செய்தி உங்கள் நண்பருக்கு அனுப்பப்பட்டது
செய்தி உங்கள் நண்பருக்கு அனுப்ப முடியவில்லை. சிரிது நேரம் கழித்து முயற்சிக்கவும்..
நண்பருக்கு மின்னஞ்சல் செய்

காற்புள்ளிகளால் பிரித்து, செல்லுபடியாகும் மின்னஞ்சல் முகவரிகளை உள்ளிடவும்
அதிகபட்ச வரம்பான 200 எழுத்துக்குறியை மீறியது

செய்தியை உள்ளிடவும்
திரையரங்குகளில் 50% பார்வையாளர்களை அனுமதிப்பதே சிறந்தது - அரவிந்த் சாமி
திரையரங்குகளில் 50 சதவீத பார்வையாளர்களை அனுமதிப்பதே சிறந்தது என நடிகர் அரவிந்த் சாமி கருத்து தெரிவித்துள்ளார்.
மன்னிக்கவும், உங்கள் மின்னஞ்சலை எங்களால் அனுப்ப முடியவில்லை. சிறிது நேரம் காத்திருந்து, மீண்டும் முயற்சிக்கவும்.
திரையரங்குகளில் 50% பார்வையாளர்களை அனுமதிப்பதே சிறந்தது - அரவிந்த் சாமி
Posted : செவ்வாய்க்கிழமை, ஜனவரி 05 , 2021 01:26:19 IST
திரையரங்குகளில் 50 சதவீத பார்வையாளர்களை அனுமதிப்பதே சிறந்தது என நடிகர் அரவிந்த் சாமி கருத்து தெரிவித்துள்ளார்.
கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, கடந்த நவம்பர் 10-ஆம் தேதி முதல் திரையரங்குகளை 50 சதவீத பார்வையாளர்களுடன் இயக்க தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. தற்போது பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பெரிய பட்ஜெட் படங்கள் வெளியாக இருப்பதால் திரைத்துறையினர் மற்றும் திரையரங்க உரிமையாளர்கள் தரப்பிலிருந்து 100 சதவீத பார்வையாளர்களை அனுமதிக்க தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், நேற்று தமிழக அரசு திரையரங்குகளில் 100 சதவீத பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கி அரசாணை வெளியிட்டுள்ளது. இது தொடர்பில் ஆதரவாகவும், எதிர்ப்பு தெரிவித்தும் கருத்துக்கள் கிளம்பியுள்ள நிலையில், நடிகர் அரவிந்த் சாமி, இந்த நேரத்தில் 100 சதவீத பார்வையாளர்களை விட 50 சதவீத பார்வையாளர்களை அனுமதிப்பதே சிறந்தது என தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். இவரது கருத்து திரையுலகினர் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
|