அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 கொரோனா விதிமுறையை மீறிய கமல்ஹாசன்: விளக்கும் கேட்கும் தமிழக அரசு! 0 அம்பேத்கர் வழியில் உறுதியேற்போம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! 0 அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு 252 வேட்புமனுக்கள் தாக்கல்! 0 நாகலாந்து துப்பாக்கிச் சூடு: மத்திய அமைச்சர்களுடன் பிரதமர் ஆலோசனை! 0 நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை கைப்பற்றிய இந்திய அணி! 0 கோவை வேளாண். பல்கலையில் 80% பேர் தோல்வி; மாணவர்கள் போராட்டம்! 0 நாகலாந்து: தீவிரவாதிகள் என நினைத்து ராணுவம் தாக்குதல் 13 அப்பாவி மக்கள் சுட்டுக்கொலை! 0 ரஷ்ய அதிபர் புதின் இன்று டெல்லி வருகை 0 ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 21-ஆக உயர்வு 0 எடப்பாடி பழனிசாமி கார் மீது தாக்குதல்: டிடிவி தினகரன் விளக்கம் 0 எடப்பாடி பழனிசாமி கார் மீது தாக்குதல்! 0 கன்னத்தில் அறைந்தார்: நடிகர் விஜய்சேதுபதி மீது புதிய வழக்கு! 0 போராடும் விவசாயிகளை பேச்சுவார்த்தைக்கு அழைத்த அமித்ஷா! 0 தமிழகத்தில் 13 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு! 0 சென்னையில் தக்காளி விலை ரூ.90 வரை விற்பனை
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

நடக்க ஆரம்பிக்கும் நடிகை யாஷிகா!

Posted : சனிக்கிழமை,   அக்டோபர்   30 , 2021  17:53:14 IST

95 நாட்களுக்குப் பிறகு நடக்க ஆரம்பித்துள்ளேன் என நடிகை யாஷிகா ஆனந்த் தெரிவித்துள்ளார்.

கடந்த ஜூலை மாதம் மகாபலிபுரம் அருகே தனது தோழிகளுடன் நடிகை யாஷிகா சென்ற கார் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் யாஷிகாவுடன் பயணித்த அவரது தோழியான வள்ளிச்செட்டி பவானி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதனையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த யாஷிகாவுக்கு இடுப்பு மற்றும் கால் பகுதியில் எலும்புகள் உடைந்தன. இதற்காக மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வந்தார். தனது உடல்நிலை குறித்து அவ்வப்போது உருக்கமாகப் பதிவிட்டு வந்தார்.

இந்தநிலையில், அவர் கைபிடி உதவியுடன் நடக்க முயற்சித்து வருகிறார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள விடியோவில், குழந்தையின் நடை. 95 நாட்களுக்கு பிறகு நம்பிக்கை, வேண்டுதல்களால் அடியெடுத்து வைத்திருக்கிறேன். என்னை மிகவும் நன்றாகப் பார்த்துக்கொண்ட ரசிகர்களுக்கு நன்றி. என்னை நன்றாகக் கவனித்துக்கொண்ட செவிலியர் ஹேமா மற்றும் பிஸியோதெரபிஸ்ட்களுக்கு நன்றி” என்று குறிப்பிட்டுள்ளார்.

 



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...