அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 5ஆக உயர்வு! 0 கண்ணியம் குறையாமல் செயலாற்ற வேண்டும்: திமுகவினருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் 0 இந்தியாவிலேயே ஊழல் மிகுந்த அரசு கர்நாடக அரசுதான்: ராகுல் காந்தி குற்றச்சாட்டு 0 ஆன்லைன் ரம்மியை தடை செய்தால் அதில் நடிக்க மாட்டேன்: நடிகர் சரத்குமார் பேச்சு! 0 'பொன்னியின் செல்வன்' 3 நாட்களில் ரூ.200 கோடி வசூல்! 0 அக்டோபர் 20ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பு 0 மகாத்மா காந்தியின் 154-வது பிறந்தநாள்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை 0 அக்டோபர் 11-ல் விசிக நடத்தும் சமூக நல்லிணக்க மனித சங்கிலி: திருமாவளவன் அறிவிப்பு 0 புதிய காங்கிரஸ் தலைவர் 'ரப்பர் ஸ்டாம்பாக' இருக்க மாட்டார்: சசி தரூர் 0 இந்தியாவை நாம் அனைவரும் ஒன்றுபட்டு காக்க வேண்டும்: கேரளா சிபிஎம் மாநாட்டில் முதலமைச்சர் 0 முன்னாள் சிபிஎம் மாநில செயலாளர் கொடியேறி பாலகிருஷ்ணன் காலமானார் 0 இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டில் பங்கேற்க கேரள சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின்! 0 பாகிஸ்தான் அரசின் ட்விட்டர் பக்கம் இந்தியாவில் முடக்கம்! 0 தேசிய விருது பெற்ற தமிழ் நடிகர்கள்: மனைவி ஜோதிகா குறித்து சூர்யா நெகிழ்ச்சி! 0 காங்கிரஸ் கட்சி தலைவர் பதவி: மல்லிக்கார்ஜுன கார்கே வேட்புமனு!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

நடிகர் போண்டா மணி சிகிச்சை செலவை அரசே ஏற்கும்: மா.சுப்ரமணியன் அறிவிப்பு

Posted : வெள்ளிக்கிழமை,   செப்டம்பர்   23 , 2022  09:31:49 IST

சிறுநீரக பாதிப்பால் அவதிப்பட்டு வரும் நடிகர் போண்டா மணியின் சிகிச்சைக்கான செலவை அரசே ஏற்கும் என்று அமைச்சர் மா. சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.
 
ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நடிகர் போண்டா மணியை நேரில் சந்தித்து மருத்துவத்துறை அமைச்சர் மா சுப்ரமணியன் நலம் விசாரித்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், 'நடிகர் போண்டா மணிக்கு ஓமந்தூரார் மருத்துவமனையில் சிறந்த சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே 4 மாதங்கள் முன்பு அவர் இதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
 
தற்போது சிறுநீரக செயலிழப்பு ஆரம்ப நிலையில் உள்ளார். அவருக்கு டயாலிசிஸ் செய்ய வேண்டிய அவசியம் உடனே ஏற்படலாம். சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு அவரது உறவினர்கள் யாரேனும் உள்ளார்களா என விசாரிக்க சொல்லியுள்ளோம். அப்படி இல்லை என்றால் உறுப்பு மாற்றுக்கு பதிவு செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சிகிச்சைக்கான செலவை அரசு ஏற்றுக் கொள்ளும். முதல்வர் அவர் குறித்து விசாரித்தார் என  மா. சுப்ரமணியன் கூறினார்.
 


 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...