டம்: அனைத்து ஆவணங்களையும் தாக்கல் செய்ய சென்னை மாநகராட்சிக்கு உத்தரவு 0 தேனி, நீலகிரி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு 0 கர்நாடகாவில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு! 0 உச்ச நீதிமன்ற தீர்ப்புகள் தமிழ் உள்ளிட்ட 9 மாநில மொழிகளில் வெளியானது! 0 கமல்ஹாசனுக்கு நன்றி தெரிவித்த நடிகர் சூர்யா! 0 குல்புஷன் ஜாதவுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனைக்குத் தடை
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

சீன மொழியில் ஐ?

Posted : புதன்கிழமை,   நவம்பர்   12 , 2014  01:09:48 IST

இந்தமாதம் வெளியாகிவிடும் அல்லது டிசம்பரிலாவது வெளியாகிவிடும் என்று எதிர்பார்க்கப்பட்ட ஐ படம் இப்போது பொங்கலையும் தாண்டித்தான் வெளியாகும் என்று சொல்கிறார்கள். அந்தப்படம் தாமதமாவதற்கு, இன்னும் அதன் வேலைகள் முடிவடையவில்லை என்று சொல்கிறார்கள். வேலைகள் முடிவடையாதற்குக் காரணம், தயாரிப்பாளர் ஆஸ்கர்ரவிச்சந்திரன் நடக்கும் வேலைகளுக்குத் தேவையான அளவு பணம் தராமல் இழுத்தடிக்கிறார் என்றும் அதன் காரணமாக ஷங்கர் அந்தப்படத்தின் வேலைகளைத் தாமதப்படுத்துகிறார் என்றும் சொல்லப்படுகிறது. அதில் உண்மையில்லை, இராப்பகலாக ஷங்கர் இந்தப்பட வேலைகளில்தான் இருக்கிறார் என்றும் அந்தப்படக்குழுவினர் சொல்கிறார்கள். அப்படியென்றால் ஏன் இவ்வளவு தாமதம் எதனால்? என்று கேட்டால் இவற்றையெல்லாம் தாண்டி இப்போது ஒரு புதிய காரணத்தைச் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். இந்தியசினிமா வரலாற்றில் முதன்முறையாக ஒரு புதியமுயற்சியை இந்தப்படத்துக்காகச் செய்துகொண்டிருக்கிறார்களாம். தமிழ், தெலுங்கு, இந்தி அகிய மொழிகளைத் தாண்டி இந்தப்படத்துக்குச் சீனமொழியில் குரல்பதிவு செய்துகொண்டிருக்கிறார்களாம். அந்த வேலைகளும் முழுமையாக முடிவடைந்த பிறகு ஒரேநாளில் இந்தியா மற்றும் சீனாவில் வெளியிடத் திட்டமிடுவதாகச் சொல்கிறார்கள். படத்தை மொத்தமாக வாங்கிக்கொண்டு போய் அங்கேயே சீனமொழியில் குரல்பதிவு நடந்துகொண்டிருக்கிறதாம். தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் சீனமொழிகளில் வெளியாகும் முதல் இந்தியப்படம் என்கிற பெருமையை இந்தப்படம் பெறும் என்று சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.
 


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...