அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 என்னை அன்பால் மாற்றியவர் என் மனைவி: ரஜினி 0 பழனி முருகனுக்கு 16 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம்! 0 சாதனையாளர்களுக்கு விருது வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! 0 தேசியக் கொடியை ஏற்றினார் ஆளுநர் ஆர். என்.ரவி! 0 கொடியேற்றிய முதலமைச்சர்; விழாவை புறக்கணித்த முதல்வர்: தெலங்கானாவில் பரபரப்பு! 0 கொலிஜியத்தில் ஒன்றிய அரசின் பிரதிநிதிகள் வேண்டும்: சட்ட அமைச்சர் கடிதம் 0 “ஒன்று கூடுவோம் ஸ்டாலின்.. தமிழ்நாடு வாழ்க”: ட்வீட் செய்த கமல்ஹாசன்! 0 குட்கா, பான் மசாலா புகையிலை பொருட்களுக்கு நிரந்தர தடை விதிக்க முடியாது: நீதிமன்றம் உத்தரவு! 0 இருளர் பழங்குடி செயல்பாட்டாளர்களுக்கு பத்ம விருதுகள்! 0 ஜெயலலிதா பயன்படுத்திய பொருட்கள் ஏலம்: நீதிமன்றம் அதிரடி உத்தரவு! 0 நாஞ்சில் சம்பத் மருத்துவமனையில் அனுமதி 0 ஆளுநரின் தேநீர் விருந்து: ஒட்டுமொத்தமாக புறக்கணித்த திமுக கூட்டணி கட்சிகள் 0 தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பு விவகாரம்: தீர்ப்பு தள்ளிவைப்பு 0 "வீட்டை முற்றுகையிடுவோம்": தாமரைக்கு எதிராக ஜல்லிக்கட்டு அமைப்பு 0 மருத்துவம் தொடர்பான சர்ச்சை கருத்துகள்: சித்த மருத்துவர் ஷர்மிகாவிடம் விசாரணை!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

நடிப்பில் இருந்து சிறிது ஓய்வு: அமீர்கான் அதிரடி

Posted : புதன்கிழமை,   நவம்பர்   16 , 2022  09:31:02 IST

பாலிவுட் நடிகர்களில் முன்னணி நடிகர் அமீர்கான். 35 ஆண்டுகாலமாக பாலிவுட் சினிமாவில் பல வெற்றி படங்களில் நடித்து தனக்கென தனி முத்திரையை பதித்த திறமையான நடிகர் அமீர்கான். நடிகர் அமீர் கான் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் லால் சிங் சத்தா. நாடு முழுவதும் வெளியான இந்தப் படத்தை புறக்கணிக்க வேண்டும் என்று சமூக ஊடகங்களில் கருத்து நிலவிய நிலையில், வசூல் ரீதியாக கடும் இழப்பை சந்தித்தது. இதனால், அடுத்ததாக அமீர் கான் நடிக்கவிருந்த 'சாம்பியன்ஸ்' படத்தில் அவர் நடிக்கமாட்டார் என்று தகவல்கள் பரவி வந்தன. 
 
இந்நிலையில், சாம்பியன்ஸ் படம் குறித்து அறிவிப்பை வெளியிட்டு அமீர் கான் பேசியதாவது: "சாம்பியன்ஸ் படத்தின் கதை அற்புதமான, அழகான கதை. லால் சிங் படத்திற்கு பிறகு இந்த படத்தில் நான் நடிக்க இருந்தேன். ஆனால், தற்போது நான் ஓய்வெடுக்க விரும்புகிறேன். சாம்பியன்ஸ் சிறந்த படம் என்பதால் சோனி நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கவுள்ளேன். சாம்பியன்ஸ் படத்தில் நடிக்க வேறு நடிகரை தேர்வு செய்யவுள்ளேன்.
 
நான் எனது அம்மா, குழந்தைகள் மற்றும் குடும்பத்துடன் நேரம் செலவிட விரும்புகிறேன். இதற்காக படத்தில் நடிப்பதிலிருந்து தற்காலிகமாக விலகி இருக்க முடிவு செய்துள்ளேன். நடிப்பில் மட்டுமே கடந்த 35 ஆண்டுகளாக கவனம் செலுத்தினேன். என்னுடன் நெருக்கமாக இருப்பவர்களுக்கு இது நியாயமாகாது என்று கருதுகிறேன். அவர்களுடன் நேரம் ஒதுக்க இதுவே சரியான தருணமாக இருக்கும் என்று நம்புகிறேன். அடுத்த ஆண்டிலிருந்து ஒன்றரை ஆண்டுகள் நடிப்பதிலிருந்து ஓய்வெடுக்க முடிவு செய்துள்ளேன். எனது உறவுகளுடன் சந்தோஷமாக நேரத்தை செலவழிக்கும் காலகட்டத்தில் நான் உள்ளேன்" என்று தெரிவித்துள்ளார்.
 


 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...