???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 ரஜினியுடன் நடிக்கும் கீர்த்தி சுரேஷ்! 0 குடியுரிமை சட்ட திருத்த மசோதா: வடகிழக்கு மாநிலங்களில் போராட்டம்! 0 உ.பி.: பாலியல் வழக்குகளை விசாரிக்க 218 விரைவு நீதிமன்றங்கள்! 0 குடியுரிமைக்கு 12 லட்சம் பேர் விண்ணப்பம்: நித்தியானந்தா 0 வெங்காய விலையை கட்டுப்படுத்த திராணி இல்லையா? மு.க.ஸ்டாலின் கேள்வி 0 கர்நாடகா: 12 தொகுதிகளை கைப்பற்றியது பாஜக! 0 விற்பனைக்கு வந்தது எகிப்து வெங்காயம்! 0 ஈழத் தமிழ் அகதிகளுக்கு குடியுரிமை வழங்கப்படாது: மத்திய அரசு 0 ஊராட்சித் தலைவர் பதவி ரூ.50 லட்சத்துக்கு ஏலம்! 0 உள்ளாட்சி தேர்தலுக்கு வேட்புமனு தொடங்கியது! 0 காஷ்மீரில் கட்டுப்பாடுகளை நீக்க வேண்டும்: அமெரிக்க நாடாளுமன்றத்தில் தீர்மானம் தாக்கல் 0 குடியுரிமை மசோதா மக்களவையில் இன்று தாக்கல் 0 கர்நாடகா இடைத்தேர்தல்: வாக்கு எண்ணிக்கை தொடங்கியது 0 திராவிடம் அழிந்துவருகிறது;ஆன்மீகம் தழைக்கிறது: குருமூர்த்தி 0 மக்களுக்கு பாஜக அரசு துரோகம் செய்துவிட்டது: ப. சிதம்பரம்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

ஐ படத்துக்கு எல்லோரும் வழிவிடவேண்டாமா?

Posted : செவ்வாய்க்கிழமை,   ஜனவரி   06 , 2015  01:10:26 IST

 
    இரண்டரைஆண்டுகால உழைப்பில் தயாராகியிருக்கும் படம் ஐ. இந்தப்படத்துக்காகத் தன் உடல் எடையைக் கூட்டி.. குறைத்து.. என உடலை அளவுக்கு மீறி வதைத்துக்கொண்டிருக்கிறார் விக்ரம். அவருடைய மருத்துவர்களே அவரைக் கைவிட்டுவிட்ட நிலையிலும் அவர் இந்தப்படத்தில் ஏற்றுக்கொண்ட வேடத்துக்காக கடும் உழைப்பைச் செலுத்தியிருக்கிறார். பெரும்பொருட்செலவு செய்த தயாரிப்பாளர், உயிரையும் மதிக்காமல் நடித்திருக்கும் நாயகன், இவர்களை ஒருங்கிணைத்து இந்தியத் திரையுலகினர் மட்டுமின்றி உலகத்திரையுலகினரையும் திரும்பிப்பார்க்க வைக்கும் முயற்சி எடுத்திருக்கும் இயக்குநர் ஷங்கர், தமிழர்களின் அடையாளமாகத் திகழும் ஏ.ஆர்.ரகுமான் என்று மிகப்பெரிய கூட்டணி அமைந்திருக்கிறது. இப்படிப்பட்ட ஒருபடம் வெளியாவது அந்தப்படத்தில் சம்பந்தப்பட்டவர்களுக்கு மட்டும் இலாபம் தரக்கூடிய விசயம் அல்லது புகழ் தரக்கூடிய விசயம் என்று பார்க்காமல் தமிழ்த்திரையுலகுக்கே பெருமை தரக்கூடிய செய்தி என்று பார்க்கவேண்டாமா? அப்படி எண்ணினால் அந்தப்படத்தின் செலவுக்கு ஈடுகட்ட அந்தப்படம் வெளியாகும் நாளில் வேறு எந்தப்படத்தையும் வெளியிடாமல் மொத்த வசூலையும் அந்தப்படத்துக்கு விட்டுக்கொடுக்க நினைக்க வேண்டாமா? தமிழ்த்திரைப்படத்தயாரிப்பாளர்கள் சங்கம் மற்றும் இயக்குநர்கள் சங்கத்தினர் இப்படி யோசிக்கவேண்டாமா? என்று தமிழ்த்திரைப்படத் தயாரிப்பாளர் ஒருவர் கேட்கிறார். படம் எடுக்காத தயாரிப்பாளரல்லர் அவர். வரிசையாகப் படங்கள் எடுத்துக்கொண்டிருக்கும் அவருடைய இந்தச்சிந்தனை மிகவும் பெருந்தன்மையானதாக இருக்கிறது. எல்லோருக்கும் இந்தப் பெருந்தன்மை இருக்குமா? அவரவர் படமும் பணமும் அவரவர்க்குப்பெரிது.


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...