???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 உலகக்கோப்பை கால்பந்து: ஈரான் அணியை வென்றது ஸ்பெயின் 0 அரிசி உற்பத்தி குறித்து மாநில அரசு வெள்ளை அறிக்கை வெளியிடவேண்டும்: ஸ்டாலின் வலியுறுத்தல் 0 உலகக்கோப்பை கால்பந்து: உருகுவே அணி வெற்றி 0 சோனியா காந்தியுடன் தமிழக அரசியல் அவலங்கள் குறித்துப் பேசினேன்: கமல்ஹாசன் 0 பசுமை வழிச்சாலை திட்டத்தை அரசு உடனடியாக கைவிட வேண்டும்: வைகோ வலியுறுத்தல் 0 ஆறுமுகசாமி விசாரணை ஆணையம்: துக்ளக் ஆசிரியர் குருமூர்த்திக்கு சம்மன் 0 ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் பதவிக்காலம் நீட்டிப்பு 0 காஷ்மீர் விவகாரம்: பா.ஜ.க மீது சிவசேனா கடும் தாக்கு 0 திருத்தணி அருகே நெகிழ்ச்சி: அரசுப் பள்ளி ஆங்கில ஆசிரியரின் பணி மாறுதலை தடுத்த மாணவர்கள் 0 காவிரி நீர் ஆணையத்தை உடனே கூட்டுக: பிரதமருக்கு முதல்வர் கடிதம் 0 தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு குறித்து கருத்து தெரிவித்த நடிகை நிலானி கைது! 0 ராகுல் காந்தியுடன் கமல்ஹாசன் சந்திப்பு! 0 உள்ளாட்சி அமைப்புகளுக்கான மானியத் தொகை: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வலியுறுத்தல் 0 மிஸ் இந்தியாவாக தேர்வானார் சென்னை கல்லூரி மாணவி! 0 இன்று சர்வதேச யோகா தினம்: பிரதமர், அமைச்சர்கள் யோகா பயிற்சி!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

என் துணை! - ரஞ்சிதம் அம்மா அவர்கள் பற்றி தோழர் நல்லக்கண்ணு!

Posted : சனிக்கிழமை,   டிசம்பர்   03 , 2016  05:42:59 IST


Andhimazhai Image
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தோழர் நல்லக்கண்ணு அவர்களை அந்திமழை மனைவியர் சிறப்பிதழுக்காக சந்தித்தோம். கனிந்து உருகிய குரலில் தன் வாழ்க்கைத் துணையான ரஞ்சிதம் அம்மாளைப் பற்றிச் சொல்ல ஆரம்பித்தார். தியாகச் சுடரான வாழ்வை வாழும் நல்லக்கண்ணு அவர்களின் துணைவியாரின் வாழ்வு முறையும் அதற்குக் குறைந்தது அல்ல. தோழருடையது சமூகப் போராட்ட வாழ்வு. ரஞ்சிதம் அம்மாளுடையது குடும்பப் போராட்ட வாழ்வு. கணவருக்கு என்றைக்கும் துணை நிற்கும் வாழ்வு.
 
 
“எனக்குத் திருமணம் மிகவும் தாமதமாகத்தான் நடந்தது. 1949-ல் கட்சி தடைப்பட்ட சமயத்தில் ஓராண்டு தலைமறைவாக இருந்தபோது நெல்லை சதிவழக்கில் கைதானேன். தொண்ணூறுக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். எங்களை சிறப்பு நீதிமன்றம் போட்டு விசாரித்து சிலபேரைக் கழித்தார்கள். பின்னர் அமர்வு நீதிமன்றத்தில் நாங்கள் தண்டிக்கப்பட்டோம். பாலதண்டாயுதம், ப.மாணிக்கம், மாயாண்டி பாரதி, நல்ல சிவம், நான் உள்ளிட்ட 9 பேருக்கு ஆயுள் தண்டனை. என்னிடம் ஆயுதம் இருந்ததால் கூடுதலாக ஆறு ஆண்டுகள். 52 தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சி தேர்தலில் நின்றது. சென்னை மாகாணத்தில் மட்டும் 16 பேர் வென்று சட்டமன்றம் சென்றார்கள். இதையடுத்து வழக்கில் சிக்கி சிறையில் இருப்பவர்களை விடுதலை செய்யவேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. ஆயுள் தண்டனை ரத்து செய்யப்பட்டாலும் வெடிகுண்டு சட்ட தண்டனையை சிறையிலேயே கழித்துவிட்டு 56 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வெளியே வந்தேன். அப்போது எனக்கு 31 வயது. தொடர்ந்து கட்சிப் பணியில் ஈடுபட்டேன். அப்போது வீட்டில் திருமணப் பேச்சுவார்த்தை நடந்தது. ‘இது சாத்தியப்படாது. நான் கட்சிப்பணியில் இருப்பவன். என்னைப் புரிந்துகொள்ளக் கூடிய பெண் இல்லாமல் எதுவும் சாத்தியமாகாது’ என்று கூறிவிட்டேன். அப்போதுதான் திருநெல்வேலிக்குப் பக்கத்தில் ஒரு கிராமத்தைச் சேர்ந்த அன்னசாமியின் மூத்த மகள் ஆசிரியராக வேலைக்குப் படித்துள்ளார் என்று சொன்னார்கள். அன்னசாமி கட்சியின் மாவட்டக் குழு உறுப்பினராக இருந்தவர். கிறித்துவ மதத்தைச் சேர்ந்தவர். கட்சியின் மீது மிகுந்த பற்று உள்ளவர். எனவே அவருக்கு என் பணிகள் பற்றித் தெரியும் என்பதால் இந்த திருமணம் சாத்தியமானது. நெல்லைக் குறுக்குத்துறையில் பேராசிரியர் வானமாமலை தலைமையில் கட்சி உறுப்பினர்களின் வாழ்த்துக்களுடன் திருமணம் நடந்தது. 
என் மனைவி ஒரு நடுநிலைப் பள்ளியில் வேலை பார்த்து அதை திருமணத்துக்குப் பின் உதறிவிட்டார். அப்புறம் அவருக்கு மாவட்ட போர்டு பள்ளியில்செகண்டரி கிரேட் ஆசிரியை வேலையில் அவர் நல்ல மதிப்பெண் எடுத்திருந்ததால் கிடைத்தது.
ஸ்ரீவைகுண்டத்தில் என்னுடையது விவசாய குடும்பம். ஆண்டுதோறும் சாப்பாட்டுக்கு நெல் கிடைக்கும். அதைத்தவிர என்னிடம் இருந்து எதையும் எதிர்பார்க்க முடியாது என்பது அவருக்கு நன்றாகத் தெரியும். கட்சியின் முழுநேர ஊழியராக, போக்குவரத்துச் செலவுகளுக்கு மட்டும் கிடைக்கும் தொகையே என் வருமானம். இரண்டு பெண்குழந்தைகள் பிறந்தன. மூத்த மகள் பிறக்கும்போது நான் உடன் இருந்தேன். இரண்டாவது பெண் பிறக்கும்போது உடன் இருக்க முடியவில்லை. அப்போதெல்லாம் மாதத்துக்கு இரண்டு நாள்தான் வீட்டுக்குப் போகமுடியும். மற்றபடி எல்லாம் கட்சிப் பணிதான். பலநாட்கள் தொடரும் உண்ணாவிரதப் போராட்டங்கள், சிறைவாசம் என்று போராட்டங்கள்.
 
 
அவர் கட்சிக் குடும்பம் என்பதால் ஏராளமான இலக்கியங்களையும் நூல்களையும் படித்தவர். அதனால் என் லட்சிய வாழ்வுக்கு எந்த இடையூறும் இல்லாமல் பார்த்துக்கொண்டார். பிள்ளைகளின் பள்ளிப்படிப்பு, கல்லூரிப் படிப்பு அனைத்தையும் அவர்தான் கவனித்துக்கொண்டார். அவர் எந்த கிராமத்தில் வேலை பார்த்தாலும் அங்கெல்லாம் அவருக்கு நல்ல பெயர். எல்லோருக்கும் உதவிகள் செய்யக்கூடியவர். பெரிய ஆசைகள் இல்லாமல் இருப்பதைக் கொண்டு வாழ்கிறவர்.
திருமணமான பின் பல ஆண்டுகள் கழித்து வெளியே கூட்டி வந்தது என்றால் சென்னையில் நடந்த உலகத் தமிழ் மாநாட்டுக்குத்தான். முதல்வர் அண்ணாத்துரை நடத்திய மாநாடு அது. அதைவிட்டால் அவரை எங்கும் அழைத்துச் சென்றதில்லை. என்னுடன் எங்காவது சென்றுவிட்டு வீடு திரும்புவதென்றால் அவ்வளவு எளிதில்லை என்று அவருக்குத் தெரியும். வழியில் கட்சித் தோழர்களைக் கண்டால் பேருந்து நிலையத்திலேயே மணிக்கணக்காக பிரச்னைகளைப் பேச அவர் காத்திருக்க வேண்டியிருக்கும். 
 
 
அவர் நிறையப் படிப்பார். ஆனந்தவிகடனை இன்று வரை அவர் விடாமல் வாசிப்பவர். பணி ஓய்வுக்குப் பின்னர் சென்னைக்கு என்னுடன் வந்துவிட்டார். 
கட்சிக்கு இருக்கும் மரியாதையில் அவர் பெருமை கொள்பவர். எதையும் எதிர்பாராமல் அவர் நடந்துகொண்டதால்தான் நானும் தடையின்றிக் கட்சிப் பணி செய்யமுடிந்தது. குடும்பம் என்பது எப்போதும் எனக்குப் பாரமாக இல்லாமல் பார்த்துக்கொண்டார்” தோழர் சொல்லிக்கொண்டே போனார். சில இடங்களில் தகவல் குறித்து மறதி ஏற்படுகையில் நூல்களை பார்த்து சரி செய்துகொண்டார். ”ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு மாதிரி வந்திரக் கூடாதில்லையா?” என புன்னகைத்தார். 
நேர்காணல் முடிந்து விடைபெறுகையில் திடீரென ஒரு விஷயம் அவர் நினைவுக்கு வர, “அவங்க அப்பா 95-ல் நெல்லையில் நடந்த சாதிக் கலவரத்தில் கொல்லப்பட்டார். அன்றைக்கும் அவர் வருத்தப்பட்டு ஒரு வார்த்தை கூட பேசலை” என்றார்.
 
(அந்திமழை அக்டோபர் 2014 இதழில் இருந்து)
 


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...