???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு: ப.சிதம்பரத்தின் ஜாமீன் மனு மீது இன்று தீர்ப்பு 0 ஜம்மு காஷ்மீரில் விரைவில் தேர்தல்; துணை நிலை ஆளுநர் தகவல் 0 மீண்டும் சர்ச்சையில் சிக்கியிருக்கும் பாடகி சுசித்ரா! 0 நள்ளிரவில் தண்டவாளத்தில் அமர்ந்து குடி: ரயில் மோதி 4 மாணவர்கள் உயிரிழப்பு 0 சென்னை ஐஐடியில் கடந்த 8 ஆண்டுகளில் 12 மாணவர்கள் தற்கொலை! 0 சபரிமலையில் மகரவிளக்கு பூஜைக்காக நாளை நடை திறப்பு 0 அரசியல் வெற்றிடம்: ரஜினி கருத்துக்கு கமல் ஆதரவு 0 தமிழ்நாட்டின் மீதான நம்பிக்கை தகர்க்கப்பட்டுள்ளது: மு.க.ஸ்டாலின் வேதனை 0 கர்நாடகா: பா.ஜ.க சார்பில் போட்டியிடும் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 13 எம்.எல்.ஏக்கள் 0 ’இனி எச்சரிக்கையாக பேசுங்க ராகுல்’: உச்சநீதிமன்றம் அறிவுரை 0 ரஃபேல் மறுசீராய்வு வழக்கு தள்ளுபடி! 0 ரோமுக்குப் போனாலும் ரோகம் தீராது...படித்ததும் கிழித்ததும் பாகம் - 2- பாமரன் எழுதும் தொடர்- 11 0 அண்ணன் - தங்கையாக ஜோதிகா, சசிகுமார்! 0 விருதுநகரில் அதிமுக நிர்வாகி வெட்டி கொலை! 0 தமிழக முதல்வரின் பதில் வேதனை அளிக்கிறது: திருமாவளவன்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

அயோத்தி: வரைபடத்தைக் கிழித்த வழக்கறிஞர்! உச்சநீதிமன்றத்தில் பரபரப்பு!

Posted : வியாழக்கிழமை,   அக்டோபர்   17 , 2019  04:47:54 IST


Andhimazhai Image
உச்சநீதிமன்றத்தில் சினிமா காட்சிகூட தோற்கும் அளவுக்கு ஒரு நிகழ்ச்சி நடந்திருக்கிறது. அயோத்தி வழக்கில் நேற்று நடைப்பெற்ற இறுதி வாதத்தின்போது இசுலாமிய அமைப்பு தரப்பு வழக்கறிஞர் ராஜீவ் தவான், இந்து தரப்பு வழக்கறிஞர் காட்டிய ஒரு வரைப்படத்தை கிழித்தெறிந்துவிட்டார்.
 
உச்ச நீதிமன்றத்தில் ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வில் நேற்று அயோத்தி வழக்கு தொடர்பான இருதரப்பின் இறுதி வாதம் நடைப்பெற்றது. அப்போது, இந்து மகாசபா தரப்பு வழக்கறிஞர் விகாஸ் சிங் அயோத்தியில் ராமர் பிறந்ததாக நம்பப்படும் பகுதியின் வரைப்படம் ஒன்றை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.
 
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த இசுலாமிய தரப்பு வழக்கறிஞர் ராஜீவ் தவான், இதுபோன்ற தரவுகளை சமர்ப்பிக்க கூடாது என்றார். பதிலுக்கு விகாஸ் சிங்கும் தான் அந்த வரைபடத்தை அடிப்படையாக வைத்து வாதிடப்போவதில்லை என்றார்.  நீதிபதிகளும் தவான் தமது ஆட்சேபனையை பதிவு செய்யலாம். வேண்டுமானால் அதைக் கிழிக்கலாம்’ என கூறினர். ஒரு பேச்சுக்கு நீதிபதிகள் அப்படிக்கூறியதும், தவான் அந்த வரைப்படத்தை வாங்கிஉடனே  அதனை கிழித்தெறிந்தார்.
 
வழக்கறிஞர் தவானின் இந்த செயல்பாடு நீதிமன்றத்தில் பரபரப்பை ஏற்படுத்தும் விவகாரமாக மாறியது. ராஜீவ் தவான் நீதிமன்றத்தில் இவ்வாறு நடந்துக்கொள்வது ஒன்றும் புதிதல்ல.  நீதிமன்றத்தில் தடாலடியாக நடந்துக்கொள்வது, நீதிபதிகளிடத்தில் அதிரடியாக பேசுவது தான் தவானின் வழக்கம்.
 
அயோத்தி வழக்கிலும் இறுதிக்கட்ட வாதங்கள் நடைப்பெற்ற நாட்களில் வழக்கறிஞர் தவான் தனது வழக்கமான பாணியை கடைப்பிடிக்கவே செய்திருக்கிறார். அதன் இறுதியாகதான் நேற்று அவரது வரைபடம் கிழிப்பு சம்பவம் நடத்தப்பட்டிருக்கிறது. இதுகுறித்து ஒரு செய்தியாளர் என்ன இப்படி செய்துவிட்டீர்களே? எனக் கேட்க,’ நீதிபதி தான் உங்களுக்கு இந்த வரைபடம் வழக்குக்கு பொருத்தமற்றதாக தோன்றினால் கிழித்துவிடலாம்’ என்றார், நான் கிழித்தேன் என சொல்லியிருக்கிறார் தவான்.
 
விசாரணையே இப்படி இருக்கிறதே.. தீர்ப்பு வரும்போது எப்படி இருக்குமோ? 


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...