Posted : வியாழக்கிழமை, மார்ச் 18 , 2021 10:11:51 IST
அதிமுக கூட்டணியில் சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் நடிகை குஷ்பு சுந்தர் இன்று வேட்பு மனுத்தாக்கல் செய்கிறார்.
இது தொடர்பாக பாஜக சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் திருமதி குஷ்பு சுந்தர் , காலை 10 மணி அளவில் வள்ளுவர் கோட்டம் இடத்திலிருந்து ஊர்வலமாய் தொடங்கி
நுங்கம்பாக்கத்தில் உள்ள மாநகராட்சி அலுவலகத்தில் விளக்கு தொகுதிக்காக வேட்புமனு தாக்கல் செய்கிறார்.
அதனைத்தொடர்ந்து, கோயம்பேடு மெட்ரோ ரயில் தலைமையகம் எதிரில் உள்ள தமிழக பாஜக மாநில தேர்தல் பிற்பகல் 12.30 மணிக்கு பத்திரிக்கையாளர்களை சந்திக்கிறார்” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.