அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 எட்டாவது முறை பீகார் முதலமைச்சராகப் பதவியேற்றார் நிதிஷ்குமார்! 0 பிளவுகளைக் கடந்து நிச்சயமாக அதிமுக ஒன்றிணையும் – சசிகலா 0 ஒன்றாகத் தேர்வு எழுதி, ஒன்றாகத் தேர்ச்சி பெற்று, அரசு வேலைக்கு செல்லும் தாய் – மகன்! 0 பிரியங்கா காந்திக்கு மீண்டும் கொரோனா தொற்று உறுதி! 0 போதைப் பொருள் விற்பவர்கள் சொத்துகள் முடக்கப்படும் – முதலமைச்சர் 0 நிதிஷ் குமார் செய்தது நம்பிக்கை துரோகம்: பா.ஜ.க. 0 கள்ளக்குறிச்சி கலவர வழக்கில் கைதான 64 பேருக்கு நிபந்தனை ஜாமீன் 0 அரசியல் பேச ஆளுநர் மாளிகை கட்சி அலுவலகம் அல்ல: சிபிஐ(எம்) கண்டனம் 0 முல்லை பெரியாறு அணை பாதுகாப்பாக உள்ளது: மு.க.ஸ்டாலின் பதில் 0 பீகாரை போல் ஜனநாயக சக்திகள் ஒன்றிணைய வேண்டும்: திருமாவளவன் 0 நான் பேசியது சட்டத்துக்கு புறம்பானது இல்லை: கனல் கண்ணன் முன்ஜாமீன் கோரி மனுத்தாக்கல் 0 செஸ் ஒலிம்பியாட்: தங்கம் வென்ற தமிழக வீரர்கள்! 0 ஆட்சி அமைக்க உரிமை கோரினார் நிதீஷ் குமார்! 0 அதிமுகவின் முதல் எம்பியான மாயத்தேவர் காலமானார்! 0 அரசியல் அலுவலகமா ஆளுநர் மாளிகை? கே.பாலகிருஷ்ணன் கண்டனம்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

மீண்டும் ஒற்றைத்தலைமை.. என்னவாகும் அ.தி.மு.க.வின் எதிர்காலம்?

Posted : வெள்ளிக்கிழமை,   ஜுன்   17 , 2022  20:55:16 IST


Andhimazhai Image
ஆடுபுலி ஆட்டம்போல ஆகிவிட்டது, அ.தி.மு.க.வில் தொடரும் தலைமை விவகாரம். 
 
ஊழல் வழக்கில் நான்கு ஆண்டுகள் சிறைவாசம் இருந்துவிட்டு சசிகலா திரும்பியபோது, அவரை அ.தி.மு.க. வரவேற்கவில்லை. சிறைக்குச் செல்லும் முன்னர் அதே சசிகலாவுக்கு அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளர் நாற்காலியைத் தந்து, அவரின் காலில் விழுந்த புள்ளிகளே, தலைகீழாக மாறிக்கொண்டனர். 
 
அ.தி.மு.க. அரசாங்கத்தைக் கவிழ்ப்பதற்காக தி.மு.க.வுடன் கைகோர்த்த அந்தக் கட்சியினரே, பின்னர் சமாதானம் ஆகி அமைச்சரவையிலே ஒன்றாகிக் கலந்தனர் என்பதெல்லாம் பழைய கதை. 
ஆனாலும், அப்போது சென்னையை அடுத்த கூவத்தூரில் சசிகலா எனும் அதிகார மையத்துக்கு கீழ்ப்படிந்து, அண்டி பதவியைப் பெற்றனர் என இப்போது சசிகலா எதிர்ப்பாளர்கள் மீது மாற்றுத் தரப்பினர் காட்டமாகப் பேசுகின்றனர். தாக்குதல் முயற்சி நடத்தப்படும் அளவுக்கு அசாதாரணமான நிலைமை ஏற்பட்டுள்ளது. 
 
அ.தி.மு.க. தலைமை அலுவலகமான எம்ஜிஆர் மாளிகையில் ஊடகத்தினரிடம் பேசிவிட்டுப் புறப்பட்ட கட்சியின் அமைப்புச்செயலாளர் ஜெயக்குமார் வாகனத்தின் மீது சில மகளிர அணி நிர்வாகிகள் ஆவேசத்துடன் நெருங்கி ஆபாசமாகப் பேசினர். 
 
வரும் 23ஆம் தேதியன்று அ.தி.மு.க. பொதுக்குழு கூடவுள்ள நிலையில், கடந்த 14ஆம் தேதியன்று தலைமைக்கழகத்தில் மாவட்டச்செயலாளர்கள் கூட்டம் நடத்தப்பட்டது. பொதுக்குழுக் கூட்டத்திற்கு கட்சியின் முன்னாள் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் முதலிய பிரமுகர்களை சிறப்பு அழைப்பாளர்களாக இந்த முறை அழைக்கவில்லை. அதற்கு ஏற்பட்டுள்ள அதிருப்தியை மாவட்டச்செயலாளர்கள் சமாளிக்கவேண்டும் என்பதே அக்கூட்டத்தில் தலைவர்கள் வலியுறுத்திய சங்கதி. 
 
முன்னறிவிக்கப்படாமல் அந்தக் கூட்டத்தில், முன்னாள் அமைச்சர் மாதவரம் மூர்த்தி எழுந்து, கட்சிக்கு ஒற்றைத் தலைமை வேண்டும் எனப் பேச, மூன்று நாள்களாக ஒட்டுமொத்தக் கட்சியிலும் அதைப் பற்றிய பரபரப்பு தொடர்கிறது. 
 
ஒற்றைத்தலைமை வேண்டும்; அது கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமிதான் என ஒரு பக்கமும், அப்படி ஒன்று தேவையில்லை; தவறானது என இன்னொரு பக்கம் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அவராகவே களமிறங்கியும் தூள்கிளப்புகின்றனர்.
 
”ஜெயலலிதாவால் முதலமைச்சர் நாற்காலியில் இரு முறை உட்காரவைக்கப்பட்டேன்” என இன்றைக்கும் ஓ.பன்னீர்செல்வம் கூறும்நிலையில், அ.தி.மு.க.வில் கூடுதல் ஆதரவு எடப்பாடி பழனிசாமிக்குதான் என பரவலாகக் கூறப்படுகிறது. இதன் தொடர்ச்சியாகவே, கட்சியின் ஒற்றைத்தலைமையாக பழனிசாமி வரவேண்டும் என்ற பேச்சும் எழுந்துள்ளது. 
 
ஓ.பன்னீரின் தகவலின்படி, அவருக்கே சொல்லப்படாமல், வழக்கத்துக்கு மாறான முறையில், மாவட்டச்செயலாளர் கூட்டத்தில் மாதவரம் மூர்த்தி முதலியவர்களின்  பேச்சு அனுமதிக்கப்பட்டுள்ளது. இதேபாணியில் வரும் பொதுக்குழுவிலும் பழனிசாமியை ஒற்றைத்தலைமையாக்க கட்சிக்குள் வேலைகள் நடந்துவருகின்றன என்பது தகவல். 
 
ஆனால், இன்றுவரை இதைப்பற்றி மற்றவர்கள் பேச, தான் திட்டவட்டமாக எதையும் கூறாமல் இருந்துவருகிறார், எடப்பாடி பழனிசாமி. 
 
இந்த விவகாரம் குறித்து ஊடகத்தினரைக் கூட்டிப் பேசிய பன்னீர்செல்வம், பிரதமர் மோடி வலியுறுத்தியதாலும்தான் துணைமுதலமைச்சர் ஆவதற்கு, தான் ஒப்புக்கொண்டதாகக் கூறியதும் முக்கியத்துவம் பெற்றுள்ளது.  
 
எம்ஜிஆர், ஜெயலலிதா காலங்களில் கட்சிக்குள் பிரச்னைகள் ஏற்பட்டபோதும், தலைமைக்கான பிரச்னையாகவோ நெருக்கடியாகவோ எதுவும் இருந்ததில்லை. ஆனால், இப்போதைய நிலவரம் அந்தக் கட்சியின் இருப்பைப் பற்றியே கேள்வி எழுப்பியுள்ளது. கட்சியின் எதிர்காலம் குறித்து உள்கட்சி மட்டத்திலேயே பரவலான அதிருப்தி வெளிப்படுகிறது. 
 
நீண்ட காலமாக அ.தி.மு.க. விவகாரங்களை கவனித்துவரும் மூத்த பத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசனிடம் இது பற்றிக் கேட்டோம். 
 
“ அதிமுகவைப் பொறுத்தவரை தனி மனிதர் கட்சிதான். ஆனால் எல்லா சமூகத்தினருக்கும் பொதுப்படையானதாக இருந்தது. ஜெயலலிதா காலத்தில் குறிப்பிட்ட சாதியின் செல்வாக்கு என முத்திரை விழுந்தது. ஆனால் அதை முன்னிட்டு பெரிய பாதகம் எதுவும் இல்லை. அ.தி.மு.க.வில் தலைமையில் திட்டமிட்டு எதுவும் நடப்பதில்லை. அங்கு என்னென்ன நடக்கும் என கணிக்கமுடியாதபடிதான் இதுவரை எல்லாம் நடந்திருக்கிறது... ஓ.பன்னீர்செல்வமோ, எடப்பாடி பழனிசாமியோ முதலமைச்சர் ஆவதற்கு முன்னர் அப்படி நடக்குமென யோசித்துப் பார்த்திருப்பார்களா..? ஜெயலலிதாவைப் போன்ற உடை, கொண்டை என்ற சசிகலாவின் முயற்சியை தொண்டர்கள் ஏற்கவில்லை. சிறைக்குப் போனது, வந்தது... இந்தக் காலத்தில் தொண்டர்களிடம் சசிகலா மீது கோபமும் இல்லை, ஈர்ப்பும் இல்லை.  ஆனால் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் சசிகலா பக்கம் சாய்ந்தாற்போல நடப்புகள்... இப்போது ஒற்றைத்தலைமையாக ஓ.பி.எஸ். வந்தால் சசிகலாவிடம் கட்சியைக் கொடுத்துவிட்டுப் போய்விடுவார் என்கிற எண்ணமே இருக்கிறது. 
 
எடப்பாடி வந்தால் பலமான எதிர்க்கட்சியாக இருந்தால் அது கட்சிக்கு பலம். எப்படி எம்ஜிஆரும் கருணாநிதியும் அவர்கள் மட்டுமே மாறிமாறி என அரசியலை வைத்திருந்தார்களோ அப்படி இருக்கமுடியும். அப்படி இல்லாமல் பா.ஜ.க.வுக்கு அடிமைபோல நடந்துகொண்ட பழைய காட்சி தொடர்ந்தால், அ.தி.மு.க. கொஞ்சம் கொஞ்சமாகக் கரைந்துவிடும். இப்போதே பா.ஜ.க. தி.மு.க. எதிர்ப்புக் களத்தை தன்வயமாக்க தீவிரமாக முயற்சி செய்வது முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டும். அ.தி.மு.க.வுக்கு மட்டுமல்ல இதனால் தி.மு.க.வுக்கும்கூட வருங்காலத்தில் பாதகமே.” என விவரிக்கிறார், பத்திரிகையாளர் வெங்கடேசன். 
 
- இர.இரா.தமிழ்க்கனல் 
 
 

English Summary
Admk's single leadership issue

 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...