செய்தி உங்கள் நண்பருக்கு அனுப்பப்பட்டது
செய்தி உங்கள் நண்பருக்கு அனுப்ப முடியவில்லை. சிரிது நேரம் கழித்து முயற்சிக்கவும்..
நண்பருக்கு மின்னஞ்சல் செய்

காற்புள்ளிகளால் பிரித்து, செல்லுபடியாகும் மின்னஞ்சல் முகவரிகளை உள்ளிடவும்
அதிகபட்ச வரம்பான 200 எழுத்துக்குறியை மீறியது

செய்தியை உள்ளிடவும்
நடிகர் மகேஷ் பாபுவின் தந்தை மாரடைப்பால் காலமானார்!
தெலுங்கு சினிமாவின் பழம்பெரும் நடிகரும், நடிகர் மகேஷ்பாபுவின் தந்தையுமான கிருஷ்ணா, மாரடைப்பு காரணமாக நேற்று காலை ஐதராபாத்தில் உள்ள…
மன்னிக்கவும், உங்கள் மின்னஞ்சலை எங்களால் அனுப்ப முடியவில்லை. சிறிது நேரம் காத்திருந்து, மீண்டும் முயற்சிக்கவும்.
நடிகர் மகேஷ் பாபுவின் தந்தை மாரடைப்பால் காலமானார்!
Posted : செவ்வாய்க்கிழமை, நவம்பர் 15 , 2022 10:12:24 IST
தெலுங்கு சினிமாவின் பழம்பெரும் நடிகரும், நடிகர் மகேஷ்பாபுவின் தந்தையுமான கிருஷ்ணா, மாரடைப்பு காரணமாக நேற்று காலை ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இதையடுத்து அவருக்கு தீவிர சிகிச்சைகள் வழங்கப்பட்டன. இருந்தாலும் அவர் ஆபத்தான நிலையில் உள்ளார் என மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது. அத்துடன் செயற்கை சுவாச கருவிகள் மூலம் அவருக்கு சிகிச்சை வழங்கப்பட்டு வந்தன. இந்நிலையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்று இன்று அதிகாலை காலமானார் கிருஷ்ணா. அவருக்கு வயது 79 . அவரது இறப்புக்கு பல்வேறு தரப்பினரும் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்
முன்னதாக, 79 வயதாகும் கிருஷ்ணா தெலுங்கு திரையுலகின் முதல் சூப்பர் ஸ்டாராக அறியப்பட்டார். அத்துடன் தயாரிப்பு, இயக்கம் ஆகியவற்றிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். வயது மூப்பின் காரணமாக ஐதராபாத்தில் உள்ள தனது இல்லத்தில் ஓய்வெடுத்து வந்தவர் நேற்று காலை அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
|