???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 கொரோனா இன்று- தமிழகம் 3756 சென்னை 1261 0 கிரீமி லேயரை கணக்கிட சம்பளத்தை கருத்தில் கொள்ளக்கூடாது- ஸ்டாலின் பிரதமருக்கு கடிதம்! 0 மின் துறை அமைச்சர் தங்கமணிக்கு கொரோனா! 0 எடப்பாடி பழனிசாமி இரவு, பகல் பாராமல் போராடி வருகிறார்: அமைச்சர் வேலுமணி 0 சாத்தான்குளம் தந்தை, மகன் மரண வழக்கை சி.பி.ஐ.விசாரணைக்கு ஏற்றது! 0 என்எல்சிக்கு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் 0 சிபிஎஸ்இ பாடத்திட்டம் 30 சதவீதம் குறைப்பு: மத்திய அரசு அறிவிப்பு 0 பிரேசில் அதிபர் ஜேர் பொல்சனாரோவுக்கு கொரோனா தொற்று உறுதி 0 இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை மிக குறைவு: மத்திய அரசு 0 திருப்பதி கோயிலில் 60 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று 0 தமிழகத்தில் இன்னொரு ஊரடங்குக்கு வாய்ப்பில்லை: முதலமைச்சர் 0 கொரோனா இன்று- தமிழகம் 3616, சென்னை 1203! 0 முன்னாள் எம்.எல்.ஏ மரணம்! 0 89 வயதில் தந்தையான கோடீஸ்வரர்! இன்னொரு குழந்தைக்கும் அடிபோடுகிறார்! 0 உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1.17 கோடியாக உயர்வு
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

இரட்டைக் கருக்களில் ஒன்றைமட்டும் கருச்சிதைவு செய்ய உச்சநீதிமன்றம் அனுமதி!

Posted : வியாழக்கிழமை,   ஜுன்   18 , 2020  04:04:50 IST


Andhimazhai Image

 

 

மும்பையைச் சேர்ந்த செவிலியர் கோமலுக்கு அது அதிர்ச்சியைத் தந்தது. தன் வயிற்றில் வளரும் இரட்டைக்குழந்தைகளில் ஒன்றுக்கு டவுன்ஸ் ஸிண்ட்ரோம் என்கிற மரபணுக்கோளாறு உள்ளது என்ற சோதனை முடிவு அவருக்குக் கிடைத்திருந்தது. இந்த கோளாறுடன் பிறக்கும் குழந்தைகளை வளர்ப்பது மிகவும் கடினம். அவர்களின் வாழ்வும் மிகச் சிரமமானது.

 

எனவே கோமல் கருச்சிதைவு செய்ய முடிவெடுத்தார். இந்தியாவில் மருத்துவ ரீதியாக கருச்சிதைவு 20 வாரங்களுக்குள் செய்தாகவேண்டும். அதைத்தாண்டிச் சென்றால் அனுமதி இல்லை. ஆனால் கோமல் அதைத் தாண்டி இருந்தார். எனவே அவர் மும்பை உயர்நீதிமன்றத்தை நாடினார். தன் இரு கருக்களில் ஒன்றுக்கு டவுன்ஸ் சிண்ட்ரோம் இருப்பதால் அதை மட்டும் கலைக்க அனுமதி கோரினார். ஆனால் உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.

 

இதைத் தொடர்ந்து அவர் உச்சநீதிமன்றத்தை நாடினார். விசாரித்த நீதிமன்றம் இப்படி ஒரு கருவை மட்டும் கருச்சிதைவு செய்வது சாத்தியமா என்று மருத்துவ அறிக்கை கோரியது. இதுதொடர்பாக மருத்துவ அறிக்கை அளித்த கரு மருத்துவ நிபுணர் பூர்ணிமா என்பவர்,” இப்படி இரட்டை கருக்களில் ஒன்றை மட்டும் சிதைவு செய்வது பாதுகாப்பானதே.  இதில் ஆயிரத்தில் ஒன்றில் மட்டுமே அபாயம் உள்ளது” என்று கூறினார்.

 

இதைத் தொடர்ந்து டவுன்ஸ் சிண்ட்ரோம் உள்ள கருவை மட்டும் மருத்துவ ரீதியில் சிதைவு செய்துகொள்ள உச்சநீதிமன்றம் அனுமதி அளித்தது. இம்மாதிரி அனுமதி அளிக்கப்பட்டிருப்பது நாட்டிலேயே இதுதான் முதல் முறையாகும்.

 

பொதுவாக மருத்துவ கருச்சிதைவு டவுன்ஸ் சிண்ட்ரோம் கண்டுபிடிக்கப்பட்ட கருக்களுக்கு இருபது வாரங்கள் அனுமதிக்கப்பட்டு உள்ளது. இருப்பினும் இரட்டைக் குழந்தைகள் என்பதால் சிக்கல் ஏற்பட்டது.

 

இப்போது 25வாரங்களைத் தாண்டிய கர்ப்பத்துடன் உள்ள இவருக்கு, உச்சநீதிமன்றத்தில் வழி பிறந்திருக்கிறது.

 

கருச்சிதைவு என்பதே தாய்மைக்குத் துயரம்தான். அதையே வேண்டிக் கோரிப்பெறும் அளவுக்கு துயரமானது டவுன்ஸ் சிண்ட்ரோம் என்கிற மரபணுக் கோளாறு.

 



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...