???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 கொரோனா இன்று- தமிழகம் 3756 சென்னை 1261 0 கிரீமி லேயரை கணக்கிட சம்பளத்தை கருத்தில் கொள்ளக்கூடாது- ஸ்டாலின் பிரதமருக்கு கடிதம்! 0 மின் துறை அமைச்சர் தங்கமணிக்கு கொரோனா! 0 எடப்பாடி பழனிசாமி இரவு, பகல் பாராமல் போராடி வருகிறார்: அமைச்சர் வேலுமணி 0 சாத்தான்குளம் தந்தை, மகன் மரண வழக்கை சி.பி.ஐ.விசாரணைக்கு ஏற்றது! 0 என்எல்சிக்கு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் 0 சிபிஎஸ்இ பாடத்திட்டம் 30 சதவீதம் குறைப்பு: மத்திய அரசு அறிவிப்பு 0 பிரேசில் அதிபர் ஜேர் பொல்சனாரோவுக்கு கொரோனா தொற்று உறுதி 0 இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை மிக குறைவு: மத்திய அரசு 0 திருப்பதி கோயிலில் 60 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று 0 தமிழகத்தில் இன்னொரு ஊரடங்குக்கு வாய்ப்பில்லை: முதலமைச்சர் 0 கொரோனா இன்று- தமிழகம் 3616, சென்னை 1203! 0 முன்னாள் எம்.எல்.ஏ மரணம்! 0 89 வயதில் தந்தையான கோடீஸ்வரர்! இன்னொரு குழந்தைக்கும் அடிபோடுகிறார்! 0 உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1.17 கோடியாக உயர்வு
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

காவல் துறையின் மாண்பை குறைப்பதா?: நடிகர் சூர்யா அறிக்கை

Posted : திங்கட்கிழமை,   ஜுன்   29 , 2020  01:28:47 IST

நடிகர் சூர்யா வெளியிட்டுள்ள அறிக்கை: “சாத்தான்குளம் காவல் நிலையத்தில் இரு அப்பாவி உயிர்களுக்கு மரணம் ஏற்படுத்தும் அளவிற்கு நிகழ்ந்த போலீசாரின் ‘லாக்கப் அத்துமீறல்’ காவல் துறையின் மாண்பை குறைக்கும் செயல். போலீசாரால் கொடூரமான தாக்குதலுக்கு ஆளான தந்தை ஜெயராஜ், மகன் பென்னிக்ஸ் இருவரையும் அரசு மருத்துவர் பரிசோதனை செய்து, ‘நலமாக இருப்பதாக’ சான்று அளித்திருக்கிறார்.

நீதியை நிலைநாட்ட வேண்டிய மாஜிஸ்திரேட், பாதிக்கப்பட்டவர்களின் நிலையை பரிசோதிக்காமல், ‘இயந்திர கதியில் சிறையில் அடைக்க உத்தரவிட்டுள்ளார். சிறையில் நடத்தப்பட வேண்டிய சோதனைகளும் முறையாக நடக்கவில்லை. இத்தகைய கடமை மீறல் செயல்கள், ஒரு குடிமகனின் உரிமையில் நம் ‘அதிகார அமைப்புகள்’ காட்டும் அலட்சியத்தை வெளிச்சம் போட்டு காட்டுகின்றன. இந்த கொடூர மரணத்தில், தங்களுடைய கடமையை செய்ய தவறிய அனைவரும் நீதியின் முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும். உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்துவது, நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையை அளிக்கிறது. காவல்துறையில் அர்ப்பணிப்புடன் தன் கடமையை செய்கிற பலரை தனிப்பட்ட முறையில் நன்கு அறிவேன். அதேநேரம், அதிகாரத்தை பொதுமக்களுக்கு எதிராக பயன்படுத்தும் காவல்துறையினருக்கு எனது கடும் கண்டனங்கள். குற்றம் இழைத்தவர்களும், அதற்கு துணை போனவர்களும் விரைவாக தண்டிக்கப்பட்டு ‘நீதி நிலைநிறுத்தப்படும்’ என்று பொதுமக்களில் ஒருவனாக நானும் காத்திருக்கிறேன்”



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...