???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 உலகக்கோப்பை கால்பந்து: ஈரான் அணியை வென்றது ஸ்பெயின் 0 அரிசி உற்பத்தி குறித்து மாநில அரசு வெள்ளை அறிக்கை வெளியிடவேண்டும்: ஸ்டாலின் வலியுறுத்தல் 0 உலகக்கோப்பை கால்பந்து: உருகுவே அணி வெற்றி 0 சோனியா காந்தியுடன் தமிழக அரசியல் அவலங்கள் குறித்துப் பேசினேன்: கமல்ஹாசன் 0 பசுமை வழிச்சாலை திட்டத்தை அரசு உடனடியாக கைவிட வேண்டும்: வைகோ வலியுறுத்தல் 0 ஆறுமுகசாமி விசாரணை ஆணையம்: துக்ளக் ஆசிரியர் குருமூர்த்திக்கு சம்மன் 0 ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் பதவிக்காலம் நீட்டிப்பு 0 காஷ்மீர் விவகாரம்: பா.ஜ.க மீது சிவசேனா கடும் தாக்கு 0 திருத்தணி அருகே நெகிழ்ச்சி: அரசுப் பள்ளி ஆங்கில ஆசிரியரின் பணி மாறுதலை தடுத்த மாணவர்கள் 0 காவிரி நீர் ஆணையத்தை உடனே கூட்டுக: பிரதமருக்கு முதல்வர் கடிதம் 0 தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு குறித்து கருத்து தெரிவித்த நடிகை நிலானி கைது! 0 ராகுல் காந்தியுடன் கமல்ஹாசன் சந்திப்பு! 0 உள்ளாட்சி அமைப்புகளுக்கான மானியத் தொகை: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வலியுறுத்தல் 0 மிஸ் இந்தியாவாக தேர்வானார் சென்னை கல்லூரி மாணவி! 0 இன்று சர்வதேச யோகா தினம்: பிரதமர், அமைச்சர்கள் யோகா பயிற்சி!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

பாவனா கடத்தல் வழக்கு : சினிமாவையே மிஞ்சும் திருப்பங்கள் :

Posted : செவ்வாய்க்கிழமை,   ஜுலை   11 , 2017  05:03:42 IST


Andhimazhai Image

சினிமாவையே மிஞ்சும் வகையில்  பழிக்குப்பழி - வஞ்சத்துக்கு வஞ்சம் என நடிகை பாவனா கடத்தல் வழக்கில் நாளுக்கு நாள் பரபரப்பான திருப்பங்கள் நடந்து வருகிறது.

 

சித்திரம் பேசுதடி. இது பாவனா நடித்த முதல் தமிழ் சினிமா. அறிமுக படத்திலேயே தனது நடிப்பால் பேசப்பட்டார். அவர் ஜெயம் ரவியுடன் நடித்த `தீபாவளி' திரைப்படம் புகழை தேடி தந்தது.

 

அதன் பின்னர் தமிழில் பல்வேறு படங்களில் நடித்த பாவனா மலையாள திரைப்படங்களிலும் ஹீரோயினாக ஜொலித்துள்ளார்.

 

தமிழ் மற்றும் மலையாள ரசிகர்களால் பெரிதும் கவரப்பட்ட பாவனா கடந்த பிப்ரவரி மாதம் 17-ந்தேதி திடீரென காரில் கடத்தப்பட்டு பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பேரோடும், புகழோடும் திகழும் பிரபல நடிகைக்கே இந்த நிலையா? கேரளாவில் என்னதான் நடக்கிறது? என்றே எல்லோரும் பேசினர்.

 

பாவனாவை மிகவும் நேசித்த ரசிகர்கள் பலர் இந்த சம்பவத்தால் நொறுங்கியே போயிருப்பார்கள். அந்த அளவுக்கு பாவனா கடத்தல் சம்பவம் தமிழ், மலையாள திரைஉலகில் பரபரப்பு தீயைபற்ற வைத்தது.

 

இது தொடர்பாக பாவனாவின் கார் டிரைவர் மார்ட்டினை போலீசார் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்தனர். அப்போது பாவனா கடத்தலில் பல்சர் சுனில் என்பவன் மூளையாக செயல்பட்டது அம்பலமானது.

 

இதன் தொடர்ச்சியாக அடுத்த சில நாட்களிலேயே பல்சர் சுனில், வடிவாள் சலீம், பிரதீப், மணிகண்டன், விசிஸ் ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களின் பின்னணி என்ன? என்பது பற்றி விசாரித்த போதுதான் பாவனா கடத்தலில் காதல் மோதலால் ஏற்பட்ட பகை பின்னணியில் இருந்தது தெரியவந்தது.

 

 

இப்படி பாவனா வழக்கு விசாரணை பரபரப்பாக சென்று கொண்டிருந்த நேரத்தில்தான் பிரபல மலையாள நடிகரான திலீப்புக்கு பாவனா கடத்தலில் தொடர்பு இருப்பதாக தகவல்கள் கசிய தொடங்கின. அதே நேரத்தில் பாவனாவின் தனிப்பட்ட வாழ்க்கையை பாதிக்கும் வகையிலும் பரபரப்பான தகவல்கள் பரவின. பாவனா பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான போது செல்போனில் அந்த காட்சிகளையும் வக்கிர கும்பல் பதிவு செய்துள்ளது. இந்த காட்சிகள் அனைத்தும் பேஸ்புக்கில் வெளியாகிவிட்டதாகவும் ஒரு கும்பல் புதிதாக பீதியை கிளப்பியது. ஆனால் போலீஸ் விசாரணையில் அது வெறும் புரளி என்பது தெரிய வந்தது.

 

பாவனா கடத்தல் விவகாரத்தில் திலீப் பெயர் அடிபடத் தொடங்கியதும் மலையாளத்  திரை உலகின் முன்னணி ஹீரோக்களும் அதிர்ச்சியில் உறைந்து போனார்கள். இந்த விவகாரம் பற்றி விவாதிப்பதற்காக ‘அம்மா’ என்று அழைக்கக் கூடிய மலையாள நடிகர் சங்க கூட்டமும் கூட்டப்பட்டது. ஆனால் எந்த முடிவும் எடுக்காமலேயே அந்த கூட்டம் கலைந்தது. இதற்கு கேரள நடிகைகள் சங்கம் கடும் எதிர்ப்பு தெரிவித்து பாவனாவை அம்மா கைவிட்டு விட்டதாகவே குற்றம் சாட்டினர்.

 

இதற்கிடையே பாவனா கடத்தல் வழக்கு விசாரணையில் கொச்சி போலீசார் படிப்படியாக முன்னேறிக் கொண்டே இருந்தனர். கைதானவர்களிடம் நடத்திய விசாரணையிலும், திரை உலகினரிடம் நடத்தப்பட்ட விசாரணையிலும் பாவனாவுக்கும், திலீப்புக்கும் பகை இருந்தது வெளிச்சத்துக்கு வந்தது.

 

திலீப்பின் தூண்டுதலின் பேரிலேயே பாவனா மீது பாலியல் தாக்குதல் நடத்தப் பட்டிருப்பதாக போலீசார் உறுதியாக நம்பினர். ஆனால் அதனை ஆதாரப்பூர்வமாகவே அணுக முடிவு செய்தனர்.

 

இந்த நிலையில்தான் கடந்த 1-ந்தேதி திலீப்பின் 2-வது மனைவியான காவ்யா மாதவனிடமிருந்து பாவனா பாலியல் தொடர்பான காட்சிகள் அடங்கிய மெமரி கார்டு சிக்கியது. இதனையே முக்கிய ஆதாரமாக வைத்து திலீப் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.

 

திலீப்பின் முதல் மனைவி மஞ்சு வாரியார். இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். இந்த நட்சத்திர தம்பதிகள் ரியல் எஸ்டேட் தொழிலிலும் ஈடுபட்டனர். அப்போது அவர்களோடு சேர்ந்து பாவனா, காவ்யா மாதவன் ஆகியோரும் ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டனர்.

 

அப்போது பாவனாவும் திலீப்பும் சேர்ந்து சில சொத்துக்களை வாங்கியிருப்பது தெரிந்தது. இப்படி ஒன்றாக சேர்ந்து ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்ட போதுதான் திலீப் - மஞ்சுவாரியார் வாழ்க்கையில் காவ்யா மாதவன் வடிவில் விரிசல் ஏற்பட்டது. திலீப்பும், காவ்யா மாதவனும் பழக தொடங்கினர். இதனை மஞ்சுவாரியாரிடம் பாவனா போட்டுக் கொடுத் துள்ளார். மஞ்சுவாரியார் - திலீப் தம்பதிகளின் பிரிவுக்கு மூலக்காரணமாக இதுவே அமைந்தது என்கிறது மலையாள படஉலகம். இதன் பின்னர் மஞ்சுவாரியாரை பிரிந்த திலீப், காவ்யா மாதவனை மணந்து கொண்டது தனிக்கதை.

 

இப்படி தனது குடும்பத் தில் ஏற்பட்ட குழப்பத்துக்கு பாவனாவே இடையில் புகுந்து பாலம் கட்டியதாக திலீப் கருதினார். இதற்கு பழிக்குப்பழி வாங்கவும், வஞ்சம் தீர்க்கவும் பாவனா மீது திலீப் ஆட்களை ஏவி விட்டதும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

 

இப்படி சினிமா காட்சி களை மிஞ்சும் வகையில் பரபரப்பான திருப்பங்களுடன் 4½ மாதங்களாக சென்று கொண்டிருக்கிறது. பாவனா கடத்தல் வழக்கு தலைமறைவாக இருக்கும் காவ்யா மாதவனை கைது செய்வதுடன் முடிவுக்கு வருமா? இல்லை வேறு எதாவது பூதம் கிளம்புமா என்பதே  இப்போதைய மில்லியன் டாலர் கேள்வி.

 

 

இதற்கிடையே கொச்சி ஆலுவா ஜெயிலில் அடைப்பதற்குக் கொண்டு செல்லப்படும் முன்பு நடிகர் திலீப் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

 

பாவனா கடத்தல் சம்பவத்துக்கும், எனக்கும் எந்த தொடர்பும் இல்லை.

நான் எந்த குற்றமும் செய்யவில்லை.

 

நான் அப்பாவி. என்னை சதி செய்து திட்டமிட்டு இந்த வழக்கில் சிக்க வைத்து விட்டனர்.

 

நான் குற்றமற்ற வன் என்பதை விரைவில் இந்த உலகுக்கு நிரூபிப்பேன்.

 

எனவே நான் யாருக்கும் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை. எனக்கு ஏற்பட்டுள்ள பிரச்சினையை மன தைரியத்துடன் எதிர்கொள்வேன்.

இவ்வாறு நடிகர் திலீப் கூறினார்.

 

நடிகர் திலீப் தரப்பில் நாளை ஜாமீன் கோரி கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட உள்ளது. நடிகர் திலீப்புக்கு ஆதரவாக வாதாடப் பிரபல வக்கீல் ராம்குமார் முன்வந்துள் ளார். இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 120 (பி)ன் கீழ் திலீப் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பதால் அதற்கு ஏற்ப ஆவணங்களைத் தயார் செய்து கோர்ட்டில் தாக்கல் செய்ய வக்கீல் ராம்குமார் திட்டமிட்டுள்ளார் எனத் தெரிகிறது..click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...