செய்தி உங்கள் நண்பருக்கு அனுப்பப்பட்டது
செய்தி உங்கள் நண்பருக்கு அனுப்ப முடியவில்லை. சிரிது நேரம் கழித்து முயற்சிக்கவும்..
நண்பருக்கு மின்னஞ்சல் செய்

காற்புள்ளிகளால் பிரித்து, செல்லுபடியாகும் மின்னஞ்சல் முகவரிகளை உள்ளிடவும்
அதிகபட்ச வரம்பான 200 எழுத்துக்குறியை மீறியது

செய்தியை உள்ளிடவும்
நடிகர் சிவகார்த்திகேயனுக்கு நம்மாழ்வார் விருது
சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரைக்கு வந்து முன்னணி நட்சத்திரமாக ஜொலிப்பவர் சிவகார்த்திகேயன். தற்போது இவர் நடிப்பில் ‘அயலான்’, ‘டாக்டர்’ உள்ளிட்ட திரைப்படங்கள்…
மன்னிக்கவும், உங்கள் மின்னஞ்சலை எங்களால் அனுப்ப முடியவில்லை. சிறிது நேரம் காத்திருந்து, மீண்டும் முயற்சிக்கவும்.
நடிகர் சிவகார்த்திகேயனுக்கு நம்மாழ்வார் விருது
Posted : வியாழக்கிழமை, டிசம்பர் 31 , 2020 00:22:43 IST
சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரைக்கு வந்து முன்னணி நட்சத்திரமாக ஜொலிப்பவர் சிவகார்த்திகேயன். தற்போது இவர் நடிப்பில் ‘அயலான்’, ‘டாக்டர்’ உள்ளிட்ட திரைப்படங்கள் உருவாகி வருகின்றன.
முன்னணி நடிகரான பின்னர் தன்னால் முடிந்த உதவிகளை பலருக்கும் செய்து வருகிறார் சிவகார்த்திகேயன். மறைந்த நெல் ஜெயராமன் மகனின் கல்விச் செலவை ஏற்றது, நலிந்த கலைஞர்களுக்கு உதவி செய்வது, ஏழை மாணவியின் டாக்டர் கனவை நிறைவேற்றியது என சிவகார்த்திகேயன் செய்து வரும் உதவிகள் ஏராளம்.
இந்நிலையில் தமிழக பாரம்பரிய விவசாயிகளின் பாதுகாப்பு சங்கம் மற்றும் ஐந்திணை வேளாண் கல்வி மற்றும் ஆராய்ச்சி அறக்கட்டளை இணைந்து நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ‘நம்மாழ்வார்’ விருது வழங்க முடிவு செய்திருக்கிறது. இயற்கை விவசாயத்தை ஊக்குவித்த வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாரின் நினைவாக ஆண்டுதோறும் இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான விருது நடிகர் சிவகார்த்திகேயனுக்கு வழங்கப்பட இருக்கிறது.
|