அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 எட்டாவது முறை பீகார் முதலமைச்சராகப் பதவியேற்றார் நிதிஷ்குமார்! 0 பிளவுகளைக் கடந்து நிச்சயமாக அதிமுக ஒன்றிணையும் – சசிகலா 0 ஒன்றாகத் தேர்வு எழுதி, ஒன்றாகத் தேர்ச்சி பெற்று, அரசு வேலைக்கு செல்லும் தாய் – மகன்! 0 பிரியங்கா காந்திக்கு மீண்டும் கொரோனா தொற்று உறுதி! 0 போதைப் பொருள் விற்பவர்கள் சொத்துகள் முடக்கப்படும் – முதலமைச்சர் 0 நிதிஷ் குமார் செய்தது நம்பிக்கை துரோகம்: பா.ஜ.க. 0 கள்ளக்குறிச்சி கலவர வழக்கில் கைதான 64 பேருக்கு நிபந்தனை ஜாமீன் 0 அரசியல் பேச ஆளுநர் மாளிகை கட்சி அலுவலகம் அல்ல: சிபிஐ(எம்) கண்டனம் 0 முல்லை பெரியாறு அணை பாதுகாப்பாக உள்ளது: மு.க.ஸ்டாலின் பதில் 0 பீகாரை போல் ஜனநாயக சக்திகள் ஒன்றிணைய வேண்டும்: திருமாவளவன் 0 நான் பேசியது சட்டத்துக்கு புறம்பானது இல்லை: கனல் கண்ணன் முன்ஜாமீன் கோரி மனுத்தாக்கல் 0 செஸ் ஒலிம்பியாட்: தங்கம் வென்ற தமிழக வீரர்கள்! 0 ஆட்சி அமைக்க உரிமை கோரினார் நிதீஷ் குமார்! 0 அதிமுகவின் முதல் எம்பியான மாயத்தேவர் காலமானார்! 0 அரசியல் அலுவலகமா ஆளுநர் மாளிகை? கே.பாலகிருஷ்ணன் கண்டனம்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

கோவை வேளாண். பல்கலையில் 80% பேர் தோல்வி; மாணவர்கள் போராட்டம்!

Posted : திங்கட்கிழமை,   டிசம்பர்   06 , 2021  07:05:51 IST

கோவை வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஆன்லைனில் அரியர் தேர்வு எழுதிய மாணவர்களில் பலர் தோல்வியடைந்ததை அடுத்து, பல்கலைக்கழக வளாகத்தில் சம்பந்தப்பட்ட மாணவர்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். நிர்வாகம் சரியாக பதிலளிக்காவிட்டால், தொடர் போராட்டம் நடத்தப்படும் என அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். 
 
கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் 1971-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இங்கு இளங்கலை, முதுகலை மற்றும் ஆராய்ச்சிப் படிப்புகள் கற்பிக்கப்பட்டு வருகின்றன. இதில் இளங்கலை பாடப் பிரிவில் 10 பட்டப் படிப்புகள் உள்ளன. பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டின் கீழ், 14 உறுப்புக் கல்லூரிகள், 29 இணைப்புக் கல்லூரிகள் உள்ளன. 
 
இதற்கிடையே கடந்த 2018-19 ஆம் கல்வியாண்டு மற்றும் 2019-20 ஆம் கல்வியாண்டு மாணவர்களில், செமஸ்டர் தேர்வுகளில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்காக அரியர் தேர்வு நடத்தப்பட்டது. ஆன்லைன் முறையில் எழுத்துத் தேர்வும், நேரடி முறையில் செய்முறைத் தேர்வுகளும் நடத்தப்பட்டன. நூற்றுக்கும் மேற்பட்டோர் இந்தத் தேர்வுகளை எழுதினர். இவர்களுக்கான தேர்வு முடிவுகளை வேளாண்மைப் பல்கலைக்கழகம் டிசம்பர் 2-ம் தேதி வெளியிட்டது.
 
இதில் 80 சதவீதத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் தேர்வில் தோல்வியடைந்ததாகக் கூறப்படுகிறது. இதற்கிடையே, தேர்வில் தோல்வியடைந்த மாணவர்களில் சுமார் 50 பேர் நேற்று பல்கலைக்கழகத்துக்கு வந்தனர். பல்கலைக்கழகத்தின் நூற்றாண்டு நினைவுக் கட்டிடத்தின் முன்பு அமர்ந்து கோஷமிட்டனர். போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
 
தகவல் அறிந்து அங்கு வந்த ஆர்.எஸ்.புரம் போலீஸார் மற்றும் பல்கலைக்கழக நிர்வாகத்தினர் மாணவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். எனினும் இந்தப் போராட்டத்துக்கு இதுவரை முடிவு எட்டப்படவில்லை.
 
இதுகுறித்துப் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் தரப்பில் கூறும்போது, ‘‘அரியர் தேர்வில் வேண்டுமென்றே எங்களை பெயில் ஆக்கியுள்ளனர். தேர்வில் எப்படி 80 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெறாமல் இருக்க முடியும்?
 
மதிப்பெண் சான்றிதழில் முறையாக விவரங்கள் குறிப்பிடப்படவில்லை. மாணவர்களின் பெயர் இருக்குமிடத்தில் இந்திய ஸ்டேட் வங்கியின் பெயர் இடம்பெற்றுள்ளது. ஆன்லைன் தேர்வு எழுதும்போது, ஏதாவது ஒரு மாணவர் முறைகேட்டில் ஈடுபட்டால் பீப் ஒலி எழுப்பப்படும். மூன்று முறை பீப் ஒலி வந்தால்தான், முறைகேட்டில் ஈடுபட்டதாகக் கருதப்படும். ஆனால் எங்களுக்கு அப்படி எதுவும் நடக்கவில்லை. 
 
ஒரே நாளில் அதிகபட்சமாக 4 அரியர் தேர்வுகள் கூட நடத்தப்படுகின்றன. 4 தேர்வுகளை ஒரே நாளில் எப்படி எழுதுவது? இதனால் மாணவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளனர். 
 
விடைத்தாள்களை மறு மதிப்பீடு செய்ய வேண்டும் என்று கேட்டால், அதற்கான பதில் பல்கலைக்கழகத்திடம் இருந்து வரத் தாமதமாகிறது. அடுத்த அரியர் தேர்வின்போதே மறுமதிப்பீடு முடிவுகள் வெளியாகின்றன. இதனால் பல்கலைக்கழக நிர்வாகம் விரைவில் எங்களின் தேர்வுத் தாள்களை மீண்டும் மதிப்பீடு செய்து, சரியான மதிப்பெண்களை வழங்க வேண்டும். இல்லையெனில் தொடர் போராட்டத்தை நடத்த முடிவு எடுத்துள்ளோம்’’ என்று தெரிவித்தனர். 


 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...