???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 மாணவர்கள் சாபம் உங்களை சும்மா விடாது: நீட் எதிர்ப்பு போராட்டத்தில் ஸ்டாலின் பேச்சு 0 சபாநாயகருடன் முதலமைச்சர் ஆலோசனை 0 தொழிலதிபரை மணந்தார் நடிகை பிரியாமணி 0 நேர்மையான ஆளுநருக்கு இது இலக்கணமல்ல: ராமதாஸ் 0 எம்எல்ஏக்களை சந்திக்க தினகரன் புதுச்சேரி பயணம் 0 தமிழகத்தில் நீட் ஒரு கல்வி புரட்சி : தமிழிசை பெருமிதம் 0 அமைச்சர்கள் அனைவரும் சென்னை வர முதலமைச்சர் திடீர் உத்தரவு 0 ரயில்வே வாரியத் தலைவராக அஷ்வனி லோகனி நியமனம். 0 நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ படிப்புக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு: நாளை கலந்தாய்வு. 0 ஆக்சிஜன் பற்றாக்குறையால் குழந்தைகள் பலியான சம்பவம்: 6 பேர் மீது எப்.ஐ.ஆர் பதிவு செய்ய உத்தரவு. 0 சொத்துக்குவிப்பு வழக்கு : சசிகலா சீராய்வு மனு தள்ளுபடி. 0 நீட் துரோகத்தை தமிழகம் மன்னிக்காது: ஸ்டாலின் 0 சபாநாயகரை முதலமைச்சராக்க வேண்டும்: திவாகரன் யோசனை 0 தமிழகம் இனி கடவுளிடம்தான் மேல்முறையீடு செய்ய முடியும்: நளினி சிதம்பரம் 0 நீட் விலக்கு: 4-ஆம் தேதி அனைத்துக் கட்சி ஆர்ப்பாட்டம்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

பாஜகவில் சேரும் திட்டம் இல்லை: நடிகை கௌதமி

Posted : சனிக்கிழமை,   அக்டோபர்   29 , 2016  22:50:34 IST

புற்றுநோய் மறுவாழ்வு தொண்டு நிறுவனம் தொடங்குவது குறித்து பிரதமர் நரேந்திர மோடியை வெள்ளிக்கிழமை சந்தித்து பேசினார் நடிகை கெளதமி. பிரதமரை சந்தித்தது குறித்து செய்தியாளர்களிடம் கௌதமி கூறுகையில், "லைஃப் அகெய்ன்' எனும் புற்று நோய் மறுவாழ்வு அமைப்பை தொடங்க உள்ளேன். இது குறித்து பேசவும் வாழ்த்து பெறவும் பிரதமரை சந்தித்தேன். அரசியல் ரீதியில் எதுவும் பேசவில்லை' என்றார்.

இந்நிலையில் பாஜகவில் சேருவது தொடர்பாக பிரதமருடன் கௌதமி பேசியதாக சில சமூக ஊடக இணையதளங்களில் செய்திகள் வெளியாயின. இது குறித்து "தினமணி' நிருபரிடம் கௌதமி கூறியதாவது: பிரதமரை சந்தித்து நான் தொடங்கவுள்ள அமைப்பு குறித்து மட்டும்தான் பேசினேன். பல ஆண்டுகளுக்கு முன்பு நான் பாஜகவில் உறுப்பினராக இருந்தேன். அதன் பிறகு நான் என்னை அக்கட்சியில் இருந்து விடுவித்துக் கொண்டேன். வேறு எந்த கட்சியிலும் நான் சேரவில்லை. எனக்கு எந்த எல்லைகளும் இல்லை. எனது மகளுக்கு தாயாகவும் தந்தையாகவும் இருக்க எனது வாழ்வை அர்ப்பணித்துள்ளேன். 24 மணி நேரமும் அதுதான் எனது கவனம். சமூக ஊடகங்களில் எனது சந்திப்பு பற்றி வதந்தி வெளிவருவது இயல்புதான். ஆனால் எனக்கு அதுபோன்ற எந்தத் திட்டமும் இல்லை என்றார் கௌதமி.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...