![]() |
மன்சூர் அலிகான் தொடங்கிய தமிழ் தேசிய புலிகள் கட்சிPosted : வியாழக்கிழமை, பிப்ரவரி 25 , 2021 23:41:50 IST
நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகியுள்ள நடிகர் மன்சூர் அலிகான், தமிழ் தேசிய புலிகள் கட்சி என்கிற புதிய கட்சியை தொடங்கியுள்ளார். நாம் தமிழர் கட்சியில் தனக்கு தொகுதி ஒதுக்கவில்லை என்பதாலும், சில கருத்து முரண்பாடுகள் உள்ளதாலும் புதிய கட்சி தொடங்கியுள்ளதாகக் கூறிய மன்சூர் அலிகான், திராவிடம் என்ற பெயரில் தமிழர்களை அழித்தது திமுகதான் என்று குற்றம்சாட்டினார். 2006 தேர்தலின்போது திமுகவின் ரவுடியிசம் தலை தூக்கியதால், தங்களுடைய எதிர்ப்பு திமுகவுக்கு அதிகமாக இருக்கும் எனவும் மன்சூர் அலிகான் கூறியுள்ளார்.
|
|