![]() |
நடிகர் சத்யராஜ் மருத்துவமனையில் அனுமதி!Posted : சனிக்கிழமை, ஜனவரி 08 , 2022 18:08:23 IST
நடிகர் சத்யராஜ் கொரோனா தொற்றின் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கொரோனா மற்றும் ஒமைக்ரான் தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை கடந்த சில நாள்களாக அதிகரித்து வருவது மக்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளன. பாதிப்பைக் குறைக்கும் வகையில் தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்று கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் நடிகர் சத்யராஜுக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டிருப்பதாகவும், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
|
|