???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 இடியால் சேதமான தாஜ்மஹாலின் பிரதான கல்லறை 0 தியேட்டர்கள் திறக்க அனுமதி வேண்டும்: அரசுக்கு பாரதிராஜா கடிதம் 0 இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,82,143 ஆக உயர்வு! 0 'மத்திய அரசு ரூ.7,500, மாநில அரசு ரூ.5 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும்' 0 காய்ச்சல், இருமல் இருந்தால் பஸ்சில் அனுமதி இல்லை: தமிழக அரசு 0 ஒரே நாளில் 1,149 பேருக்கு கொரோனா: 13 பேர் உயிரிழப்பு 0 இது மிகவும் கவனமாக இருக்க வேண்டிய நேரம்: பிரதமர் மோடி 0 சென்னையில் இருந்து வெளியே சென்றால் கட்டாய கொரோனா பரிசோதனை 0 தமிழகத்தில் ஒரே நாளில் 938 பேருக்கு கொரோனா தொற்று உறுதி 0 நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் ஜூன் 30-ந் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு: உள்துறை அமைச்சகம் 0 இந்தியாவில் கொரோனா பாதிப்பு 173,763 ஆக உயர்வு 0 தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 20 ஆயிரத்தை தாண்டியது! 0 சின்னத்திரை படப்பிடிப்புகளில் 60 பேர் வரை பணியாற்றலாம்: முதலமைச்சர் உத்தரவு 0 தீபாவும், தீபக்கும் ஜெயலலிதாவின் நேரடி வாரிசுகள்: தீர்ப்பில் திருத்தம் செய்த உயர்நீதிமன்றம் 0 பொன்மகள் வந்தாள்- விமர்சனம்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

அமெரிக்காவில் கொரோனாவுக்கு அதிகம் பலியாகும் கறுப்பினத்தவர்கள்!

Posted : வெள்ளிக்கிழமை,   ஏப்ரல்   17 , 2020  05:05:47 IST


Andhimazhai Image
 
 
தினமும் ஆயிரக்கணக்கில் அமெரிக்கர்கள் கொரோனாவுக்குப் பலியாகிக் கொண்டிருக்கின்றனர். உலகின் மிகப்பெரிய பணக்கார நாடு, இப்படி தவிப்பது பரிதாபமாக உள்ளது. இந்நிலையில் இறக்கும் அமெரிக்கர்களில் பெருமளவு எண்ணிக்கையில் இருப்பது கறுப்பினத்தவரான ஆப்பிரிக்க அமெரிக்கர்கள்தான் என்ற செய்தியை ராய்ட்டர் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது. வெள்ளைக்காரர்களும் கொரோனாவுக்கு தப்பவில்லை. இருப்பினும் கறுப்பினத்தவர்களிடையே பாதிப்பு அதிகம். உதாரணத்துக்கு இல்லினாய்ஸில் கொரோனா பாதித்தவர்களில் 30% ஆப்பிரிக்க அமெரிக்கர்கள். இறந்தவர்களில் இவர்களே 40%. ஆனால் அம்மாநிலத்தில் வாழும் மக்கள் தொகையில் இவர்கள் 14.6 சதவீதம் மட்டுமே.
 
மிச்சிகனில் 14% சதவீத ஆப்பிரிக்க அமெரிக்கர்களே வாழ்கின்றனர். இருப்பினும் இறந்தவர்களில் 40% இவர்கள்தான். அதிகமாக பாதிக்கப்பட்ட நியூயார்க் போன்ற பல மாநிலங்கள் பாதிக்கப்பட்ட, இறந்தவர்களை இனம் வாரியாக அடையாளப்படுத்தும் தகவல்களை வெளியிடாமல் உள்ளன.
ஆனால் முழுத்தகவல் வெளியாகும்போது கறுப்பினத்தவர்கள் அதிகமாக மரணமடைந்திருப்பர் என்கிற தகவல் உறுதியாகும் என நம்பப்படுகிறது.
 
 ஆஸ்துமா உள்ளிட்ட நுரையீரல் நோய்களால் பாதிக்கப்பட்டோர், சர்க்கரை, இதயநோயால் பாதிக்கப்பட்டோர் கொரோனாவால் தீவிரமாக பாதிக்கப்படுவர் என்கிறது உலக சுகாதார நிறுவனம். அமெரிக்காவில் இன ஒடுக்குமுறையால் பாதிக்கப்பட்ட கறுப்பினத்தவர்கள், வெள்ளையர்களுடன் ஒப்பிடும்போது இந்நோய்களால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். சுகாதாரம், வாழிடம் போன்ற வசதிகள் குறைவாகப் பெற்றிருக்கும் இம்மக்கள், இப்போது கொரோனாவாலும் தாக்குதலுக்குள்ளாகி உள்ளனர். பொருளாதார, சுற்றுச்சூழல் காரணிகள் இதில் முக்கியப்பங்கு வகிக்கின்றன.
 
இந்த தொற்றை ஒட்டி அமெரிக்காவில் இன்னும் பரிசோதனைக் கருவிகள் பரவலாக்கப்படவில்லை. இந்நிலையில் எங்கெங்கெ அதிகமாக கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என்று ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. பொருளாதாரத்தில் மேம்பட்ட நிலையில் இருக்கும் மக்கள் வசிக்கும் பகுதிகளில் அதிகம் கருவிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன என்று அது கூறுகிறது.
 
இன ஒதுக்கலால் ஆப்பிரிக்க அமெரிக்க இனத்தவர் தொடர்ச்சியாக பொருளாதாரத்தின் கீழ் மட்டத்தில் இருப்பதால் இதை அவர்கள் எதிர்கொள்ள வேண்டி உள்ளது.
 
கறுப்பினத்தவருக்கோ, ஏழ்மை நிலையில் கிருமிகளுடன் வாழ்பவருக்கோ கொரோனா வராது என்று யாரும் சொன்னால் நம்பாதீர்கள். யாருக்கும் எதிர்ப்பு சக்தி இல்லை!
 
சரி, இந்தியாவில் கோரோனா பெருமளவு பரவினால் எந்த அடுக்கைச் சேர்ந்தவர்கள் அதிகம் பாதிக்கப்படுவர்? யூகிக்க முடிகிறதா?
 
 


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...