![]() |
விவசாய நகைக் கடன்கள் தள்ளுபடி - தமிழக அரசு அறிவிப்பு!Posted : வெள்ளிக்கிழமை, பிப்ரவரி 26 , 2021 12:05:46 IST
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய 6 சவரன் வரையிலான நகைக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படுவதாக தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார். சென்னை கலைவாணார் அரங்கத்தில் நடைபெற்று வரும் சட்டப்பேரவை கூட்டத்தொடரில், தமிழக அரசின் இடைக்கால நிதி நிலை அறிக்கை தொடர்பான விவாதம் நடைபெற்று வருகிறது. இதில் முதல்வர் பழனிசாமி 110 விதியின் கீழ் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். அந்தவகையில், இன்று காலை கூடிய சட்டப்பேரவையில் பேசிய தமிழக முதல்வர் பழனிசாமி, கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய 6 சவரன் வரையிலான நகைக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படுவதாக விதி எண் 110-ன் கீழ் அறிவித்தார். மேலும், மகளிர் சுய உதவிக் குழுக்கள் கூட்டுறவு வங்கிகளின் மூலம் பெற்ற கடன்களும் தள்ளுபடி செய்யப்படுவதாகவும் அறிவித்துள்ளார். ஏற்கனவே, பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது விவசாய நகைக் கடன்களும் தள்ளுபடி செய்யப்பட்டிருப்பது விவசாயிகளிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
|
|