செய்தி உங்கள் நண்பருக்கு அனுப்பப்பட்டது
செய்தி உங்கள் நண்பருக்கு அனுப்ப முடியவில்லை. சிரிது நேரம் கழித்து முயற்சிக்கவும்..
நண்பருக்கு மின்னஞ்சல் செய்

காற்புள்ளிகளால் பிரித்து, செல்லுபடியாகும் மின்னஞ்சல் முகவரிகளை உள்ளிடவும்
அதிகபட்ச வரம்பான 200 எழுத்துக்குறியை மீறியது

செய்தியை உள்ளிடவும்
பிரபல நடிகர் நெடுமுடி வேணு காலமானார்
பிரபல நடிகர் நெடுமுடி வேணு மலையாள திரைப்படத்தில் அறிமுகமானவர். இவர் தமிழில் வெளியான இந்தியன் படத்தில் சிபிஐ அதிகாரியாக…
மன்னிக்கவும், உங்கள் மின்னஞ்சலை எங்களால் அனுப்ப முடியவில்லை. சிறிது நேரம் காத்திருந்து, மீண்டும் முயற்சிக்கவும்.
பிரபல நடிகர் நெடுமுடி வேணு காலமானார்
Posted : செவ்வாய்க்கிழமை, அக்டோபர் 12 , 2021 10:49:08 IST
பிரபல நடிகர் நெடுமுடி வேணு மலையாள திரைப்படத்தில் அறிமுகமானவர். இவர் தமிழில் வெளியான இந்தியன் படத்தில் சிபிஐ அதிகாரியாக நடித்திருந்தார். அதைத்தொடர்ந்து அந்நியன், பொய் சொல்லப்போறோம், சர்வம் தாளமயம், உட்பட பல படங்களில் நடித்துள்ளார். இயக்குநர் ஷங்கரின் ஆஸ்தான நடிகராக வலம் வந்த நெடுமுடி வேணு இந்தியன் ௨ படத்தில் நடித்து வருகிறார்.
1978ஆம் ஆண்டு நடிகராக அறிமுகமான இவர் பல்வேறு நாடகங்களிலும் நடித்துள்ளார். மூன்று முறை தேசிய விருது வென்ற இவர், கேரள மாநில விருது, ஃபிலிம் பேர் விருது உட்பட பல்வேறு விருதுகளை வென்றுள்ளார்.
73 வயதாகும் நெடுமுடி வேணு, கொரோனா தொற்றால் பாதிப்படைந்து சிகிச்சை பெற்று பின் குணமாகினார். இந்த நிலையில் நேற்று உடல்நலம் சரியில்லாததால் திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி காலமானார்.
|