???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 சின்னத்திரை படப்பிடிப்பு மீண்டும் தொடக்கம் 0 ஓ.பி.சி. கிரிமிலேயர் பிரிவை முடிவு செய்வதில் தற்போதைய நிலை தொடரவேண்டும்: முதலமைச்சர் கடிதம் 0 சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தில் கூட்டாட்சி, மதச்சார்பின்மை பாடங்கள் நீக்கம்! 0 அரசுப் பள்ளி மாணவர்களுக்கும் ஆன்லைன் வகுப்புகள் 0 தனபாலுக்கு நோட்டீஸ் அனுப்ப உச்ச நீதிமன்றம் உத்தரவு 0 கொரோனா இன்று- தமிழகம் 3756 சென்னை 1261 0 கிரீமி லேயரை கணக்கிட சம்பளத்தை கருத்தில் கொள்ளக்கூடாது- ஸ்டாலின் பிரதமருக்கு கடிதம்! 0 மின் துறை அமைச்சர் தங்கமணிக்கு கொரோனா! 0 எடப்பாடி பழனிசாமி இரவு, பகல் பாராமல் போராடி வருகிறார்: அமைச்சர் வேலுமணி 0 சாத்தான்குளம் தந்தை, மகன் மரண வழக்கை சி.பி.ஐ.விசாரணைக்கு ஏற்றது! 0 என்எல்சிக்கு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் 0 சிபிஎஸ்இ பாடத்திட்டம் 30 சதவீதம் குறைப்பு: மத்திய அரசு அறிவிப்பு 0 பிரேசில் அதிபர் ஜேர் பொல்சனாரோவுக்கு கொரோனா தொற்று உறுதி 0 இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை மிக குறைவு: மத்திய அரசு 0 திருப்பதி கோயிலில் 60 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

விருதுநகரில் அதிமுக நிர்வாகி வெட்டி கொலை!

Posted : செவ்வாய்க்கிழமை,   நவம்பர்   12 , 2019  22:30:05 IST

விருதுநகர் அல்லம்பட்டி அண்ணா புதுத்தெருவைச் சேர்ந்தவர் சண்முகவேல் ராஜன். அதிமுக மாணவரணி அவைத்தலைவராக பொறுப்பு வகிக்கும் இவரை, வீட்டு வாசலில் வைத்து 7 பேர் கொண்ட மர்மகும்பல் சரமாரியாக வெட்டி படுகொலை செய்து விட்டு தப்பியோடியது. இந்தக் காட்சி அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

தகவலறிந்து சென்ற காவல்துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு இதே பகுதியைச் சேர்ந்த அருண் பாண்டியன் என்பவர் கொலை செய்யப்பட்டதற்கு பழிக்குப்பழியாக சண்முகவேல் ராஜன் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது. இது தொடர்பாக தனிப்படை அமைத்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...