செய்தி உங்கள் நண்பருக்கு அனுப்பப்பட்டது
செய்தி உங்கள் நண்பருக்கு அனுப்ப முடியவில்லை. சிரிது நேரம் கழித்து முயற்சிக்கவும்..
நண்பருக்கு மின்னஞ்சல் செய்

காற்புள்ளிகளால் பிரித்து, செல்லுபடியாகும் மின்னஞ்சல் முகவரிகளை உள்ளிடவும்
அதிகபட்ச வரம்பான 200 எழுத்துக்குறியை மீறியது

செய்தியை உள்ளிடவும்
நாஞ்சில் சம்பத் மருத்துவமனையில் அனுமதி
தமிழ்நாட்டின் சிறந்த பேச்சாளர்களில் ஒருவரான நாஞ்சில் சம்பத் மதிமுகவின் கொள்கை பரப்புச் செயலாளராக இருந்தவர். வைகோவுடன் ஏற்பட்ட கருத்து…
மன்னிக்கவும், உங்கள் மின்னஞ்சலை எங்களால் அனுப்ப முடியவில்லை. சிறிது நேரம் காத்திருந்து, மீண்டும் முயற்சிக்கவும்.
நாஞ்சில் சம்பத் மருத்துவமனையில் அனுமதி
Posted : புதன்கிழமை, ஜனவரி 25 , 2023 11:06:05 IST
தமிழ்நாட்டின் சிறந்த பேச்சாளர்களில் ஒருவரான நாஞ்சில் சம்பத் மதிமுகவின் கொள்கை பரப்புச் செயலாளராக இருந்தவர். வைகோவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அக்கட்சியில் இருந்து விலகி 2012ஆம் ஆண்டு ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். அவருக்கு அங்கு கொள்கை பரப்பு துணைச் செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டது. ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு சசிகலா ஆதரவு நிலைப்பாட்டை எடுத்தார். தினகரன் அமமுகவை ஆரம்பித்த நிலையில் அதில் அண்ணாவும் திராவிடமும் இல்லை எனக் கூறி கட்சியில் சேரவில்லை.
பின்னர் அரசியலில் இருந்தே விலகுவதாக அறிவித்துவிட்ட நாஞ்சில் சம்பத், சமீப காலமாக திமுக நடத்தும் கூட்டங்களில் கலந்துகொண்டு திராவிட இயக்கம் சார்ந்து பேசி வருகிறார். திரைப்படங்களில் நடிப்பதோடு இலக்கிய நிகழ்வுகளிலும் பங்கெடுத்து வருகிறார்.
இந்த நிலையில் நாஞ்சில் சம்பத் உடல் நலக்குறைவு காரணமாக கன்னியாகுமரி மாவட்டம் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.
|