செய்தி உங்கள் நண்பருக்கு அனுப்பப்பட்டது
செய்தி உங்கள் நண்பருக்கு அனுப்ப முடியவில்லை. சிரிது நேரம் கழித்து முயற்சிக்கவும்..
நண்பருக்கு மின்னஞ்சல் செய்

காற்புள்ளிகளால் பிரித்து, செல்லுபடியாகும் மின்னஞ்சல் முகவரிகளை உள்ளிடவும்
அதிகபட்ச வரம்பான 200 எழுத்துக்குறியை மீறியது

செய்தியை உள்ளிடவும்
தடுப்பூசி போட்டுக்கொண்ட நடிகை நக்மாவுக்கு கொரோனா பாதிப்பு
இந்தியா முழுவதும் கொரோனா தொற்றின் 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக மகாராஷ்டிரா மாநிலத்தில் ஆரம்பக் கட்டத்தில்…
மன்னிக்கவும், உங்கள் மின்னஞ்சலை எங்களால் அனுப்ப முடியவில்லை. சிறிது நேரம் காத்திருந்து, மீண்டும் முயற்சிக்கவும்.
தடுப்பூசி போட்டுக்கொண்ட நடிகை நக்மாவுக்கு கொரோனா பாதிப்பு
Posted : வியாழக்கிழமை, ஏப்ரல் 08 , 2021 09:51:15 IST
இந்தியா முழுவதும் கொரோனா தொற்றின் 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக மகாராஷ்டிரா மாநிலத்தில் ஆரம்பக் கட்டத்தில் இருந்ததைப் போலவே பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மும்பையில் வசித்து வரும் திரைப்பிரபலங்கள் பலரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஏற்கனவே அமீர் கான், மாதவன், அக்ஷய் குமார், ஆலியா பட், கத்ரீனா கைப் ஆகியோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில், தற்போது நடிகை நக்மாவும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்.
கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டதும் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பொற்று வருகிறார் நக்மா. கடந்த சில தினங்களுக்கு முன்னர் தான் நடிகை நக்மா கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
|