???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 வானதி சீனிவாசனுக்கு கட்சியில் தேசிய பதவி! 0 சென்னை அ.தி.மு.க மாவட்ட செயலாளர்கள் நியமனம்! 0 ஒரே நாளில் 64 குழந்தைகள் பிரசவம். ஆசிய அளவில் தமிழக அரசு மருத்துவர்கள் சாதனை! 0 ’எனக்கு சினிமா அரசியல் தெரியல, மிரட்டுறாங்க’ - சீனு ராமசாமி பேட்டி 0 ’சாஹாவிடம் அதிரடியை எதிர்பார்க்கவில்லை’ டேவிட் வார்னர் பேட்டி! 0 குட்கா விவகாரம் - சட்டப்பேரவை செயலாளர் வழக்கு 0 வன்முறையைத் தூண்ட பாஜக முயற்சி: திருமாவளவன் 0 10, 12ஆம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு 0 சசிகலா விடுதலை குறித்து 2 நாளில் தெரியவரும்: வழக்கறிஞர் 0 மனுதர்மத்தை பாஜக ஏற்றுக்கொள்கிறதா? கார்த்தி சிதம்பரம் கேள்வி 0 ஹத்ராஸ் பாலியல் வன்கொலை: நீதிமன்ற கண்காணிப்பில் சிபிஐ விசாரணை 0 நிதிஷ்குமார் அரசை தூக்கி எறியுங்கள் - சோனியா காந்தி 0 நிதிஷ்குமார் அரசை தூக்கி எறியுங்கள் - சோனியா காந்தி 0 7.5% உள் ஒதுக்கீடு: அமித்ஷாவிற்கு திமுக எம்.பி.க்கள் கடிதம் 0 ஆப்கனில் இருந்து ஒரு லட்சம் டன் வெங்காயம் இறக்குமதி
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

வெளிநாடுகளில் இருந்து ஏ.சி. இறக்குமதி செய்ய தடை

Posted : வெள்ளிக்கிழமை,   அக்டோபர்   16 , 2020  01:26:12 IST

வெளிநாடுகளில் இருந்து குளிரூட்டிகளுடன் கூடிய ஏர் கண்டிஷனர்களை இறக்குமதி செய்ய மத்திய அரசு தடை விதித்துள்ளது.
 
உள்நாட்டில் உற்பத்தியை ஊக்குவிப்பதற்காக மத்திய அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக கடந்த ஜூன் மாதத்தில், கார்கள், பேருந்துகள், லாரிகள் மற்றும் மோட்டார் சைக்கிள்களில் பயன்படுத்தப்படும் சில புதிய நியூமேடிக் டயர்களை இறக்குமதி செய்ய அரசு தடை விதித்தது. அதற்கு முன்னர் டிவி முதல் பாதுகாப்பு உபகரணங்கள் வரை பல்வேறு பொருட்களுக்கான இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்டது.
 
அடுத்தக்கட்டமாக, ஏ.சி. மற்றும் அதன் பாகங்களை இறக்குமதி செய்வதில் கட்டுப்பாடுகளை கொண்டு வருவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. சுங்க வரி அதிகரிப்பு மற்றும் தொழில்நுட்ப தர கட்டுப்பாடுகளை அதிகரிப்பது உள்ளிட்ட பல வழிகளில், இறக்குமதியை ஒழுங்குபடுத்தவும் திட்டமிடப்பட்டது.
 
இந்நிலையில், குளிரூட்டிகளுடன் கூடிய ஏர் கண்டிஷனர்களை இறக்குமதி செய்ய மத்திய அரசு தடை விதித்துள்ளது. இதனையடுத்து இறக்குமதி கொள்கையில் செய்யப்பட்ட மாற்றம் குறித்து, வெளிநாட்டு வர்த்தக இயக்குனரகம் வெளியிட்டுள்ள அறிவிப்பாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...