???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 ஏப்ரல் 5, இரவு 9 மணிக்கு விளக்கேற்றுங்கள்! மோடி வேண்டுகோள்! 0 இந்தியாவில் கொரோனா பாதிப்பில் தமிழகம் 2-வது இடம்! 0 அமெரிக்காவில் அதிவேகமாக பரவும் கொரோனா! 0 ஏப்ரல் 5-ம் தேதி இரவு 9 மணிக்கு மாடியில் விளக்கு ஏற்றுங்கள்: பிரதமர் 0 100 நாள் பணியாளர்களுக்கு 21 நாள் ஊதியத்தை வழங்குக: சோனியா காந்தி 0 நாக்பூரிலிருந்து நடந்து வந்த தமிழக தொழிலாளி உயிரிழப்பு! 0 கொரோனா பயத்தால் சாத்தூரில் ஒருவர் உயிரிழப்பு 0 12-ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி மீண்டும் ஒத்திவைப்பு 0 கொரோனா வைரஸ் பரவும் வேகம் அதிகரிப்பு: உலக சுகாதார அமைப்பு 0 கொரோனா வைரசுக்கு பலி எண்ணிக்கை 47 ஆயிரத்தை தாண்டியது 0 சிபிஎஸ்இ பள்ளிகளில் 1 முதல் 8 வகுப்பு வரை அனைத்து மாணவர்களும் தேர்ச்சி 0 மானியம் இல்லா சிலிண்டரின் விலை குறைப்பு 0 விப்ரோ குழுமம் ரூ.1,125 கோடி நிதியுதவி 0 வீடுதேடி வரும் ரேஷன் கடையில் ₹ 1000 உதவித்தொகை டோக்கன் 0 மத வழிபாட்டு தலங்களில் கூடிக் குழப்பத்தை ஏற்படுத்த இது நேரமல்ல: ஏ.ஆர்.ரஹ்மான்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

சிறுபான்மையினருக்கு எப்போதும் அரணாக இருப்போம்: அதிமுக அறிக்கை

Posted : வெள்ளிக்கிழமை,   பிப்ரவரி   21 , 2020  21:10:00 IST

அதிமுக ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளரும் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

அதில்,  "சிறுபான்மை சமூக மக்களின் நம்பிக்கைக்குரிய அரணாக அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் எப்போதும் செயல்படும். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக நிறுவனத் தலைவர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., கழக நிரந்தரப் பொதுச்செயலாளர் புரட்சித் தலைவி அம்மா ஆகிய இருபெரும் தலைவர்கள் கட்டிக் காத்த கழகமும், அவர்கள் வழியில் நடைபெறும் கழக அரசும், சிறுபான்மை மக்களின் நலன் காக்கும் சமத்துவ, சகோதரத்துவ கொள்கைகளை நிலைநாட்ட எப்பொழுதும் உறுதியாய் பாடுபடும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

சமூக விரோத சக்திகளும், பதவிக்கு வருவதற்காக பாதகச் செயல்களை மனசாட்சியின்றி துணிந்து செய்யும் சில எதிர்க்கட்சிகளும் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க முயற்சிப்பதை அனைவரும், குறிப்பாக இஸ்லாமிய சகோதர, சகோதரிகள் நன்கு புரிந்துகொள்ள வேண்டும்.

தமிழ் நாட்டில் நாளுக்கு நாள் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசுக்கு மக்களின் பேராதரவு பெருகி வருவதை பொறுத்துக்கொள்ள முடியாமல், பொய்ப் பிரச்சாரங்களைத் தூண்டிவிட்டு, இஸ்லாமிய சமூக மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்த தி.மு.க. முயற்சிப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.“ஒன்று எங்கள் ஜாதியே, ஒன்று எங்கள் நீதியே, உழைக்கும் மக்கள் யாவரும் ஒருவர் பெற்ற மக்களே” என்ற சகோதரத்துவ உணர்வில் ஆழமான நம்பிக்கை கொண்ட இயக்கம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம். இது உண்மையான மதச்சார்பற்ற இயக்கம். மதத்தின் பெயரால் மனிதர்களை பிளவுபடுத்தும் எண்ணம் துளியும் இன்றி, எல்லோரையும் சொந்த பந்தங்களாகவும், சகோதரர்களாகவும் நேசித்துப் பழகுவதுதான் தமிழ் மக்களின் வாழ்க்கை முறை.

அதுவே, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித் தலைவி அம்மா ஆகியோர் காட்டிய பாதை. புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் காலத்திலிருந்து அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசு, இஸ்லாமிய மக்களுக்கு பாதுகாவலனாகவும், அவர்களின் நலன் பேணும் நண்பனாகவும் செயல்பட்டு வருகிறது. வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் இஸ்லாமிய மக்களுக்கு தொண்டு செய்து வருவதும் கழக அரசுதான்.

கல்வியிலும், வேலைவாய்ப்பிலும், சமூகப் பாதுகாப்பிலும், பொருளாதார மேம்பாட்டிலும் சிறுபான்மை மக்களுக்கு உதவிட இன்னும் பல திட்டங்களை உருவாக்கி செயல்படுத்த அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசு துடிப்புடன் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

இஸ்லாமிய சமூகத்திற்கும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும் இடையே இருக்கும் நெருக்கமான உறவையும், புரிதலையும் பிரிக்க முயற்சிக்கும் சக்திகளை முறியடித்து, எல்லோரும் ஓரினமாக எழுச்சியுடன் முன்னேற்றம் கண்டிட, இஸ்லாமிய சகோதர, சகோதரிகள் ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக்கொள்கிறோம்.

அஸ்ஸாம் மாநிலம் சம்பந்தப்பட்ட தேசிய குடிமக்கள் பதிவேடு விவகாரம், உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி மேற்கொள்ளப்படும் நடவடிக்கையே தவிர, அது நாடு முழுவதற்கும் உரியது அல்ல. சிறுபான்மை சமூகத்தினர், குறிப்பாக இஸ்லாமியர்களுக்கு எதிரானது அல்ல என்று ஏற்கனவே மத்திய அரசு தெளிவுபடுத்தியுள்ளது. அஸ்ஸாம் தவிர, இதர மாநிலங்களுக்கான நடைமுறை வேறெந்த மாநிலத்திற்கும் மத்திய அரசால் வெளியிடப்படவில்லை.

இந்திய இறையாண்மை காப்பாற்றப்பட வேண்டும்; நீதிமன்ற உத்தரவுகளுக்கு ஏற்ப நடைபெறும் திட்டங்களுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்; அண்டை மாநிலங்களுடனும், மத்திய அரசுடனும் இயன்ற அளவு இணக்கமாய் இருந்து, தமிழ் நாட்டிற்குத் தேவையான திட்டங்கள் அனைத்தையும் நிறைவேற்ற வேண்டும் என்ற கொள்கையின் அடிப்படையில்தான் கழக அரசு செயல்படுகிறது.

கழக அரசுக்கு களங்கம் ஏற்படுத்தி குறுக்கு வழியில் அரசியல் ஆதாயம் தேட முயற்சிப்போரின் பொய்ப் பிரச்சாரங்களையும், விஷமச் செயல்களையும் புறந்தள்ளிவிட்டு, சமூக நல்லிணக்கம் காப்பாற்றப்பட அனைவரும் ஒத்துழைக்க வேண்டுகிறோம்.

தமிழ் நாட்டில் எந்தஒரு சிறுபான்மை சகோதர, சகோதரிக்கும் எவ்வித அநீதியும் இழைக்கப்படமாட்டாது. கழக அரசு சிறுபான்மையினருக்கு எதிரான எந்த ஒரு செயலையும் அனுமதிக்காது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் இஸ்லாமிய சமூகத்திற்கு என்றைக்கும் நண்பனாகவும், உற்ற தோழனாகவும் விளங்கும் என்று  தெரிவித்துக் கொள்கிறோம். சிறுபான்மை சமூக மக்கள் விழிப்பாகவும், விஷமப் பிரச்சாரங்களை செய்து சுயலாபம் அடைய சதித் திட்டம் தீட்டி செயல்படுவோரிடம் கவனமாகவும் இருந்து அமைதி காத்திட வேண்டுமென அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...