???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 கொரோனா இன்று: தமிழகம் 1438; சென்னை1116! 0 ஜெயமோகன் நடத்திய சிறுகதைத்திருவிழா! வானவெளியில் மாயக் கம்பளப் பயணம்! பகுதி-3 0 ஜெயமோகன் நடத்திய சிறுகதைத்திருவிழா! வானவெளியில் மாயக் கம்பளப் பயணம்! பகுதி-2 0 ஜெயமோகன் நடத்திய சிறுகதைத்திருவிழா! வானவெளியில் மாயக் கம்பளப் பயணம்! பகுதி-1 0 முதலீடு செய்ய மோட்டார் வாகன உற்பத்தி நிறுவனங்களுக்கு முதலமைச்சர் அழைப்பு 0 இந்தியாவில் கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 6 ஆயிரத்தை தாண்டியது 0 தெலுங்கானாவில் 32 மருத்துவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி 0 கடுமையான ஊரடங்கு பொருளாதாரத்தை அழித்து விட்டது: ராஜீவ் பஜாஜ் கருத்து 0 திமுக எம்.எல்.ஏ. அன்பழகன் உடல்நிலையில் முன்னேற்றம் 0 சென்னையில் 5 மண்டலங்களை காப்பதில் முழு சிந்தனை வேண்டும்: மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல் 0 மத்திய குழு தமிழகம் வருகை: சென்னை உள்பட 7 மாவட்டங்களில் ஆய்வு 0 கொரோனா இன்று- தமிழகம் 1384, சென்னை 1072! 0 தனியார் மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை கட்டணம் எவ்வளவு? 0 ஜூனியர் என் டி ஆரைப் பிடிக்காது என்று சொல்வதா? நடிகை நிலாவுக்கு மிரட்டல்! 0 'மாஸ்டர்' பட வெளியீட்டை ஒத்திவைக்க வேண்டும்!! - பட அதிபர் கேயார் வேண்டுகோள்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

ஐ.எஸ். தலைவர் பாக்தாதி கொல்லப்பட்டார்!

Posted : திங்கட்கிழமை,   அக்டோபர்   28 , 2019  01:58:35 IST


Andhimazhai Image

ஐஎஸ் ஐஎஸ் தீவிரவாத அமைப்பின்  தலைவர் அபு பகர் அல்- பாக்தாதி அமெரிக்க ரணுவத்தினரால்  கொல்லப்பட்டதாக அதிபர் டிரம்ப் கடந்த ஞாயிறு காலை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். 

 

பாக்தாதி சுரங்கப்பாதை வழியாக தப்ப முயன்றபோது தன் உடலில் கட்டி இருந்த குண்டுகளை வெடிக்கச் செய்து மரணமடைந்ததாகக் கூறப்படுகிறது.

 

அமெரிக்க வீரர்கள் யாருக்கும் சேதம் எதுவும் இல்லை என்றும் சிறப்புப் படையைச் சேர்ந்த மோப்பநாய்  ஒன்றுக்கும் மட்டுமே காயம் ஏற்பட்டதாக அமெரிக்கதரப்பில் கூறப்பட்டுள்ளது.

 

இந்த மிஷன் எப்படி செயல்படுத்தப்பட்டது?

 

சிரியாவின் வடக்கு பகுதியில் அபு பகர் அல்- பாக்தாதி  இருப்பது உறுதியான பிறகு அவர் அமெரிக்க ராணுவத்தால் 3 வாரங்களுக்கு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டார்.

 

அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் துணை அதிபர் மைக் பென்ஸ் ஆகியோருக்கு ஐஎஸ்ஐஎஸ் தலைவர் இருக்கும் இடத்தை பற்றிய தகவல் பகிரப்பட்டது. ’மிஷன்  கைலா முல்லர்’ (Kayla Mueller) என்று இந்த திட்டத்துக்குப் பெயரிடப்பட்டது. கைலா முல்லர் 2015-ல் ஐஎஸ் இயக்கத்தால் கொல்லப்பட்ட அமெரிக்கரின் பெயர்.  பாக்தாதியைப் பிடிக்க கடந்த சனிக்கிழமை மாலை 5 மணிக்கு எட்டு ஹெலிகாப்டர்களுடன் அமெரிக்க ராணுவப் படைகள் வடக்கு சிரியா நோக்கி புறப்பட்டனர். 

 

அவர் இருக்கும் இடத்தை அடைந்தவுடன், ஐ எஸ் இயக்கத்தினர் எதிர்த்து தொடர் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. இதிலிருந்து தப்பித்த அமெரிக்க ரணுவத்தினர், அவர்கள் தங்கியிருக்கும் இடத்தின் சுற்றுச்சுவரை தகர்த்து உள்ளே நுழைந்தனர். அவர்கள் பிடியில் இருந்த 11 குழந்தைகளையும் ராணுவத்தினர் பத்திரமாக மீட்டதாகச் சொல்லப்படுகிறது.

 

இந்த தாக்குதலில் பாக்தாதியின் இரண்டு மனைவிகள் கொல்லப்பட்டனர். பாக்தாதி  தனது உடலில் வெடிகுண்டுகளை கட்டிக்கொண்டு தனது இரு குழந்தைகளுடன் சுரங்க பாதை வழியாக அவர் தப்பிச் செல்ல முயற்சித்தார். ராணுவத்தினர் அவரை நெருங்க முயற்சித்தபோது வெடிகுண்டுகளை வெடிக்க செய்தார். இதனால் அவரும் அவரது குழந்தைகளும் மரணமடைந்தனர். இந்த தாக்குதலில் அமெரிக்க ராணுவத்தினர் யாரும் கொல்லப்படவில்லை என்று அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

 

மேலும் இந்த நடவடிக்கையை நடத்த ரஷியா, இராக், துருக்கி ஆகிய நாடுகளின் அனுமதியை அமெரிக்க பெற்றது,  ஆனால் இதன் முழு விவரங்கள் மற்ற நாடுகளுக்கு பகிரப்படவில்லை என்று டிரம்ப் தெரிவித்துள்ளார்.

 

இந்த நடவடிக்கை பற்றி யாருக்கும் தெரியவில்லை. ட்ரம்ப் சூசகமாக முன்னதாக ஒரு பெரிய விஷயம் நடந்துள்ளது என்று மட்டும் ட்வீட் செய்திருந்தார்.

பாக்தாதி 2014-ல் ஐஎஸ் ஐஎஸ் அமைப்பைத் தொடங்கி சிரியா ஈராக் போன்ற நாடுகளில் பல இடங்களைப் பிடித்து பழங்கால கலிபா தலைமையை உருவாக்கினார். அவர் கட்டுப்பாட்டில் ஒரு சமயம் 80 லட்சம் மக்கள் இருந்தார்கள். முன்னாள் அல்கொய்தா உறுப்பினரான பாக்தாதி, ஈராக்கைச் சேர்ந்தவர்.

 

ஐ.எஸ். அமைப்பின் பிடியில் இருந்து பல இடங்கள் மீட்கப்பட்டாலும் சிரியாவிலும் ஈராக்கிலும் ஒரு சில இடங்கள் அவர்கள் கட்டுப்பாட்டில் உள்ளன. உலகம் முழுக்க பனிரெண்டுக்கும் மேற்பட்ட நாடுகளில் ஐஎஸ் உறுப்பினர்கள் உள்ளன. ஆப்கானிஸ்தானில் அச்சுறுத்தும் விதத்தில் ஐ.எஸ். உள்ளது.

 

பாக்தாதி கொல்லப்பட்டது இந்த அமைப்புக்குக்கு பின்னடைவுதான். ஆனாலும் இதன் வேர்கள் பல இடங்களில் பரவி உள்ளன. அமெரிக்கா தன் படைகளை சிரியாவில் இருந்து விலக்கிக் கொள்வதாக அறிவித்திருக்கும் இந்த வேளையில் இந்நடவடிக்கை வெற்றிகரமாக நிறைவேறி உள்ளது.

 click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...