???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 சரோஜ்கான் - நடன ராணி! 0 தந்தை மகன் மரணம்: இன்ஸ்பெக்டர் உள்பட 3 பேருக்கு 15 நாள் நீதிமன்ற காவல் 0 இளம் வழக்கறிஞர்களுக்கு 2 ஆண்டுகளுக்கு ரூ.3 ஆயிரம் மாத உதவித் தொகை 0 உலகம் அழியப்போகல.. அழிச்சுக்கிட்டு இருக்கோம்: அறந்தாங்கி சிறுமியின் கொடூர சம்பவம் குறித்து ஹர்பஜன் 0 வன்கொடுமை செய்து படுகொலை: அறந்தாங்கி சிறுமி குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிதியுதவி 0 மேலும் 2 அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுக்கு கொரோனா தொற்று! 0 கழிவுநீர் தொட்டியில் விஷவாயு தாக்கி 4 பேர் பரிதாப மரணம்! 0 என்ஜினீயரிங் கல்லூரிகளில் வகுப்புகள் ஆகஸ்டு 16-ந்தேதி தொடங்கலாம்: ஏ.ஐ.சி.டி.இ. 0 தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 1 லட்சத்தை நெருங்குகிறது! 0 பொதுத்தேர்வு குறித்து ஊடகங்களுக்குப் பேட்டியளித்த ஆசிரியர்கள் மீது பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை 0 இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 6 லட்சத்தை கடந்தது! 0 அரசாங்கத்தை விமர்சிப்பதிலிருந்து தன்னை எதுவும் தடுக்காது: பிரியங்கா காந்தி 0 தொடரும் என்.எல்.சி விபத்து: பாய்லர் வெடித்து 8 பேர் உயிரிழப்பு 0 தமிழகத்தில் ஜூலை மாத ஞாயிற்றுக்கிழமைகளில் டாஸ்மாக் கடைகள் இயங்காது 0 சாத்தான்குளம் வழக்கில் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உள்பட நால்வர் கைது!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

சாவர்க்கர் ஒரு சுதந்திர போராட்ட வீரர்: அபிஷேக் சிங்வி புகழாரம்!

Posted : திங்கட்கிழமை,   அக்டோபர்   21 , 2019  23:30:10 IST

அக்டோபர் 21ல் வெளியிடப்பட்ட பாஜகவின் மகராஷ்டிர சட்டமன்றத்துக்கான தேர்தல் அறிக்கையில் ஹிந்துத்துவ கொள்கையாளர் விநாயக் தாமோதர் சாவர்கருக்கு பாரத ரத்னா விருது வழங்க மத்திய அரசை வலியுறுத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் சாவர்கருக்கு பாரத ரத்னா வழங்குவது குறித்த கோரிக்கையை பலமாக சாடிவருகின்றனர். மகாத்மா காந்தியின் மரணம் குறித்த வழக்கில் சாவர்க்கர் சம்மந்தப்பட்டிருந்ததை மேற்கோள்காட்டி காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் பாஜகவினரை விமர்சித்து வருகின்றனர்.

இந்நிலையில் ராஜ்யசபா எம்.பியும் காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தித்தொடர்பாளரும், மூத்த தலைவருமான அபிஷேக் சிங்வி இது தொடர்பாக ட்விட்டரில் கருத்து வெளியிட்டுள்ளார்.

சுதந்திர போராட்டத்தில் பங்கேற்ற சாவர்கர் ஒரு திறமையான மனிதர், பட்டியலின மக்களின் உரிமைகளுக்காக போராடி நாட்டுக்காக சிறை தண்டனை அனுபவித்தவர். தனிப்பட்ட முறையில் அவரின் கொள்கையை நான் பின்பற்றுவதில்லை, என்றாலும் அவரின் தியாகத்தை மறுப்பதற்கில்லை என்று அபிஷேக் சிங்வி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

மகாராஷ்டிர தேர்தல் பிரசாரத்தில் பங்கேற்றுப் பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ‘வீர சாவர்க்கர் கோழை’ என விமர்சித்தார். இதற்காக ராகுல் காந்தி மீது புனே காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.


 



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...